Header Ads



'மஹிந்த Vs மைத்திரி' சமர்

(நஜீப் பின் கபூர்)

ஜனாதிபதித் தேர்தல்!
வேட்பு மனு 2014 திசம்பர் 8ம் திகதி 
தேர்தலும் 2015 ஜனவரி 8ம் தகதி

ஜாதகக்காரர்கள் செய்த கணக்குப்படி 
தேர்தல் ஆணையாளர் போட்ட  
சட்டரீதியான குறிப்பில் இது
உறுதியாகி இருக்கின்றது.

யாரிந்து பொது வேட்பாளர்!
என்ற சஷ்பென்ஸ் முடிந்தது
திரையை கிழித்துக் கொண்டு 
வெளியே வந்தார் மனிதன் மைத்திரி.

வெள்ளி பின்னேரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் தனது சகாக்களுடன் ஊடங்கள் முன்தோன்றிய பொது வேட்பாளர் குறிப்பிட்ட கருத்துக்களுடன் நேரடியாக விவகாரத்துக்கு வரலாம் என்று தோன்றுகின்றது.

எனது அன்புக்குறிய மனiவியும் 
பிள்ளைகளும் என்னைப் 
பார்த்து இப்படிக் கூறினார்கள். 

தந்தையே
இந்த நாட்டின் மிகப் பெரிய கட்சியான சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி வகிக்ன்றீர்கள். அத்துடன் ஆளும் தரப்பில் முக்கிய அமைச்சராகவும் இருந்து வருகின்றீர்கள். நீங்கள் நிம்மதியின்றி கட்டிலில் யோசித்துக் கொண்டிருப்பதை நாங்கள் தினம்தோறும் பார்க்கின்றறோம். 

இந்த ராஜபக்ஷக்கள் உங்களைப் போன்ற ஒரு செல்வாக்கான மனிதனுக்கே இப்படித் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் இந்த நாட்டின் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்க முடியம் என்பது எங்களுக்குப் புரிகின்றது.

எனவே இந்த அராஜகத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். நீங்கள் தேச நலன் கருதி எடுக்கின்ற முடிவைத் துணிந்து எடுங்கள். இதனால் எங்களுக்கு தொல்லைகள் உயிராபத்துக்கள் கூட வரலாம். நாட்டு நலனுக்காக நாம் அதற்கு முகங் கொடுக்க எங்களைத் தயார் படுத்திக் கொண்டு விட்டோம். நீங்கள் உங்கள் தீர்மாத்தை எடுங்கள் வருகின்ற விளைவுகளை நாம் சந்திப்போம் என்று மனைவியும் பிள்ளைகளும் தன்னிடத்தில் கூறினார்கள் என்று ஊடகங்கள் முன் பேசும் போது பொது வேட்பாளர் மைத்திரி கண் களங்கினார்.

இதே போன்றே அமைச்சர் ராஜிதவும் எமது இந்த தீர்மானத்தால் மரணம் கூட நிகழலாம்  அப்படி இந்தப் போராட்டத்தில் என் உயிர் பறிக்கப்பட்டாலும் எனது சடலத்தின் மீதாவது சென்று நீங்கள் உங்கள் இலக்கை அடைய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன் என்றார் அமைச்சா ராஜித. 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க கூட தனக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பாக ஊடகங்கள் முன் கண்ணீர் சிந்தினார். அதற்காக வெட்கப்படுவதாவும், நான் இப்போது எனது தாய் வீட்டிற்கு வந்து விட்டேன் என்றும் அங்கு குறிப்பிட்டார்.  

இவை பொது அரங்கில் நடந்த கதை. எல்லோரும் நேரடியாகப் பார்த்த காட்சிகள். இனி மைத்திரி பொது வேட்பாளராக வந்த கதையைப் பார்ப்போம்.

சினிமாத் துறை. 
அதில் கட்டுரையாளனுக்குத்  
தனிப்பட்ட ரீதியில் பெரிய அளவில் 
ஆர்வம் கிடையாது.

