Header Ads



அநுரகுமார திஸாநாயக்க என்ன சொல்ல வருகிறார்..?

ஜனநாயக வியூகத்தை விரிவாக்குவதற்கு இணங்குகின்ற வேட்பாளருடன் இணைந்து, அதனை நிறைவேற்றுவதற்கான மக்கள் செயற்பாட்டில் இணைந்துகொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

எவர் குறித்தும் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதில்லை என அந்தக் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இன்று குறிப்பிட்டார்.

யார் ஜனாதிபதியானாலும் பாராளுமன்ற தேர்தலொன்று விரைவில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. எனவே பாராளுமன்றத்தில் ஜனநாயகத்திற்காக முன்நிற்கின்ற சக்தியோடு பாராளுமன்றம் நிரப்பப்பட வேண்டும். எவர் தொடர்பிலும் நாம் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதில்லை. யார் ஜனாதிபதியானாலும் அதன் பிரதான பங்காக நாம் இல்லை. இந்த சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்புவோம். யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து மக்கள் தீர்மானிப்பார்கள். ஆனால் ஜனநாயகத்தை விரிவாக்குவதற்கு இணக்கப்பாட்டிற்கு வருகின்ற வேட்பாளர் வெற்றிபெருவாராக இருந்தால் அவருடன் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக மக்கள் செயற்பாட்டுன் நாம் இணைந்துகொள்வோம். அதற்காக எந்தவொரு வேட்பாளரையும் வெற்றுிபெறச் செய்வதான ஒரே மேடைச் செயற்பாடுகளுக்க நாம் தயார் இல்லை. எம்மிடம் எந்தக் கோரிக்கைகளும் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேர்தலின் போது மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கின்றனர். தேர்தலோடு அதை விட்டுவிடாமல், அதனை நிறைவேற்றிக்கொள்வதற்காக மக்களோடு செயற்படுவது தான் எமது எதிர்பார்ப்பு. இதை செய்தால் இவ்வாறு செய்வோம் என்று யாருக்கும் நாம் கூறுவதற்கு நாம் எதிர்பார்ப்பதில்லை.

பிரதமர் பதவி குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரிடம்  இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அவர் தான் பிரதமர், இவர் தான் பிரதமர் என்று யாரும் தீர்மானிக்க முடியாது. பிரதமரை தீர்மானிப்பது பாராளுமன்றத்தின் பெரும்பான்மை. நாம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவது எவ்வாறு. ஏதேனும் ஒரு கட்சிக்கு, யாரேனும் ஒருவருக்கு மக்கள் வாக்களித்திருந்தால், அல்லது வேறு ஒரு குழுவை இணைத்துக்கொள்ள முடிந்தால் அவருக்கு பிரதமர் பதவியைப் பெற்றுக்கொள்ள முடியும். நாம் ஜனாதிபதி தேர்தலுக்கு எமது வேட்பாளர் ஒருவரை முன்நிறுத்துவதில்லை.

No comments

Powered by Blogger.