Header Ads



அமைச்சர் பௌஸிக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

(அஸ்ரப் ஏ சமத்)

செரண்டிப ஹஜ் உம்ரா சங்கத்தின் என்.எம் ரவல்ஸ் முஹம்மத்  ஹஜ் கோட்டா விடயத்தில் அமைச்சர் பௌசியை  தனியார்    தொலைக்காட்சி, அல்லது வானொலியில்   பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றேன். 

தொலைக்காட்சிக்கோ, வானொலிக்குரிய விவதாம் நடாத்தும் நேரத்திற்கு பணம் செழுத்தவும்  செரண்டிப் ரவல்ஸ் தயாரக உள்ளது.  

உப தலைப்பு – எனது கைத் தொலைபேசியில் பதியப்பட்டுள்ள செய்தியை பகிரங்கமாக சோசியல் மீடியாக்களில் வெளியிட உள்ளேன்.  

அதாவது உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துபோது   எனக்கு அமைச்சர் பௌசியின் ஆதரவாளரும்  ஹஜ் ஒப்ரேட்டர் சங்கத்தின் தலைவரும் சேப்வே ஹஜ் முகவர் உரிமையாளருமான  பாருக்  எனது கைத்தொலைபேசி ஊடாக வேண்டிக் கொண்டது. ஒரு கோடி ருபா தருகின்றேன். இந்த வழக்கை உடன் வாபஸ் பெற்றுக்கொள் என்று கூறினார். அதனை ரெக்கோட் பண்ணியுள்ளேன். எனது ஏனைய ஒப்ரேட்டர்களுக்கும் திறந்த ஸ்பீக்கரில் அவர்களும் அதனை கேட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். 

ஆனால் நான் ஒருபோதும் பணத்திற்காக விலை போகவில்லை பாதிக்கப்ட்ட 9 ஹஜ் ஒபேரட்டர்களுககு நீதி நியாயம் வேண்டியே நீதிமன்றத்தை நாடினேன்.

நீதிமன்ற தீர்ப்பின்படி நீதி கிடைத்த போதிலும் அரசியல் நிற்பந்தத்தின்படி நீதி நியாயம் மறைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நாங்கள் மக்கள் மத்தியில் அனுதாபப்படுத்தப் படுகின்றார்கள் என்பது இடம்பெறக் கூடாது. என்பதற்காக பல எதிரிகளுடைய திட்டமிடப்பட்ட சதியினும் சூழ்ச்சியினாலும் எங்களை குற்றவாளிகள், சமுகவிரோதிகள் சமுகத்தினை காட்டிக் கொடுத்தவர்கள் என குற்றவாளியாக  இட்டுக்காட்டப்படவே பௌசியிடமிருந்து  81, அல்லது 75 என ஹஜ் கோட்டாக்களை பெற்ற  அடி வருடிகளும் சேர்ந்து எங்கள் மீது பல  நாடகங்களை சோடினை பண்னி எங்கள் மீது சேறு பூச  எத்தணிக்கின்றனர். இவை எதற்கும் நாங்கள் அடிபணியப் போவதில்லை.

இவ்வேளையில் எங்களுடைய நிலைப்பாட்டில் நாங்கள்  உறுதியாக உள்ளோம்.  எமது உண்மைகள், எங்களுக்கு நடந்த அநீதிகள் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பு  மறுக்கப்பட்டமை. அதன் பிறகு அரசியல் பலத்தை பாவித்து எங்களுக்கு கிடைத்த தீர்ப்பை சிரேஸ்ட அமைச்சர் உதாசீனம் செய்துள்ளமை. 
இவ் விடயங்கள் பற்றி அமைச்சர் பௌசி  செய்துள்ள பல மோசடிகள் பற்றி வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும்  அமைச்சர் பௌசியுடன் எந்த ஊடகங்களுக்கும் வந்து விவாதிக்க தயாராக இருக்கின்றோம்.

ஆகவே இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட சிரேஸ்ட அமைச்சர் பௌசி உட்பட தெளிவு வேண்டிய எவரும் முன்வாருங்கள். அதனை தைரியத்துடன் பகிரங்க ஊடக அறிக்கை வெளிப்படுத்த நாம் தயாராக உள்ளோம். என செரண்டிப் ஹஜ் உம்ரா முகவர்களது சங்கத்தின் தலைவர் என்.எம் ரவல்ஸ் முஹம்ம்த அறிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் எமது சங்கத்தில் 10 உறுப்பிணர்கள் மாத்திரம்தான் உள்ளனர் எனக் கூறியுள்ளார். எமது சங்கத்தில் 65 முகவர்கள் உள்ளனர். அதில் 10 பேரை தெரிபுசெய்து வழக்காடினோம்.

குபா ரவல்ஸ் உரிமையாளர் ஹூசைன் அவர்கள் எமது சங்கத்தில் இருந்தார். அவரை பணம் கொடுத்து வாங்கியுள்ளார். அவரே எமது வழக்கின் பிரதிவாதியாக கையெழுத்திட்ட ஒரு ஹஜ் ஒபேரேட்டர். 

3 comments:

  1. Shakkilik koottam pichi edukkurathu

    ReplyDelete
  2. Assalamu Alaikum....Dear Muslims, Whatever it is , we all know about the politicians, but how can these Haj groups can complaint about this issue to BBS !!!! they say it was an accidental meeting !!!
    What a shame !! All they want to is money, money , money, traitors shame on them. What a betrayal. --

    ReplyDelete
  3. மக்கள் ஹஜ்ஜுக்கு போகவேண்டும் தமது கடமைகளை முடிக்கவேண்டுமென்று எத்தனைபேர் உண்மையாக உழைத்து அந்த பணத்தில் செலவு செய்து போக நிய்யத் வைத்துள்ளார்கள். யார் யாரெல்லாம் எப்பெடியெல்லாம் விழையாடுகின்றார்கள். கடைசியில் பொது பலசேனவிடம் போய் முறைப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. இது உண்மையா பொய்யா இதை நீருபிக்கவேண்டியது குற்றம் சாட்டப்பட்டவர்களின் கடமை. காசுக்காக என்னென்னவெல்லாம் செய்கின்றார்கள் இந்த கேடுகெட்ட நாசக்காரர்கள். உமக்கு மரணம் என்பது உண்டு என்பதை மறந்துவிட்டீரா? என்ன சொல்வது நம சமுதாயத்தை பற்றி. உமது கீழ்த்தரமான வேலைகளை ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமாட்டீர்களா?

    ReplyDelete

Powered by Blogger.