Header Ads



பாலஸ்தீனர்களுக்காக உயிரைவிட்ட அமெரிக்க பெண்ணின் கடிதம்

(11.04.2003)

இசுரேல் இராணுவத்தால் கொல்லப்படுவதற்குச் சில நாட்கள் முன்னால் ரச்சேல் தன் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து சில பகுதிகள் :

நான் பாலஸ்தீனத்துக்கு வந்து சரியாக இரண்டு வாரங்களும் ஒரு மணி நேரமும் ஆகி விட்டது. ஆனால் இங்கே நான் காண்பதை உங்களுக்கு விவரிக்க, அதாவது அமெரிக்காவுக்குப் புரிய வைக்க வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.

குண்டுகளால் துளைக்கப்பட்ட வீட்டுச் சுவர்கள், கழுகுப் பார்வையால் கண்காணிக்கும் இராணுவம் – இவையிரண்டும் இல்லாத ஒரு வாழ்க்கையை இங்குள்ள குழந்தைகள் வாழ்ந்ததேயில்லை. இருப்பினும் “வாழ்க்கை என்பது எல்லா இடங்களிலும் இந்த மாதிரி இல்லை” என்பதை இங்குள்ள சின்னஞ்சிறு பிள்ளைகள் கூடப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

நான் இங்கே வந்து இறங்குவதற்கு இரண்டு நாட்கள் முன் ஒரு 8 வயதுச் சிறுவனை இசுரேலிய இராணுவம் சுட்டுக் கொன்று விட்டது. “அவன் பெயர் அலி” என்று என்னிடம் கிசுகிசுக்கிறார்கள் இங்குள்ள குழந்தைகள். “ஷரோன் யாரு – புஷ் யாரு” என்று அரபியில் அவர்கள் கேட்க, “ஷரோன் கிறுக்கன் – புஷ் கிறுக்கன்” என்று நானும் எனக்குத் தெரிந்த அரபு மொழியில் பதில் சொல்கிறேன். அரபு மொழியை இப்படித்தான் எனக்குக் கற்றுத் தருகிறார்கள் இந்தச் சிறுவர்கள். உலக அரசியலின் அதிகாரம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நான் முன்னர் புரிந்து வைத்திருந்ததைக் காட்டிலும் இங்கே இருக்கும் 8 வயது வாண்டுகள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள்.

புத்தகங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள், செய்திப் படங்கள் போன்ற பல வழிகளில் பாலஸ்தீனத்தைப் பற்றி நான் சேகரித்த அறிவு அனைத்தையும் விஞ்சுகிறது இங்குள்ள எதார்த்தம். நேரில் பார்த்தாலொழிய நீங்கள் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது; ஒருவேளை நேரில் வந்து அனுபவித்தாலும் முழுமையாகப் புரிந்து விட்டதாக நான் சொல்லிக் கொள்ள முடியாது.

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். இங்குள்ள கிணறுகளை இடித்தாலும் தண்ணீர் வாங்கிக் குடிக்க என்னிடம் பணம் இருக்கிறது; நினைத்தால் நான் உடனே அமெரிக்காவுக்குத் திரும்பி விடலாம்; என் குடும்பத்தினர் யாரையும் இராணுவம் ராக்கெட் வீசிக் கொன்றதில்லை; எனக்கொரு வீடு இருக்கிறது; நான் ஆற அமரக் கடலைக் கண்டு ரசித்திருக்கிறேன்; பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பும் வழியில் இராணுவத்தால் கொல்லப்படுவேனோ என்ற பயமின்றி சந்தோஷமாக நான் வீடு திரும்பியிருக்கிறேன்.

எனவேதான் இக்குழந்தைகள் வாழும் உலகத்திற்குள் கால் வைத்த மறுகணமே இந்தக் கொடூரங்களைக் கண்ணால் கண்ட மறுகணமே என் ரத்தம் கொதிக்கிறது. “ஒருவேளை ஒரு பாலஸ்தீனச் சிறுவன் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை நேரில் வந்து பார்த்தால் அந்தப் பிஞ்சு மனம் எப்படித் துடிக்கும்” என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.

இவர்களைப் போலன்றி நான் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திருக்கிறேன். அமைதியான இடத்தில் வசித்திருக்கிறேன். கிணற்றை இடித்து குடிக்கும் தண்ணீரை இராணுவம் பறித்து விடும் என்று நான் கற்பனையில் கூட அஞ்சியதில்லை; இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் சுவர்கள் உட்புறமாக இடித்துத் தள்ளப்பட்டு நான் பதறி விழித்ததில்லை; தனது சொந்தங்களை இராணுவத்திற்கு காவு கொடுத்த யாரையும் நான் அமெரிக்காவில் சந்தித்ததில்லை; என்னுடைய வீட்டை நாற்புறமும் இராணுவக் கோபுரங்கள் கொலைவெறியுடன் குறிபார்க்கவில்லை.

