Header Ads



பொதுபல சேனாவுக்கோ ஞானசாரருக்கோ பலம் கிடையாது - அரசின் சக்தியும் நிழலுமே உள்ளது - அமில தேரர்

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வெற்று தகர டப்பாவை போன்றது என ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் தொல் பொருள் ஆய்வு பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உட்பட அரசாங்கம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச தொடர்புகளை முன்னெடுத்து வரும் விதத்தை பார்க்கும் போது இதனை எம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

இலங்கையில் உள்ள பௌத்த பிக்குமார் தற்போதுள்ளதை விட அரசியல் மயமாக வேண்டும். மகிந்த தேரரின் இலங்கை வருகை கூட அரசியல் மயமானது.

அவருக்கு பின்னர் உருவாகிய சகல பிக்குமாரும் அரசியல் மயமானவர்கள்.

முழு சங்க சாசனமும் அரசியல் மயமானது. இலங்கையின் அரசியல் மேடைகளில் பிக்குமார் இல்லாததே பெரும் அனர்த்தமான நிலைமை.

நாட்டை அராஜக நிலைமைக்கு கொண்டு செல்லும் ஆட்சியாளர்களுக்கு பிக்குமார் அரசியலுக்குள் வராதது நன்மையாக மாறியுள்ளது.

இதனால், பிக்குமார் கட்டாயம் அரசியல்மயமாக வேண்டும். எதிர்காலத்தில் நான் இதனை விட தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.

அதேபோல் பொதுபல சேனா அமைப்பு பாரிய வலுவை கொண்ட அமைப்பு அல்ல. அந்த அமைப்பிற்கோ, ஞானசார தேரருக்கோ பலம் கிடையாது.

அவர்களின் பின்னால் அரசின் சக்தியும் நிழலுமே உள்ளது எனவும் தம்பர அமில தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.