சமூகத்தில் பெரும
எண்ணிக்கையானோர்
சினிமாவாலும் சின்னத்திரையாலும்
சிறைபிடிக்கப் பட்டிருக்கின்றனர்

இன்று சமூகத்தில் 
சினிமாவுக்கும் சின்னத்திரைக்கும் 
தனி இடம் இருந்து வருவதைப்
பார்க்க முடிகின்றது.

தமிழகத்தில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் 
நகத்திற்கும் சதைக்குமுள்ள  
இருக்கமான ஒரு உறவு முறை. 
நமது நாட்டில் அந்த நிலையில்லை. 

அந்த விவகாரம் அப்படி இருக்க எதிரணி பொது வேட்பாளரைக் காணவில்லை! என்று ஆளும்தரப்பு எதிரணியை நையாண்டி பண்ணிக் கொண்டிருந்தது. ஜனாதிபதி ராஜபக்ஷ கூட நான் தனியே கோதவில் நின்று கொண்டிருக்கின்றறேன் என்று பேசி இருந்தார். 

நாடு ஆளைத் தேடி அழைகின்றது என்ற கதை வெள்ளி வரை பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. பொது வேட்பாளர் விடயத்தில் ஆளும் தரப்பினர் எதிரணியை கிண்டல் பண்ணிக் கொண்டிருக்க அவர்கள் முகாமிலிருந்தே பொது வேட்பாளர் அதிரடியாக வெளியே வந்தார்.

தலைப்புக்கும் சினிமாவுக்கும் என்ன உறவு என்று நீங்கள் கேட்கக் கூடும் அதற்கும் விளக்கம் சொல்லித்தானே ஆகவேண்டும்.

கதை இதுதான்.!
பல தமிழ் சினிமாப் படங்களில் தாலி கட்டும் முகூர்த்த நேரத்தில் மாப்பளை அல்லது மணமகள் காணாமல் போய் இருப்பார். கடைசி நிமிடத்தில் அவர் அதிரடியாக களரியில் வந்து நிற்பது போல்தான் இந்த முறை, எதிரணி பொது வேட்பாளரை நாடு தேடிக் கொண்டிருந்த வேளை ஆளைப்போய் எடுத்து வந்து ஹீரோவாக  அரங்கில் அமர்த்தினார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ. எனவே மேற் சொன்ன  கல்யாண மேடை ஸ்டைலில்தான் இந்த முறை எதிரணிசார்பில் மைதிரி பொது வேட்பாளர் அரங்கிற்கு வந்து நின்றார். 

இலங்கை அரசியல் வரலாற்றில் என்றுமில்லாதவாறு பொது வேட்பாளர் ஏன் தலை மறைவாக இருந்து வந்தார் என்ற கேள்வி எழுகின்றது. ராஜபக்ஷவுக்கு எதிராக பொது வேட்பாளர் சந்திரிகா, மைத்திரி, சோபித, ரணில், கரு, அர்ஜூன, ரத்னசிரி. சரத் என் சில்வா, என்ற நீண்ட பட்டியலே உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. 

மைத்திரிதான் வேட்பாளர் என்று முடிவாகி இருந்த நிலையிலும், இன்னும் வேட்பாளர் தெரிவாகவில்லை என்ற மாயை எதிரணியின் நல்லதொரு இராஜதந்திர முன்னேற்பாடாக இருந்தது. ஆனால் எதிரணிக் கோட்டைக்குள் சிலர் ராஜபக்ஷவுக்காக உளவு பார்த்தும் வந்தார்கள். 

மறைத்து வைக்கப்பட்டிருக்கின்ற பொது வேடபாளர் யார் என்ற விடயத்தில் ஆளும் எதிரணி  இரண்டாம் மூன்ற மட்டத் தலைவர்கள் மத்தியில் புரிந்துணர்வின்றி அவர்கள் வேட்பாளர் விடயத்தில் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருந்தாலும் ராஜபக்ஷக்கள் பொது வேட்பாளர் விவகாரத்தில் ஓரிரு தினங்களுக்கு முன் தகவல்கள் அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்பது எமக்குக் கிடைத்த தகவல் கூறுகின்றது.