ஆனால், இந்த பாலஸ்தீனச் சிறுவர்களோ நாம் வாழும் அமைதியான வாழ்க்கையை அறிந்ததே இல்லை. நினைத்துப் பாருங்கள். உங்கள் குழந்தைப் பருவம் முழுவதும் உயிர் வாழ்வதற்காக மட்டுமே நீங்கள் போராடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்குமென்று ! உலக வல்லரசின் ஆதரவுடன், உலகின் நான்காவது பெரிய இராணுவம் உங்களையும் உங்கள் வீட்டையும் துடைத்தெறிவதற்கு மூர்க்கத்தனமாக முனைந்து கொண்டேயிருக்க, அதையெதிர்த்து நீங்கள் போராடிக் கொண்டேயிருக்கஸ வாழ்க்கை என்பதே இதுதான் என்றால்...

அதனால்தான் எனக்கு இப்படித் தோன்றுகிறது. இந்த பாலஸ்தீனக் குழந்தைகள் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை உண்மையிலேயே நேரில் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.

நன்றி : ஃபிரண்ட்லைன் 11.04.2003

காஸாவில் உள்ள ஷிபா மருத்துவமனையில் பணியாற்றிவரும் நோர்வே நாட்டு மருத்துவரான கில்பர்ட் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதம்

காஸாவில் உள்ள ஷிபா மருத்துவமனையில் பணியாற்றிவரும் நோர்வே நாட்டு மருத்துவரான கில்பர்ட் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவரது கடிதம் பின்வருமாறு அமைந்துள்ளது.

"ஒபாமா உங்களுக்கு இதயம் ஒன்று இருக்கின்றதா? வெறுமனே ஒரே ஒரு இரவு இந்த ஷிபா மருத்துவமனையில் எங்களுடன் இருந்து பாருங்கள். அது வரலாற்றையே மாற்றிவிடும் என நான் 100% உறுதியாக நம்புகிறேன். இதயம் இருக்கும் எவரும் இங்கு ஒரு நாள் தங்கிவிட்டு பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்காமல் இருக்கமாட்டார்.

ஆனால் இரக்கமற்ற இதயமற்றவர்கள் இன்னுமொரு படுகொலைக்குத் திட்டமிடுகிறார்கள். இங்கு இரவு முழுவதும் இரத்த ஆறு ஓடுகிறது. அவர்களின் மரண ஓலங்களை என்னால் கேட்க முடிகிறது. உங்களால் முடியுமானதை தயவு செய்து செய்யவும். இதனைத் தொடர முடியாது." எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

 ஹமாஸின் தலைவர் (அரசியல்) “Khaled Mashal” உலக முஸ்லிம்களை நோக்கி விடுத்த அழைப்பு...!!

“ஹமாஸ்” காஸாவின் நிலங்களை மட்டுமல்ல, அந்த நிலங்களில் வாழும் மக்களின் ஆன்மாக்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இயக்கம். அதன் அரசியல் தலைவர் Khaled Mashal. 2004-ல் இஸ்ரேலினால் கொல்லப்பட்ட சகோதரர் அப்துல் அசீஸ் ரன்தீஸி அவர்களின் இழப்பிற்கு பிறகு ஹமாஸின் அரசியல் தலைவராக இருந்து வருபவர். இஸ்ரேலின் சின்-பெட் பல முறை இவரை படுகொலை செய்ய முயன்றும் இறைவன் அருளால் இன்றும் அதன் தலைமமையை கொண்டு செல்பவர். 

உலக முஸ்லிம் உம்மாவிற்கு அதன் இணையத்தளம் ஊடாக ஹமாஸ் சார்பாக அவர் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார். 

“ஓஹ்..... எமது உலக முஸ்லிம் சகோதர்களே..!! எங்களிற்கு இங்க என்ன நடக்கிறது என்பதனை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எமது மண்ணை யூத இராணுவம் மீண்டும் ஒரு முறை விழுங்க முற்பட்டுள்ளது. அவர்களிற்கு எதிரான எமது போராட்டம் இதுவரை நடந்ததையும் விட எழுச்சியுடனும் பல அர்ப்பணங்களிற்கு மத்தியிலும் இடம்பெற்று வருகிறது. யஹுதிகள் இப்போது ஒரு புதிய எதிரியுடன் மோதுகிறார்கள். ஆம் நாம் அவர்களிற்கு எதிராக பல எதிர்பாராத தாக்குதல் முறைகளையும் சண்டைகளையும் ஆரம்பித்துள்ளோம். இதனை நான் பெருமையுடனும் சந்தோசத்துடனும் இந்த புனிித ரமாழானில் உங்களிற்கு சொல்லிக்கொள்கிறேன்”.

