Header Ads



இந்தோனேசியாவுக்கு பெருநாள் கொண்டாட சென்ற மலேசிய பிரதமரின் பாட்டியும் விமான விபத்தில் வபாத்

கிழக்கு உக்ரைன் வான் எல்லை வழியாக நேற்று முன்தினம் 298 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் போயிங் 777 விமானம் ரஷிய ஆதரவுப் படையான கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இவ்விமானத்தில் பயணித்த அனைவருமே உடல் கருகி பலியாகினர். இறந்தவர்களைப் பற்றிய தகவல்கள் மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கோர கதியை சந்தித்த அந்த விமானத்தில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கின் (ஒன்று விட்ட) பாட்டி சிட்டி அமிராவும் பயணித்து, பலியானது தெரிய வந்துள்ளது. 

தற்போதைய மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கின் தாய் வழி தாத்தாவின் இரண்டாவது மனைவியான சிட்டி அமிரா(83) உறவினர்களின் பராமரிப்பில் நெதர்லாந்தில் வசித்து வருகிறார். 

எதிர்வரும் ரம்ஜான் பண்டிகையை தான் பிறந்து, வளர்ந்த சொந்த நாடான இந்தோனேசியாவில் கொண்டாடுவதற்காக ஆம்ஸ்ட்டெர்டாமில் இருந்து தனியாக வந்து விமானம் ஏறினார். கோலாலம்பூர் செல்லும் வழியில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியான 298 பேரில் ஒருவராக சிட்டி அமிராவும் பரிதாபமாக உயிரிழந்தார். 

No comments

Powered by Blogger.