Header Ads



சவூதி­ அ­ரே­பியாவில் விபத்துக்குள்ளான பெண் நாடு திரும்பினார் (படங்கள்)


சவூதி­ அ­ரே­பிய நாட்­டிற்கு வீட்­டுப்­பணிப் பெண்­ணாக சென்ற பெண்ணொ­ருவர் சித்­தி­ரவ­தைக்­குட்­பட்டு உடலில் பலத்த காயங்கள் ஏற்­பட்ட நிலையில் நேற்று மாலை வாழைச்­சேனை மாவட்ட வைத்­தியசாலையில் சிகிச்­சைக்­காக உற­வி­னர்­க­ளினால் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக வாழைச்­சேனை பொலிசார் தெரிவித்­தனர்.

வீசி வீதி கோர கல்லி மடு கிரானைச் சேர்ந்த 4 பிள்­ளை­களின் தாயான தங்­க­ராசா ஞானம்மா (வயது 41) என்­ப­வரே இவ்­வாறு அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

இவர் கடந்த 2012.12.19 ஆம் திக­தி­யன்று சவூதி அ­ரே­பிய நாட்­டிற்கு சென்­ற­தா­கவும் தாம் 8 நாட்கள் முத­லா­வது வீடொன்றில் வீட்­டுப்­பணிப் பெண்­ணாக கட­மை­யாற்றி வந்­த­தா­கவும் அவ்­வீடு பிடிக்­காத கார­ணத்­தினால் 2ஆவது வீடொன்­றுக்கு சென்று தொழில் புரிந்து வந்­த­தா­கவும் மேற்­படி சம்­ப­வத்தில் பாதிப்­பிற்­குள்­ளான பெண் தெரிவித்தார்.

இங்கு வீட்டு எஜ­மா­னுக்கு 2 மனை­வி­க­ளும் மற்றும் 20 பிள்­ளை­களுமுள்ளனர். 3 மாடிக்­கட்­டட த்திலேயே வீடு அமைந்திருந்தது. இங்கு தான் மட்­டுமே பணி­யாற்ற வேண்­டி­யி­ருந்­த­த­ாகவும் தெரிவித்தார். சம்­பளம் மற்றும் உடு துணிகள் தரு­வ­தில்லை. எனது பிள்­ளை­க­ளுடன் கூட தொலை பேசியில் பேச­மு­டி­யாத நிலைமை அங்கு காணப்­பட்­டது.சம்­பளம் கேட்டால் வீட்டு எஜ­மானன் மற்றும் எஜ­மானி ஆகி­யோர் அடித்து துன்­பு­றுத்­து­வார்கள்.

இவ்­வாறு இருக்­கையில், கடந்த 3 மாதங்­க­ளுக்கு முன்பு வீட்டு எஜ­மா­ன­னிடம் சம்­பளம் கேட்ட போது அவர் தன்னை திரு­மணம் செய்­யு­மாறு வற்­பு­றுத்­தினார். நான் அவ­ரது சொல்­லுக்கு மறுப்பு தெரிவிக்­கவே கம்பு ஒன்­றினால் காலிலும் கை மற்றும் உடலில் ஓங்கி அடித்து என்னை கீழே தள்­ளி­விட்டார்.

இதனால் எனது காலில் முறிவு ஏற்­பட்­டது. வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லவும் இல்லை. உணவு கூடத்­த­ரவும் இல்லை. 3 நாட்கள் கழிந்த பின்பு நானே வீட்­டுக்­கா­ரர்­க­ளுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியில் வந்தேன்.

அவ்­வேளை என்னை சவூதி அ­ரே­பிய பொலிஸார் விசா­ரணை செய்து உணவும் தந்து வைத்­தி­ய­சா­லையில் சேர்த்தனர்.கடந்த 3 மாதங்­க­ளாக சவூதி வைத்­தி­ய­சா­லை­யி­லேயே சிகிச்சை பெற்று வந்தேன். பின்னர் பொலி­ஸா­ருக்கு பயந்த எஜமான் என்னை இலங்­கைக்கு செல்­லு­மாறு கூறி வைத்­தி­ய­சா­லையில் இருந்து விடு­வித்து அனுப்பி வைத்­தார் என்றார்.

இவர் புதன்கிழமை மாலை வீடு வந்து சோர்ந்துள்ளார்.காலில் மற்றும் உடல் பாகங்களில் காயம் ஏற்பட்ட நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்று அனு ப்பி வைக்கப்பட்டுள்ளார்.

1 comment:

  1. மனிதர்களை மனிதர்களாக மதிக்கத்தெரியாத காட்டுமிராண்டிக் குணம் இரத்தத்தில் ஊறிய கேடுகெட்ட மனித மிருகங்கள் வாழும் அந்த மண்ணுக்கு இனியும் நமது உயிர்களை அனுப்பக்கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.