Header Ads



அரசாங்கத்தில் இருந்து வெளியேறியவர்களுக்கு நான் ஒரு விடயத்தை கூறுகிறேன் - மகிந்த எச்சரிக்கை

அரசாங்கத்தில் இருந்து விலகி சென்றவர்கள் பற்றி கோப்புகள் தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். எனினும் அவர்களுக்கு எதிராக தான் அவற்றை பயன்படுத்த போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அனுராதபுரம் - திருகோணமலைக்கு இடையில் நிர்மாணிக்கப்பட்ட ஏ-12 வீதியை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிபபிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கதவுகள் சலுன் கடை கதவுகளை போன்றது எவரும் வரலாம் எவரும் போகலாம். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பினர். ஆனால் நாம் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் அரசாங்கத்திலும் சுதந்திரம் இருக்கிறது. அனைவரும் அந்த சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறியவர்களுக்கு நான் ஒரு விடயத்தை கூறுகிறேன். அவர்கள் பற்றிய கோப்புகள் என்னிடம் உள்ளன. ஆனால் அவற்றை நான் பயன்படுத்த மாட்டேன். நான் அப்படியான நபர் அல்ல எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

1 comment:

  1. where he hide those files until now? it's means if the government site stupid do wrong, means that's right. time out for Mahinda drama,,, peoples want changes in the government.

    ReplyDelete

Powered by Blogger.