Header Ads



பிரதமராக ரணில் நியமிக்கப்படுவதை காண, மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்குகிறேன் - சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்று ஏற்பட வேண்டும் என்ற ஆசையினால் விருப்பமின்றியேனும் பொது ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்ததாக அந்த கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குருணாகலில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அல்லது நான் போட்டியிட வேண்டும் என்ற பெரும் விருப்பம் இருந்தது.

எனினும் கட்சியின் பொது தீர்மானத்திற்கு தலைவணங்கி அடுத்த ஆட்சியமைக்கும் புதிய அரசாங்கத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவதை காண்பதற்காக மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் சஜித் கூறியுள்ளார்.

தமது தனிப்பட்ட முடிவுக்கு அப்பால் கட்சியின் செயற்குழு எடுத்த முடிவை தாம் ஏற்றுக்கொள்வதாக கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்ääஜே ஆர் ஜெயவர்த்தனவை ஜனாதிபதியாக்க தமது தந்தை ரணசிங்க பிரேமதாஸ முன்னின்று செயற்பட்டதை நினைவுப்படுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக வேண்டும் ஆதரவாளர்கள் எதிர்ப்பார்த்தனர்.

எனினும் கட்சி தமது தனிப்பட்ட ஆயுதம் அல்ல என்ற அடிப்படையில் கட்சி எடுத்த தீர்மானத்தின்படி பொதுவேட்பாளருக்கு தாம் ஆதரவளிப்பதாக சஜித் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை அமைக்கும் குறிக்கோளை முன்கொண்டு செயற்படப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.