Header Ads



''முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றுத் தவறு'' - ஹசன் அலி

18ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்தமை ஓர் பாரிய வரலாற்றுத் தவறாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

18ம் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்த போது அதற்கு ஆதரவளித்தமை கட்சி இழைத்த பாரிய தவறாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

18ம் திருத்தச் சட்டம்தொடர்பில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் போதியளவு தெளிவு இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் சில உறுப்பினர்கள் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பலவந்தப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

வேறு வழியின்றி சில உறுப்பினர்கள் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்தனர்என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில முக்கியமான தீர்மானங்களின் போது கட்சியின் சகல உறுப்பினர்களுடனும் கலந்தாலோசிக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணசபைத் தேர்தலில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்பது மக்களின் விருப்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் போது கட்சி மிகவும் நிதானமாக தீர்மானங்களை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். Gtn

6 comments:

  1. இன்னும் அதே தெளிவின்மை இருப்பதாக உணர்கின்றீர்களா? இன்னும் என்னென்ன நடக்க இருக்கின்றதோ தெரியவில்லையே. இனிமேலாவது முஸ்லிம்களுக்காக எதையாவது செய்வீர்களா? முஸ்லிம்காங்கிரஸ் இது வரைக்கும் மக்களுக்காக என்ன செய்துள்ளது என்பதையாவது ஒரு தடவை சிந்தித்து பார்பீர்களா? அது மட்டும் போதும் போலுள்ளதே>

    ReplyDelete
  2. வரலாற்றுத் தவறு ஒன்றா இரண்டா... இந்த தலைமையின் கீழ் நடந்துள்ளது..??? அது சரி.. நல்ல முடிவுகள் பற்றி கொஞ்சம் தெரிவியுங்களேன்.
    அரசாங்கம் எப்படியும் முஸ்லிம் காங்கிரசை துரத்தப் போகிறது என்பதை அறிந்தவுடன்.. தவறுகள் எல்லாம் வெளிவருகிறது. இந்த தவறுகளுக்கெல்லாம் 5, 6 வருடங்கள் அரச சுக போகம் அனுபவித்தது போதாதா..?
    பசீர் சேகுதாவுத் போன்ற எட்டப்பர்கள் இருக்கும் வரை... இவர்களின் கதை கேட்டு.. பயந்து நடக்கும் தலைமைத்துவம் இருக்கும் வரைக்கும்... முஸ்லிம்களின் அரசியல் வாழ்வில் தொடர்ந்தும் இதே சீரழிவுதான் நடந்து கொண்டு இருக்கும்.

    ReplyDelete
  3. கிழக்கு மாகாண சபை தேர்தலில் SLMC முன்வைத்த கோஷம் ......மஹிந்தயா...???பள்ளியா...?? மக்களோ.. பள்ளி என்றார்கள் .. ஆனால் வெத்திலை முஸ்லிம்கள் "' மஹிந்த "' என்றார்கள் ....இப்போது மஹிந்தயும் வேணும் பள்ளியும் வேணும் எண்டு இரட்டை இலையில் ஒன்று சேர்ந்து கேக்கினம்.....இந்த கிழக்கில்தான் ....முதலமைச்சர் ஊரில் உள்ள மூதூர் பாபேரி ம்யாஸ்ஜ்ட் அவருக்கே தெரியாமல் காணாமல் போயுள்ளது ....காற்றுக்கு பறந்த கதை ஒருபுறமிருக்க ......அப்படி ஒரு மஸ்ஜிதே அங்கே..இல்லடா...கண்ணு ...... என்று ஒன்று..கலீஃபா அபூபுக்கேர் அப்துல் மஜீத் பாக்தாத்ஜி சொல்கிறார் ...எப்படியோ இந்த இந்த பாக்தாதிகள் சால்வையின் கோவணத்துக்குள் நுழையப் போவது எப்படியோ உறுதியாகிவிட்டது .. "" ஜனாதிபதிக்கு நன்றி " என்று போஸ்டர் அடித்து இலங்கை பூராவும் ஒட்டி தங்களின் செஞ் சோற்றுக்கடனய் வெளிப்படுத்தியுள்ளார்கள் ....நழுவுற மீனுக்குள் ஒரு வலுவுற மீனாம்...இது

    ReplyDelete
  4. எப்போதும் இவர்களுக்கு வருவது காலம் கடந்த ஞானங்கள்

    ReplyDelete
  5. at least now you got it, oh what a brilliant you are, didn't you vote for this amendment ? you should be awarded "noble price for sacrificing you all to protect Muslim community" what a SLMC secretary you are, so how can we trust you and SLMC decisions in future ? is the decision to support for material benefits such as Ministries, etc .. ? no ? or for the sake of benefit and dignity of the Muslim community ? SLMC is now run by a group of robbers who rob Muslim votes and sell that to Major parties, they don't hesitate to sell their mothers and wifes for the Ministerial perks

    ReplyDelete
  6. சுட்டது சட்டி வந்தது புத்தி! (நடிப்பாகவுமிருக்கலாம்- நம்பிவிடாதீர்கள்!)

    ReplyDelete

Powered by Blogger.