Header Ads



மைத்திரிபாலவின் கோரிக்கை ''வயதுபோன காலத்தில், வாய்க்கு புளிப்பு தேவைப்படுவது போல''

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்  சிறு ஏற்றுமதி பயிர்கள் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே கருத்து தெரிவிக்கையில்,  எதிரணியினரின் பொது வேட்பாளர் தெரிவானது வெளித்தோற்றத்தில் மட்டுமே மைத்ரிபாலவின் முகம். ஆனால் அதன் பின்புறம் இருந்து அவரை முழுவதுமாக இயக்குவது சர்வதேச நாடுகள் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக நீண்டகாலமாக பதவி வகித்து வந்த மைத்திரிபால. இத்தனை வருடங்களுக்குப் பின்னர் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிக்க வேண்டுமெனக் கேட்பது வயதுபோன காலத்தில் வாய்க்கு புளிப்பு தேவைப்படுவது போல உள்ளது எனவும் அவர் கூறினார்.

ஒருவருக்கு எவ்வளவு தான் பிரச்சினையிருந்தாலும் இன்னொருவரின் கழுத்தை பிடித்து தொங்குவதென்பது சாதாரணமாகாது. சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க முற்படக்கூடாது. எதிரிகளுக்கு இலாபம் கிட்டாத வகையில் நாம் நமது ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முனைய வேண்டும். தேர்தலில் வாக்களிக்க முன்னர் நாம் மீண்டும் பிரிவினைவாதத் திற்கும் பயங்கரவாதத்திற்கும் நாட்டை எடுத்துச் செல்கின்றோமாவென உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்களெனவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.