கடந்த வாரம் நமது வார ஏட்டில் இப்படி ஒரு குறிப்பைக்  கட்டுரையில் பதிவு செய்திருந்தோம். எனவே மைதிரி பற்றிய தகவல் எமக்கு கடந்த வாரமே தெரிந்திருந்த விவகாரம். நாம் அறிந்த வரை இப்படி ஒரு குறிப்பை எந்த ஒரு ஊடகமும் பதிந்திருந்தது நமது கண்ணில் கடந்த வாரம் பட வில்லை. அந்த எமது குறிப்பை மீண்டும் ஒரு முறை இங்கு வாசர்களுக்கு நினைவூட்டுகின்றோன். 

ராஜபக்ஷவுடன் கோதாவுக்கு வருவது தொடர்பாக சந்திரிகா, சிரிசேன, சோபித, அர்ஜூன, கரு போன்றவர்களின் பெயர்கள் தற்போது உச்சிரிக்கபட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே சந்திரிக்க போன்ற ஒரு செல்வாக்கான வேட்பாளர் களத்தில் குதித்தால் மட்டுமே இந்தத் தேர்தலில் வலுவான ராஜபக்ஷாவுக்கு சவால் விடுக்க முடியும். 

'சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிரிசேனாவின் பெயரும் இந்த பொது வேட்பாளர் தொடர்பாக தற்போது பேசப்பட்டு வருகின்றது. எனவே இந்த கதை யதார்த்தமானால் சந்திரிகா பண்டாரநாயக்க பொது வேட்பாளராக வருவதை  விட இது ராஜபக்ஷக்களுக்கு பேரதிர்ச்சியான செய்தியாக அது அமைய முடியும்' 

மைத்திரி எப்படி பொது வேட்பாளராக உறுதியானர் என்பதை இப்போது பார்ப்போம். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் ஆளும் தரப்பிலுள்ள சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் நெருக்கமான ஒரு உறவு அவர் பதவியில் இல்லாத போதும் இருந்து வந்தது. 

அவர்கள் ராஜக்ஷவின் செயல்பாடுகள் - கட்சிக்காரர்களை அவர்கள் ஓரம் கட்டி வருவது பற்றி அவ்வப்போது தமது மனக் குமுறல்களைக் அவர்கள் கொட்டிக் கொண்டு வந்ததுடன், ராஜபக்ஷக்களின் கண்களுக்கு மண்ணைத் தூவிவிட்டு அடிக்கடி உள்நாட்டிலும் வெளிநாட்லும் அவர்கள் சந்திரிக்காவை சந்தித்து வந்தார்கள்.

இந்தச் சந்திப்புக்கள் கடந்த இரு வருடங்களாக மிகவும் அதிகமாக நடந்து கொண்டிந்தது. இதனை உளவுத்துறை சரியாக இனம் கண்டுகொள்ள வில்லை என்ற விடயத்தில் தற்போது ராஜபக்ஷக்கள் அவர்கள் மீது சீறிப் பாய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதனம் மூலம் தனது கட்சிக்காரர்களின் உணர்வுகளைச் சந்திரிக்காவுக்கு நாடிபிடிக்க முடிந்தது. இந்தப் பின்னணியில் ஜனாதிபதித் தேர்தல் உறுதி என்பதும் தெரிந்தது. ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் தன்னை ஐ.தே.க. வேட்பாளராக தன்னிச்சையாக அறிவிப்புச் செய்திருந்தார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தனது வேட்பாளர் தொடர்பாக நெடு நாள் பணிப்போர் நடந்து கொண்டிருந்தது.

சஜித்தைப் பிரதித் தலைவராக கொண்டு வந்த விடயத்தில் ஒரு தரப்பு அவருக்கு கட்சியின் இரண்டாம் மட்ட நிலை வருவதை அவர்கள் விரும்பவில்லை. தனது கட்சி வேட்பாளர் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முறுகல் நிலை இருந்தது. இந்தப் பின்னணியில் பலயீயமான ரணிலை களத்தில் இறக்குவதற்கு அந்தக் கட்சிக்குள்ளும் எதிரணிக் கட்சிக் கட்சிகளிடையேயும் ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை.