“உலகம் முழுதும் முஜாஹித்கள் போராடுகிறார்கள். அதற்காக தங்கள் உயிர்களை இறைவனின் பாதையில் இழக்கிறார்கள். அது போன்றே காஸாவிலும் புனித யுத்தம் நடக்கிறது. நீங்கள் இந்த சண்டைகளில் பங்கேற்க அவாவுற்றிருப்பீர்கள். உங்கள் உளமார்ந்த இந்த எண்ணத்தை ஹமாஸின் சார்பில் பாரட்டுகிறேன். ஆனால் எமக்கு உங்கள் ஆட்பலம் தேவையில்லை. தாராளமாக எமது போராளிகள் அதற்காக திரண்டுள்ளார்கள். எமக்கு ஆயுதங்களும் தேவையில்லை. யஹுதிகளை எதிர்கொள்ளும் மனப்பலம் எம்மிடம் உண்டு. அதுவே எமது பிரதான ஆயுதம். ஆயுத தளவாடங்கள் எம்மிடம் கையிறுப்பில் உள்ளன. அவற்றை காஸாவிற்கு கொண்டு வந்து சேர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.”

“ஓ... எம் அன்பின் முஸ்லிம் சகோதரர்களே..!! எமக்கு மருந்துகள் தேவை. காயப்படும் எமது சகோதரிகளையும், சகோதரர்களையும் காப்பாற்ற அவை தேவைப்படுகின்றன. மேலும் வைத்தியர்கள் தேவை. யஹுதிகள் வீசும் குண்டுகள் அபாயகரமானவை. அவை எமது உடன் பிறப்புக்களை படுகாயப்படுத்துகின்றன. எமது குழந்தைகளிற்கு பால்மா தேவை. இந்த ரமழானில் நீங்கள் இவற்றை எமக்கு வந்து சேர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மட்டும் எடுங்கள். மற்றவற்றை எமது எல்-கஸ்ஸாம் பார்த்துக்கொள்ளும்.”

“ஹமாஸ் உங்களிடம் இறைஞ்சி வேண்டுகிறது. புனித ரமழானில் நீங்கள் யஹுதிகளின் அழிவிற்காக துஆ செய்யுங்கள். எமது நிலங்களை நாங்கள் மீட்க துஆ செய்யுங்கள். எமது சகோதரிகளினதும், குழந்தைகளினதும் அநியாயமான இரத்தம் வீணாகாமல் இருக்க துஆ செய்யுங்கள். யாரெல்லாம் ஸியோனிஸ்ட்களால் கொல்லப்பட்டார்களோ அவர்களிற்கு பிர்தவ்ஸ் எனும் ஜன்னத் கிடைக்க துஆ செய்யுங்கள். எமது ஆன்மீக தலைவரும் ஹமாஸின் தந்தையுமான சேய்ஹ் அஹ்மத் யாஸீன் (ரஹ்) அவர்கள் எம்மை எல்லாக் கருமங்களிலும் துஆவை கொண்டு ஆரம்பித்து துஆவை கொண்டு முடிக்கும் படி அடிக்கடி பணிப்பார்கள். அவர்கள் காட்டிய பாதையில் தான் நாம் பயணிக்கின்றோம். ஒ... முஸ்லிம் உம்மாவே உங்கள் துஆக்களை விட பெரிய ஆயுதம் கஸ்ஸாமிடம் இல்லை. அவற்றை நீங்கள் எங்களிற்காக வழங்குங்கள். ஆமீன். யஹுதியின் அழிவு இதில் இருந்தே ஆரம்பிக்கும் .....

1 comment:

  1. Yaa allah avarhalukku mana uruziyai koduthanee avarhalukku vetriyayyum koduppayaha badhr poril kodutha vetriyai pola koduppay yaa Allah yahudhihalai pura muzuhu kaati odacheyvaay yaa Allah. Unnai the Vira veru endha sakthiyum avarhalukku illai en rabbe . Islathayum muslimgalayum neeye paazuhappaayaha. Aameeen

    ReplyDelete

Powered by Blogger.