''மைத்திரி'' நீரோட்டத்தில் குதித்து, முஸ்லிம் காங்கிரஸ் சேற்றைக் கழுவுமா..?
(நஜீப் பின் கபூர்)
முஸ்லிம் சமூகத்திற்கு எச்சரிக்கை!
நாளை நடைபெறும் மு.கா.அரசியல்
உயர் பீடத்தின் கவனத்திற்கு!
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் சூழ்நிலை தொடர்பாக சமூகத்துடன் சில கருத்துக்களைப் பறிமாறிக் கொள்ள வேண்டும் என்று மனதில் ஒரு எண்ணம்.
உலமா சபைகள்
சூரா கவுன்சில்கள்
அரசியல் கட்சிகள் என்றெல்லாம்
டசின் கணக்கில் சமைத்து
சேனைகளை வைத்திருக்கின்ற நமது முஸ்லிம் சமூகத்திற்கு என்ன தான் அச்சம் பயம்?
நாட்டில் என்ன மாற்றங்கள் நடந்தால்தான் நமக்கென்ன தடிபிடிப்பவர்கள் எவர் வேண்டுமானாலும் வேட்டையாடிக் கொள்ளட்டுமே என்ற நிலை. சமூகத்தைப் பற்றி சிந்திக்காமல் கதைக்காமல் பேசாமல் வாழ்கையை ஓட்டலாம்.
இன்னும் ஒரு கூட்டம் சரிக்கும் பிழைக்கு ஆமா சாமி போட்டு தலைவர்கள் என்போர் கொடுக்கின்ற எச்சில்களை சுவைத்து நன்றியுள்ள ... போல் வாழ்ந்து விட்டும் போகலாம். அச்சம் பயம் காரணமாக புத்திஜீகள் கூட அடக்கியும் ஒடிக்கியும் வாசிக்கவும் முடியும் வாய் மூடி நின்று கொள்ளவும் முடியம்.
சுதந்திரத்திற்குப் பின் என்றுமில்லாதவாறு சமூகங்கள் நெருக்கடிகளுக்கு இன்று ஆளாகி இருக்கின்றது. பௌத்தத்தைக் காக்க அரசும், அடியாட்களும் காவலுக்கு நிற்கின்றார்கள். தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாப்புத் தொடர்பாக அண்மைக் காலம் வரை ஆயுதப் படைகளையும் அவர்கள் வைத்திருந்தார்கள்.
அவர்கள் படை தற்போது தோற்கடிக்கப்பட்டாலும் அந்த மக்களின் அரசியல் தலைவர்களிடம் தமது சமூகம் தொடர்பான தெளிவான சிந்தனை தூரநோக்குப் பார்வை இருந்து வருகின்றது. சர்வதேச சமூகம் அவர்களுக்காக குரல் கொடுக்கின்ற பின் புலத்தை அவர்கள் தற்போது தோற்றுவித்து, தமக்கு ஒரு கவசத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்திய வம்சவழி மக்கள் கூட தொழிற் சங்க ரீதியில் தமக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். பக்கத்திலுள்ள பலமான இந்தியா கூட அவர்களின் நலன்களில் அக்கரையுடன் இருந்து வருகின்றது.
தீர்க்கமான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டிய ஒரு கட்டத்தில் முஸ்லிம் சமூகமும் இன்று இருந்து வருகின்றது. அரசியல் ரீதியில் இந்த முடிவுகளை எடுப்பது யார்?
அப்படியான முடிவுகளை எடுப்பதற்கு பொறுத்தமான அரசியல் அமைப்புக்கள் தலைமைகள் முஸ்லிம்கள் மத்தியில் இருக்கின்றதா? என்பதனையும் சமூகம் ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தேசிய கட்சிகளுடாக அரசியல் பண்ணுகின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு தேசியம் பற்றிப்பேச முடியுமே தவிர முஸ்லிம்கள் பற்றி பேச முடியாது!
அடுத்த தேர்தலில் எப்படித் ஆசனம், பாரளுமன்ற பிரவேசம் என்பது தான் அவர்களின் எண்ணம் சிந்தiனைகள் எல்லாம். அடுத்த தேசிய பட்டியலி நுழைவுக்காக எப்படி எல்லாம் துள்ளிக் குதித்து நாடாளுமன்றத்தில் நம்மவர்கள் நடந்து கொள்வதை தொலைக் காட்சிகளில் பார்க்கும் போது கண்களை மூடிக் கொள்ள வேண்டும்போல் தோன்றுகின்றது.
நமது உரிமைகளை வென்றெடுக்க வென்று மா மனிதன் அஸ்ரஃப் எடுத்து வந்த மரம் நல்ல காய்களையும் கனிகளையும் தந்து கொண்டிருந்த நேரம்! மரத்துக்குச் சொந்தக்காரன் சாய்க்கப்படுகின்றான்.
