Header Ads



ஊவா மாகாண முஸ்லிம்களின் தெரிவு ஜே.வி.பி. ஆக இருந்தால் என்ன..?

(நஜீப் பின் கபூர்)

சுதந்திரத்திற்குப் பிந்திய வரலாற்றில் பெரும்பாலான காலப் பகுதியில் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தெரிவாக ஐக்கிய தேசியக் கட்சியே அனேகமாக இருந்து வந்திருக்கின்றது என்பது பகிரங்க இரகசியம். அஸ்ரஃப் அரசியல் பிரவேசத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி மீது இருந்த முஸ்லிம்களின் ஏக ஆதிக்கம் தகர்த்து எறியப்பட்டது.

இதனால் இன்று முஸ்லிம்கள் பெருவாரியக வாழ்கின்ற கிழக்கில் வெரும் 600 அல்லது 700 வாக்குகளைப் பெற்று ஒரு உள்ளூராட்சி மன்ற உறுப்பினரைப் பெற்றெடுப்பது என்பது கூட ஐ.தே.காவுக்கு அங்கு முடியாதிருக்கின்றது. அந்தளவுக்கு முஸ்லிம்களின் செல்வாக்கை அந்தக் கட்சி இழந்திருக்கின்றது.

வடக்குக் கிழக்கிற்கு வெளியே ஐ.தே.காவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஓராளவு செல்வாக்கு இருந்தாலும் சந்திரிக்க பண்டாரநாயக்க அவர்களின் வருகையுடன் கணிசமான முஸ்லிம்கள் அவருக்கு வாக்களித்து இருக்கின்றனர். மஹிந்த ராஜபக்ச அவர்களின் அரசியல் வருகையும்  இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தி இருந்தது. எனவே அவருக்கு பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் கடந்த காலங்களில் வாக்களித்திருக்கின்றனர். இதனை அந்தக் கட்சி முன் நிறுவுவதற்கு அந்தக் கட்சியிலுள்ள முஸ்லிம் தலைவர்களுக் முடியாதிருக்கின்றது.

கடந்த காலங்களில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டி போட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களை விட அண்மைக் காலங்களில் அதிகமான உறுப்பினர்களை ஆளும் தரப்பும்  அதன் கூட்டுக் கட்சிகளிலும் போட்டியிட்ட உறுப்பினர்களே பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்பது யாதார்த்தமாக இருக்கின்ற போதும், அதனைத் தரவுகளுடன் எடுத்துச் சுட்டிக் காட்டத் தெரியாத நிலையில் அங்குள்ள முஸ்லிம் தலைவர்கள் இருப்பதால் முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே அதிகம் வாக்களிக்கின்றார்கள் என்ற கருத்து இன்றும் வேரூன்றி இருக்கின்றது. இது வெரும் மாயை.

மேற் சொன்ன எனது வாதத்திற்கு ஊவா மாவட்டத்தில் இருந்த நல்லதொரு ஊதாரணத்தை வாசகர்களுக்குக் கொடுக்கலாம். 2009ம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலில் பதுள்ளை மாவட்டத்தில் ஆளும் தரப்பு வேட்பாளர் மதார் சாஹிப் 11062 வாக்குகளைப் பெற ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் அமீர் முஹம்மட் 10676 ம் வாக்குகளையும் மு.கா. மொத்தம் 4150 வாக்குகளையும் பெற்றிருக்கின்றது. மு.கா.வும் ஆளும் தரப்புக் கூட்டில் இருப்பதால் அது பெற்ற வாக்குகளும் ஆளும் தரப்புக் கணக்கு வரவில் பதியப்பட வேண்டியதே. ஆனால் இவர்கள் எவருமே வெற்றி பெறவில்லை.

என்றாலும் சமகாலத்தில் கடும்போக்கு இனாவாதிகளின் நடவடிக்கையின் பின்னணியில் ஆளும்தரப்பு முக்கியஸ்தர்கள் இருக்கின்றார்கள் என்று முஸ்லிம்களும் நடுநிலையான சிங்கள மக்களும் புத்திஜீவிகளும் சர்வதேச சமூகத்தினரும் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றார்கள். இந்தப் பின்னணியில் தற்போது ஆளும் தரப்பில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரும் முன்வர மாட்டார்கள். அப்படி வந்தாலும் நிச்சயம் எங்களுக்கு வெற்றிகிடைக்காது என்றாலும் ஆளும் தரப்பில் ஏதும் தனிப்பட்ட நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற ஒரு சுயநலத்தில் மட்டுமே அவர்கள் களத்தில் குதிக்க இடமிருக்கின்றது. என்பது மிகத் தெளிவு.

அதே போன்று முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுப்பதாக எங்களுக்கு வாக்களித்து எங்களை மக்கள் அவைகளுக்கு அனுப்பி வையுங்கள்  என்று ஒப்பாறி வைத்தவர்கள் அளுத்கம பேருவளைச் சம்பவங்களின் போது நடந்து கொண்ட விதத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை விட முஸ்லிம் சமூகம் தனது பிரதிநிகள் தமக்கு இழைத்த துரோகம் கொடியது என்ற உணர்விலே முஸ்லிம் சமூகம் இன்று இருக்கின்றது. 