இதற்கிடையே பொது வேட்பாளர் விடயத்தில் கரு ஜெயசூரிய குழப்பத்தை உண்டு பண்ணுகின்றார் என்ற தகவல்  சந்திரி;காவுக்கு கிடைக்க, இந்த விடயத்தில் குழப்பதைத் உண்டு பண்ணிக் காரியத்தைக் கெடுக்க வேண்டாம் என்று சந்திரிக்க தனக்கு நெருக்கமான மனோ தித்தவெல ஊடாக கருவுக்கு எச்சரிக்கை செய்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொது வேட்பாளராகும் எண்ணம் கருக்கு இருந்தது என்பது தெரிந்ததே.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியை ஒமித்;தே ஆகவேண்டும்  என்று நோக்கில் நாட்டில் சோபித தேரர் கட்டி எழுப்பி  இருந்த வெகுஜன அபிப்பிராயம். மற்றம் ஜேவிபி ராஜபக்ஷக்களுக்கு கொடுத்து வந்த நெருக்குதல்கள் ஒரு ஆட்சி மாற்த்திற்கு வாய்ப்பு இருக்கின்றது என்ற நம்பிக்கையைக் உள்நாட்டில் கொடுத்திருந்தது. மேலும் தென், மேல், ஊவா மகாணங்களில் நடந்த தேர்தல்கள் இனியும் ராஜபக்ஷ  வண்டி இழுக்காது என்று நாட்டில் ஒரு எண்ணக்கரு தோன்றியது.

இந்தப் பின்னணிகளை வைத்து சந்திரிக்க இது விடயத்தில் நேரடியாக களத்தில் இறங்கினார். சுதந்திரக் கட்சி முக்கிஸ்தார்கள் குறிப்பாக மைத்திபல சிரிசேனவின் சம்மதத்தை பொது வேட்பாளர் விடயத்தில் நேரடியாகப் பெற்றுக் கொண்டார். பின்னர்  சந்திரிக்க அவருக்கு ஏற்றவாறு களத்தை சமைக்கும் வேலையில் இறங்கினார். ரணில் சோபித தேரர் ஆகியோருடன் நேரடியாக தொடர்பு கொண்டார். 

சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் மைத்திரிபால சிரிசேனாவை ரணில்  விக்ரமசிங்ஹ பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்ள வேண்டும்  விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமான பதில் கிடைக்க, இந்த விடயத்தில் முக்கிய பாத்திரமாக செயலாற்றுகின்ற மாதுவாவே சோபித தேரர்முன்  ரணிலின் உறுதி மொழியையும் சந்திரிக்க பெற்றக் கொண்டர்.

இந்தத் தகவல்களை அறிந்த ஜனாதிபதி  மைத்திரிபாலவுக்கு கடைசி நேரத்தில் பிரதமர் பதவியை வழங்க முன் வந்தபோதும் அவர் அதனை நிராகரித்து விட்டார். ராஜபக்ஷக்களுக்கு எதிராக சந்திரிக்கதான் காய்நகர்த்துகின்றார் என்பதனை அறிந்து கொண்ட ஜனாதிபதி, கோட்டபே ராஜபக்ஷவுடன் மிகவும் நெருக்கமான மனோ தித்தவெல ஊடாக சந்திரிக்காவை நெருங்கி ஒரு உடன்பாட்டை செய்து கொள்ள முனைந்திருக்கின்றார்கள். சந்திரிக்க எந்த விட்டுக் கொடுப்புக்களுக்கும் தயாரில்லை  என்ற நிலை தெரிந்தது.

பெரும் எண்ணிக்கையான அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நலன் பேணும் அமைப்பு என்ற ஒன்றைத் தோற்றுவித்து அவர்கள் மைத்திரிபால சிரிசேன தலைமையில் பாராளுமன்றத்தில் தனிக் குழுவாக செயலாற்றவும் தற்போது ஏற்பாடுகள்.

