Header Ads



அமெரிக்காவிடம் 132 மில்லியன் யூரோக்களை கேட்ட ISIS

(TH)

பணயத்தொகை கொடுத்து பழக்கப்படுத்துவது கடத்தல்களை ஊக்குவிக்கும் என்பதால் அத்தகைய கோரிக்கைகளுக்கு அடிபணிவதில்லை என்ற தனது கொள்கையில் அமெரிக்கா உறுதியாக இருந்தது.

ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வீடியோ பதிவு உலகையே உறைய வைத்தது. ஜேம்ஸ் போலே என்ற அமெரிக்க பத்திரிகையாளர் தலையை கிளர்ச்சியாளர் ஒருவர் துண்டிக்கும் காட்சி அது.

அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலேவை தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க 132 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.800 கோடி) பணயத்தொகையை ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் கோரியதாகவும் ஆனால் இதுபோன்ற கிளர்ச்சியாளர்கள் கோரிக்கைகளுக்கு அடிபணிவது தீவிரவாதத்தை மேலும் தூண்டும் என அமெரிக்க கருவூலத் துறை அந்தக் கோரிக்கையை புறக்கணித்துவிட்டதாக கூறப்படுகிறது.

கிளர்ச்சியாளர்களின் பனையத்தொகை கோரிக்கை நியூ ஹேம்ப்ஷைரில் உள்ள போலேவின் குடும்பத்தினருக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது. இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், போலே பணியாற்றிய குளோபல் போஸ்ட் பத்திரிகை நிறுவனத்தின் சி.இ.ஓ பிலிப் பல்போனியும், 2013-ல் கிளர்ச்சியாளர்கள் பணயத் தொகை கோரியதாக தெரிவித்துள்ளார் என்றனர்.

போலேவை முதலில் சிரிய அதிபர் பஷார் அல் அசாதின் ஆதரவாளர்களே கடத்தியுள்ளனர். ஆனால், அவர்களிடம் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் கைகளிக்கு போலே எப்படியோ மாற்றப்பட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் தாங்கள் சிறைபிடிக்கும் பணயக் கைதிகளை கடுமையாக துன்புறுத்தி வந்திருக்கிறது.

போலே, ஏஜென்ஸ் பிரான்ஸ் பிரஸ் நிறுவனத்திற்கும் பணியாற்றி வந்திருக்கிறார். அந்நிறுவனம், போலே குடும்பத்தினருடன் 6 முறைக்குமேல் கிளர்ச்சியாளர்கள் தொடர்பு கொண்டிருக்கின்றனர். அப்போது பணயத்தொகை கேட்டு மிரட்டியிருக்கின்றனர். ஆனால், அதில் எப்போதுமே கிளர்ச்சியாளர்கள் சமரசம் செய்து கொள்ளவில்லை என கூறியுள்ளது.

ஒவ்வொரு முறை கிளர்ச்சியாளர்கள் எங்களை தொடர்பு கொண்டபோதும் அந்த் அழைப்பு குறித்த தகவல்களை அமெரிக்க புலனாய்வு நிறுவனம் எப்.பி.ஐ-யிடம் கொடுத்தோம் என பிலிப் பல்போனி தெரிவித்தார்.

ஆனால், பணயத்தொகை கொடுத்து பழக்கப்படுத்துவது கடத்தல்களை ஊக்குவிக்கும் என்பதால் அத்தகைய கோரிக்கைகளுக்கு அடிபணிவதில்லை என்ற தனது கொள்கையில் அமெரிக்கா உறுதியாக இருந்தது.

நேற்று, (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு செய்திதொடர்பாளர் மேரி ஹார்ப்: தீவிரவாதிகளுக்கு எந்த சலுகையும் செய்ய தயாராக இல்லை. பணயத்தொகை அளிப்பது தீவிரவாதத்தை ஊக்குவிக்கும். இது அவர்கள் நிதி ஆதாரத்தை வலுப்படுத்தும். பணயத்தொகை அளிக்கும் சில நாடுகளிடம்கூட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதனை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் என கூறியிருந்தார்.

தாலிபன்களால் கடந்த 2008-ல் கடத்தப்பட்ட டேவிட் ரோஹே என்ற பத்திரிகையாளர் 7 மாதங்களுக்குப் பிறகு அவர்களிடம் இருந்து தப்பிவந்தார். அப்போது அவர், கடத்தப்பட்டவர்களை மீட்க பணயத்தொகை அளிப்பதில்லை என்ற அமெரிக்காவின் கொள்கையை வெகுவாக விமர்சித்தார் என்பது கவனிக்கத்தக்கது.

No comments

Powered by Blogger.