பதவி வந்து சேராவிட்டால் கட்சியைத் தகர்த்துக் கொண்டு வெளியே பாய்வேன் என்றவர்களுக்கு அது போய்ச் சேர்ந்ததாக எனக்கு ஞாபகம்...!
ஆணிவேருடன் ஒத்துப் போக முடியாது என்று நியாயம் காட்டி பக்கத்து வேர்கள் தனி மரமாய் முளைத்து, இன்று தனிக் குடித்தனம். அக்கரையிலும் இக்கரையிலும் சிற்றரசுகள் தோன்றி அஸ்ரஃப் பேரசு இடிபட்டு நிற்கின்றது இன்று.
இந்த நிலையிலும் மரத்தைத்
தூக்கிபிடித்துக் கொண்டு ஒரு குழு
அதற்கு தலைமை மத்திய குழு
தொண்டர்கள், ஆதரவாளர்கள்!
தேர்தல் சீசன் வந்தால்
அத்தி பூத்தால் போல்
கிளைகள் அமைப்போம்
அப்படிப் பண்ணுவோம் இப்படிப் பண்ணுவோம்
என்று பூச்சாண்டி காட்டி!
ஒரு சில நாட்கள் செல்ல
கிளைகள் கதையும் காலி!
எல்லாம் போலி என்பது
தொண்டர்கள்,ஆதரவாளர்களுக்குத்
தெரியவரும் இது அஸ்ரஃப் காலத்துக்குப்
பிந்திய மு.கா அவலநிலை!
தேர்தல் வந்தால் வேட்பாளர்களைத்
தேடிப்பிடிக்க ஊருக்குள் நுழையும் தலைவர்கள்
அவர் இவர் என்று பிடித்துப் பட்டியல்
போட்டு சமூகம், உரிமை என்று
தமக்கு சம்பந்தமில்லாத கதைகளை பேச
தலைவர்கள் வருகின்ற போது பின்னால் போக
அப்பாவிகள், வேட்பாளர் உறவுகள் என்று சிலரும் இருப்பார்கள்.
தேர்தல் முடிய விருப்பு வாக்குக் கொள்ளை ஒப்பாரி துவங்கும்!
மு.கா.வை வியாபாரத்தக்கான வாய்க்காலாக பாவிப்பவர்கள்
இது பற்றி சிந்திக்க மாட்டார்கள் பேச மாட்hர்கள்!
அமைப்பு-கொள்கை ரீதியில் மரம் வளர்ந்தால்
தமது அரசில் இருப்பு கேள்விக் குறியாகும்!
எனவேதான் கையாட்கள் அடியாட்கள் உறவுகளையும்
ஏமாளிகள் தனிமனித விசுவாசிகள் என்று கொஞ்சம் பேரை
சூளவைத்து அஸரஃபின் கனவுகளை இவர்கள்
தகர்த்துக் கொண்டிருக்கின்றார் ஏதாவது ஓரிடத்தில்
மு.கா. வின் தன்னலப் போக்கை தகர்த்தெரிய
ஒரு படையணி மு.காவுக்குள் கருவுற வேண்டும்
பூனைக்கு மணி கட்டுவது யார்
எப்போது? எப்படி? என்ற சிந்தனைக்கு...!
இவை பற்றி உணர்வுபூர்வமாக
மு.கா.சிந்திக்கின்றதா பேசுகின்றதா?
போராளிகள் தொண்டர்கள் தமது
மனச் சாட்சியைத் தொட்டுக் கேட்க வேண்டும்.
கரையோர மாவட்டம் மூன்று
ஜனாதிபதிகளிடம் ஏமாந்தோம்
கோழைகளானாதால் 18 க்கு
கைதூக்கி இன்று பாவமன்னிப்பு!
அலுத்கம பேருவளை சம்பவத்தில் தி.மு.பொய்யுரைத்த போதும்
அஸ்ரஃப் பெற்றெடுத்த மு.கா.வை தி.மு.தட்டிப் பறித்த போதும்
ஊமைகளாக வாயடைத்து நின்ற நீங்கள் இப்போது
மைத்திரி நீரோட்டத்தில் நீராடி சேற்றைப் போக்கி
புது மனிதர்களாய் அரசியல் வியபாரத்திக்கு வருவீர்கள்
என்பது மட்டும் எங்களுக்கு நன்றாகத் தெரிகின்றது
எனவே சமூகத்தின் பேரால் நீங்கள் மீண்டும்
வியாபாரம் பண்ண புதுப் பாதை திறந்திருக்கின்றது!
நீங்கள் முஸ்லிம் சமூகத்தின் முதுகில் ஏறி மீண்டும்
பயணிக்கும் போது சமூகம் நீங்கள் கடந்து வந்த பாதை
பற்றியும் ஒரு முறை எட்டிப்பாக்க வேண்டும் என்று
நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
.jpg)
Post a Comment