Header Ads



மகிந்த ராஜபக்ச மேற்கு நாடுகளின் அடிமையாக இருந்திருந்தால்..!

நேட்டோவின் ஒரு கருவியாக ஐ.நா மாறிவிட்டது என்று, இந்தியாவை ஆளும் பாஜகவைச் சேர்ந்த பேராசிரியர் மாதவ் நலபாட் தெரிவித்துள்ளார். 

மோடி ஆட்சியின் கீழ் இந்தியா என்ற தலைப்பில், கொழும்பில் நேற்றுமுன்தினம் மாலை நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

புவிசார் அரசியல் மற்றும் அனைத்துலக உறவுகளுக்கான பணிப்பாளரான, பேராசிரியர் மாதவ் நலபாட், யுனெஸ்கோவின் வன்முறையற்ற, அமைதிக் கலாசார ஊக்குவிப்பு அமைப்பின் தலைவராகவும் பணியாற்றுகிறார். 

அவர் தனது உரையில், ஐ.நாவின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்திருந்தார். 

"நேட்டோவின் பொதுசனத் தொடர்பாடல் நிலையமாக ஐ.நா மாறிவருகிறது. 

ஐ.நாவில் ஒன்றுமில்லை. அது நேட்டோவின் ஒரு பிரிவு. 

நேட்டோ என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறதோ  அதையே ஐ.நா செய்கிறது. 

இந்தியாவின் புதிய அரசாங்கம் யதார்த்தமான, முற்போக்கான அரசாங்கம் என்பதால், ஜெனிவாவில் சிறிலங்கா விவகாரத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்கும். 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தீவிர கவனம் எடுக்காது போனால், அது ஒரு அனைத்துலக நகைச்சுவையாக மாறிவிடும். 

சில விடயங்களைப் புறக்கணிப்பதும் வேறு சில விடயங்களை தூக்கிப் பிடிப்பதும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வழக்கமான நடைமுறை. 

மேற்குலகின் செல்வாக்கு உள்ள நாடுகளா இல்லையா என்பதைப் பொறுத்தே, அதன் உறுப்பினரக்ள் தெரிவாகின்றனர். 

மேற்கு நாடுகளின் அடிமையாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இருந்திருந்தால், சிறிலங்கா எந்தவொரு தீர்மானத்தையும் எதிர்கொள்ள வேண்டி வந்திருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.