Header Ads



எகிப்து அஸ்ஹர் பல்கலைக்கு ரிசாத் பதியுதீன் விஜயம்

-ஏ.எச்.எம்.பூமுதீன்-

எதிப்துக்கு விஜயம் செய்துள்ள அ.இம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ,உலகில் இஸ்லாமிய கல்விக்கு பிரபல்யம் பெற்ற அல் - அஸ்ஹர் பல்கலைகழகத்திற்கு நேற்று சனிக்கிழமை (22) விஜயம் செய்தார்.

அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இலங்கையிலிருந்து புலமைப்பரிசில் பெற்றுச் னெ;றுள்ள மாணவர்களுடன் அமைச்சர் இதன்போது பல மணிநேரம் கலந்துரையாடினார்.

மாணவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் இலங்கை மாணவர் ஒன்றிய வங்கிக் கணக்கிற்கு உதவித் தொகை ஒன்றையும் கையளித்தார். குறித்த உதவித் தொகையை அமைச்சருடன் சென்றிருந்த எகிப்துக்கான இலங்கை தூதுவரிடம் அமைச்சர் கையளித்தார்.

மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது குறித்த மாணவர்கள் கேட்டுக் கொண்ட, மாணவர் ஒன்றியத்திற்கான அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் அமைச்சர் எகிப்துக்கான இலங்கைத் தூதுவருடன் கலந்துரையாடியதுடன் இந்த அலுவலகத்தை விரைவாக அமைத்துக் கொடுக்குமாறு தூதுவரை வேண்டிக்கொண்டார்.

இம் மாணவர்களுடான கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் இலங்கையிலிருந்து புலமைப்பரிசில் பெற்று இங்கு கல்வி பயிலும் மாணவர்களில் வறுமைக்குட்பட்ட மாணவர்கள் எவரும் இருப்பின் அவர்களுக்குரிய கல்வி ரீதியான உதவிகளை வழங்க தான் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

இங்கு மாணவர்களுடனான கலந்துiராயலின் போது அமைச்சர் தெரிவி;த்தது வருமாறு, மாணவர்களின் வறுமை என்பது கல்வியை விட்டும் அவர்களை தூரப்படுத்தி விடக் கூடாது. அகதியாக இன்னலுற்று வறுமையின் விழும்பில் இருந்த போதும் கூட தான் தனது உயர் கல்வியை விட்டுவிடாததே இன்று சமுகத்திற்கு சேவை புரியும் நல்ல நிலைக்கு என்னை இறைவன் ஆளாக்கினான்

ஒரே நாளில் 500 ஆசிரியர் நியமனம், பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புக்கள், 10, 000 வீடுகள் நிர்மானிப்பு என்பன எனது கனமான சமுகத்திற்கான சேவைகள் என்று குறிப்பிட்ட அமைச்சர் , இதற்கெல்லாம் அடிப்படை காராணமாக அமைந்தது எனது அடிமனதில் இருந்த சமுக உணர்வே ஆகும். இவ்வாறான ரீதியில் மாணவர்களாகிய நீங்களும் உங்களது பயணத்தை தொடர வேண்டும்.

இதனூடாக சமுத்திற்கு சேவையாற்றும் பங்காளர்களாக மாறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் இமாம் அக்பர் ஷூஹைல் அவர்களின் நைரோபி ஆலோசகரை அமைச்சர் சந்தித்து உரையாடினார்.

அமைச்சர் அவர்களுடான உரையாடலின் போது , அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு இலங்கையிலிருந்து வருகை தரும் மாணவர்களுக்கான புலமைப்பரிசிலை இரட்டிப்பாக்குமாறு கேட்டுக் கொண்டார்..

அத்துடன் மார்க்கக் கல்வியுடன் வைத்தியத்துறை , பொறியியல் துறை  விவசாயத் துறை மற்றும் நிர்வாகத்துறை  போன்றவற்றிலும் இலங்கை மாணவர்கள் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அமைச்சர் வேண்டிக் கொண்டார்.

இதனை அடுத்து , அஸ்ஹர் பல்கலை வளாகத்தை சுற்றி பார்வையிட்ட அமைச்சர், அங்கிருந்து ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றை கொண்ட ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளிவாசலுக்கும் விஜயம் செய்தார்.



No comments

Powered by Blogger.