Header Ads



ISIS யினால் அமெரிக்காவுக்கு கடும் பாதிப்பு - பெண்டகனில் முக்கிய ஆலோசனை

''வழக்கமான முஸ்லிம் அமைப்பிலிருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ்., முற்றிலும் வேறுபட்டு உள்ளது. இது போன்ற அமைப்பை, நாங்கள் பார்த்ததே இல்லை. இந்த கும்பலை ஒழிக்காவிட்டால், மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும்,'' என, அமெரிக்க ராணுவ அமைச்சர், சுக் ஹேஜெல் கூறினார்.

ஆலோசனை : 'பென்டகன்' எனப்படும், அமெரிக்க ராணுவ தலைமையகத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ்., வாதிகளை ஒடுக்குவது குறித்து, நேற்று முக்கிய ஆலோசனை நடைபெற்றது. அதில், சுக் ஹேஜெல் மேலும் பேசியதாவது: இந்த பயங்கரவாதிகளை ஒடுக்க, நாம் எதையும் செய்ய தயாராக வேண்டும். கடுமையான, உறுதியான நடவடிக்கை எடுக்க நாம் முன்வர வேண்டும். அவர்கள் தங்கள் கொள்கைகளை நிறைவேற்ற, நாம் அனுமதிக்கவே கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.

அமெரிக்க ராணுவ தளபதிகளின் தலைவர், ஜெனரல் மார்ட்டின் டெம்ப்சே கூறும் போது, ''அந்த பயங்கரவாதிகள் நாகரிகமானவர்கள் அல்ல; அவர்களிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் நமக்கு மட்டுமல்ல, இந்த உலகுக்கே ஆபத்தானவர்கள்,'' என்றார்.

இந்நிலையில், அமெரிக்காவில் செயல்படும் இஸ்லாமிய அமைப்புகள் பலவும், இந்த பயங்கரவாதிகளை கண்டித்துள்ளன.

அமெரிக்க இஸ்லாமிய உறவு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கைதிகளை கொல்லக் கூடாது என, ஜெனிவா மாநாட்டு தீர்மானம் தெரிவிக்கிறது. இஸ்லாமியர்களின் புனித நூலான, திருக்குரான் அதைத் தான் வலியுறுத்துகிறது. இஸ்லாம் பெயரில் இந்த பயங்கரவாதிகள் செய்து வரும் படுகொலைகள், இஸ்லாமிற்கும், அதன் கொள்கை களுக்கும் சற்றும் பொருத்தம் இல்லாதவை' என, தெரிவித்துள்ளது.

160 கோடி முஸ்லிம் : வட அமெரிக்க இஸ்லாமிய சமுதாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இஸ்லாமின் அடிப்படை கொள்கைகளில், வன் முறைக்கே இடமில்லை; உலகம் முழுவதும், 160 கோடி முஸ்லிம்கள் பின்பற்றும் இஸ்லாமிய கொள்கைகளுக்கும், இந்த பயங்கரவாதிகளின் செயல்களுக்கும், தொடர்பே கிடையாது' என, தெரிவித்துள்ளது. இது போல், பல நாடுகளின் முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம் தலைவர்களும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளை
கண்டித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.