Header Ads



அரசாங்கத்தை விமர்சித்த தேர்தல் ஆணையாளர், ஜனாதிபதிக்கு பயந்து பல்டியடித்தார்..?

(GTN)

தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தனது வழமையான கடமைக்கப்பால் ஊடகவியலாளராகவும் செயற்பட்ட சம்பவமொன்று கடந்த 18 ம் திகதி இடம்பெற்றுள்ளது.

சுவர்ணவாகினி தொலைக்காட்சி தேர்தல் வன்முறைகள் தொடர்பாக அவருடன் கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளது. அதன்போது தேசப்பிரிய அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.

குறிப்பிட்;ட பேட்டிவெளியாவதற்க்கு சற்று முன்னதாக சுவர்ணவாகினி தொலைக்காட்சி நிலையத்திற்க்கு முன் அறிவிப்பின்றி வந்த அவர் தன்னுடைய பேட்டியை தானே தணிக்கைக்குட்படுத்தியுள்ளார்.

அரசாங்கத்தை தான் விமர்சிக்கும் பகுதிகளை அவர் தீவிரமாக அவதானித்து அகற்றியதாகவும், பல மணிநேரம் குறிப்பிட்ட தொலைக்காட்சி அலுவலகத்திலேயே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்திடம் நற்பெயரை சம்பாதிப்பதற்கான வாய்ப்பிற்க்கு காத்திருக்கும் சுவர்ணவாகினி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்ட பேட்டி குறித்து தெரியப்படுத்தியதாகவும்,அவர் அசிங்கமான, தகாத வார்த்தைகளால் தேர்தல் ஆணையாளரை ஏசியதாகவும் தெரியவருகின்றது.

இதன் பின்னரே தேசப்பிரிய சுவர்ணவாகினிக்கு சென்று அங்கு ஊடகவியலாளர் பணியாற்றியுள்ளார்.

இதேவேளை தேர்தல் ஆணையாளர் கடந்த வாரம் பொலிஸ் மா அதிபருடன் மொனராகலயை சுற்றி பார்த்ததாகவும், அவ்வேளை நுவரேலியாவில் உள்ள ஜனாதிபதி இல்லத்தில் அவர் மகிந்தரை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.