அண்மையில் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரதமர் அப்பட்டமான பெய்களை - தகவல்களை வெளியிட்டபோது அதுபற்றி முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்காக வாக்குக் கேட்கின்றவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை அனைவரும் நேரடியாகப் பார்க்க முடிந்தது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளுத்கம பேருவளை சம்பந்தப்பட்ட பாராளுமன்ற  விவாதத்தில் முஸ்லிம்கள்தான் இதற்குக் காரணம் என்று இனவாத அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் போலியான புள்ளிவிபரங்களை வெளியிட்டபோதும் ஐ.நா.வுக்கான இலங்கைப் பிரதிநிதி அளுத்கம சம்பவம் தொடர்பாக மிகப் பிழையான தகவல்களை அங்கே சமர்ப்பித்த போதும் முஸ்லிம்கள்தான் பிரச்சினைகளுக்கு  மூல காரணம் இழப்பு இருதரப்பிலும் சமனாக நடந்திருக்கின்றது என்று குறிப்பிட்டபோது அதற்கு இன்று வரை பாராளுமன்றத்திலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் கருத்தோ கண்டனங்களோ தெரிவிக்க வில்லை.

அவர்கள் ஊமையாக நின்ற போது ஜே.வி.பி.தலைவரே முஸ்லிம்கள் தரப்பில் அங்கும் குரல் கொடுத்திருந்தார். சிங்களப் பெரும்பான்மை வாக்குகளை தனது வெற்றிக்காக நம்பி இருக்கின்ற கபீர் ஹாசிம் எதிர்க் கட்சியில் இருந்தாலும் அளுத்கம பேருவளை விடயங்களில் அவர் பாராளுமன்றத்தில் காணாமல் போயிருக்கின்றார். இது ஏன் என்று முஸ்லிம்களுக்குப் புரிந்து கொள்ள முடியும். எனவே முஸ்லிம் வாக்காளர்கள் எதற்காக இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாம் கேட்க வேண்டி இருக்கின்றது.

எனவே எதிர் வருகின்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் தரப்பிற்கு வாக்களிக்க முஸ்லிம் சமூகம் தயக்கம் காட்டும் என்பது மிகத் தெளிவு, அத்துடன் வெற்றி பெறுவது எப்படிப் போனாலும் தமக்கிடயே உள்ள முறன்பாடுகளையே தீர்த்துக் கொள்ள முடியாது அவர்களுக்குள்லேயே முட்டி மோதிக் கொள்ளும் போது சிங்கள சமூகம் அந்தக் கட்சியை கைகழுவி விட்டிருக்கின்றது. 

எனவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து ஊவா முஸ்லிம்களுக்கு எதுவுமே நடக்கப் போவதில்லை  நிச்சயமாக அந்தக் கட்சி ஊவா மாகாண சபையை ஒருபோதும் கைப்பற்றவும் மாட்டது, உறுபப்படியாக எதுவும் பண்ணவும் மாட்டாது பண்ணவும் முடியாது என்பது மிகத் தெளிவு.

2009 தேர்தலில் ஊவாவில் தனித்துப்  போட்டியிட்டு வெரும் 4150 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்த முஸ்லிம் காங்கிரஸ் மீதும் முஸ்லிம் சமூகம் இன்று கடும் கோபத்தில் இருக்கின்றபோது, தேர்தல் காலங்களில் மட்டும் அதன் தலைவர்கள் ஊவாவில் வந்து வடிக்கின்ற முதலைக் கண்ணீர் ஒருபோதும் இந்தத் தேர்தலில் அங்கு விலை போக மாட்டாது. விலை போகவும் முடியாது. அத்துடன் அவர்கள் தனித்துக் களமிறங்குகின்றார்கள் என்றால் அதுவும் ஆளும் தரப்பு வெற்றிக்கு நேரடியாக அவர்கள் ஒத்துழைக்கின்ற குறுக்கு வழி என்பதனை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே எதுவித எதிர்பார்ப்புக்களுமின்றி தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்கின்ற ஜே.வி.பி ஒன்று மட்டுமே சமகாலத்தில் முஸ்லிம்கள் நம்பிக்கை வைக்கின்ற கட்சியாக இருந்த வருகின்றது. எனவே அவர்களுக்கு அமைப்பு ரீதியாக அணி சேர்ந்து நன்றிக் கடன் செலுத்த வேண்டிய தர்மீகக் கடமையும் முஸ்லிம் சமூகத்திற்கு இருந்து வருகின்றது. 

எனவே முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெருப்பான்மைக் கட்சிகளிலே மு.கா. விலிருந்தோ ஊவாவில் பெற்றுக் கொள்வது குதிரைக் கொம்பாக இருக்கின்ற போது முஸ்லிம்கள் அமைப்பு ரீதியில் அணி திறண்டு ஜேவிபிக்கு இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்களாயின் அவர்களின் பல பிரதிநிதிகள் ஊவா மாகாண சபைக்கு முஸ்லிம் வாக்குகளினால் தெரிவு செய்யப்படுவார்கள். இதுவே ஊவா முஸ்லிம்களுக்கு ஏதோ ஒரு வகையில் பாதுகாப்பைக் கொடுக்கும் என்பது கட்டுரையாளன் கருத்து.

மிக முக்கிய குறிப்பு
இந்த கட்டுரையை ஊவா முஸ்லிம்களுக்குச் சமர்பிக்கின்ற கட்டுரையாளன் ஜே.வி.பி.யுடன் சம்பந்தப்பட்டவனோ அந்த அமைப்புடன் இணைந்த எந்தவொரு சங்கங்களுடன் ஈடுபாடு கொண்டவனுமல்ல என்பதனையும் உங்கள் மேலான பார்வைக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். 
மிக்க நன்றி 

2 comments:

  1. Yes your are true , all uva muslims pls vote j.v.p foth coming election, dont vote any other partys.

    ReplyDelete
  2. Uva Muslims must use your braind, Voting MR & Co. or SLMC like supporting on going attacks against Muslims, Up to now Ruaf and SLMC are giving oxigent to Mahinda's dirty racist Government. The best choice for Muslims UNP and JVP.

    ReplyDelete

Powered by Blogger.