எதிரணி பொது வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி, மைத்திரிபால தலைமையிலான சுதந்திரக் கட்சி நலன்போணும் குழு, ஜேவிபி, த.தே.கூ, மு.கா, (கதை அப்படியானால் மு.கா.தலைமை தனிப்பட்ட ரீதியில் ராஜபக்சாவுக்குக் கொடுத்த வாக்குறுதி?) ஜதிக ஹெல உறுமய,  பொன்சேக்காவின் ஜனநாயக் கட்சி, இ.ச.ச.கட்சி (பெரும்பான்ம) இ.க.கட்சி (பெரும்பான்ம) ஜனநாய மக்கள் முன்னணி, தொழிற் சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், இன்னும் பல சில்லறைகளும் பொது வேட்பாளரை ஆதரிக்க உறுதியளித்திருக்கின்றன.

ஹெல உறுமயவின் குறிப்பாக அதுருலியே ரத்னதேரர் துணிச்சல் பொது வேட்பாளர் விடயத்தில் மக்கள் மத்தியில் தெம்பையும் நம்பிக்கையும் ஏற்படக் காரணமாக இருந்து என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பொது வேட்பளர் விடயத்தில் ரணில் எடுத்த நிலைபாடு தற்போது மக்கள் மத்தியில் வெகுவாகப் பாதிக்கபட்டிருந்த அவருடைய இமேஜ் திடீரென்று உயர்த்தி இருக்கின்றது.

இவர்கள் என்னதான் கூட்டப் போட்டு ஆளைக் கேதாவுக்கு கொண்டு வந்து நிறுத்தினாலும் ஜேவிபி இந்த பொது வேட்பாளர் விடயத்தில் எடுக்கின்ற தீர்மானமே பொது வேட்பளரின் வெற்றியைத் - தலைவிதியை தீர்மானிக்கும் காரணியக இருக்கும்.  

எமக்குக் கிடைகின்ற புதிய  தகவல்களின் படி ஜேவிபி அரங்குக்கு ஹீரோக்களாக வர இருக்கின்றார்கள். அதற்கான பேச்சு வார்த்தைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. எனவே பொது வேட்பாளர் விடயத்தில் ஜேவிபியுடன் ஒரு இணக்கப் பாட்டை அடைந்து கொள்ள வேண்டிய தேவை தற்போது மைதிரிக்கு ஏட்பட்டிருக்கின்றது.

தற்போது பொது வேட்பாரை ஆதரிக்க வரும் எவரும் தனிப்பட்ட நிகழ்சி நிரல்களையோ கோரிக்கைகளையே தூக்கிக் கொண்டு வரக் கூடாது என்று அதன் ஏற்பாட்டாளர் சோபித தேரர் த.தே.கூட்டமைப்பிற்கும், மு.கா.வுக்கும் சிவப்புக் கொடி காட்டி இருக்கின்றார். அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் கூறப்படுகின்றது.

இதற்கிடையில் மஹிந்த ராஜபக்ஷ தன்னை விட்டு விலகிச் சென்றிருக்கும் அமைச்சர்கள் உறுப்பினர்கள் மீது உடனடியாக நடவடிக்கைகளை எடுத்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பதவிகளையும் பறித்திருக்கின்றார். 

மைத்திரி வகித்த சுதந்திரக் கட்சியில் செயலாளர் பதவிக்கு தற்காலிகமாக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா நியமிக்கப்பட்டு இருக்கின்றார் என்று தெரின்றது. அதேபோன்று பிரதமர் பதவிக்கு நிமல் சிரிபால சில்வா, எஸ்பி போன்றவர்களின் பெயரும் உச்சரிக்கப் பட்டிருக்கின்றது என்றும் தெரிகின்றது. என்றாலும் ராஜபக்ஷ விசுவாசிகள் இந்த பதவிக்கு தற்போது பசிலை அல்லது கேட்டாவை நியமிக்குமாறு கோரி இருக்கின்றார்கள் என்றும் சொல்லப்படுகின்றது, 

No comments

Powered by Blogger.