Header Ads



முஸ்லிம்கள் மீதுள்ள சிநேகிதத்தை விலக்கிக்கொள்ள, சிங்கள மக்கள் முயற்சியா..?

(இ. அம்மார்)

பொது பல சேனா  அபை;பினர் முஸ்லிம்களுடைய புனித குர்ஆனை இழிபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு முஸ்லிம்களை பொறுமையை சோதிக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வமைப்பின் அட்டூழியங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்த வண்ணம் செல்கின்றது. எனவே இவ்வமைப்பை இந்நாட்டில் தடை செய்ய சகல முஸ்லிம் கட்சி ஆரசியல் பிரமுகர்களும் ஒன்று பட வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டுள்ளது என்று மேல் மாகாண சபை உறுப்பினர் ஷhபி றஹீம் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் ஷhபி றஹீம் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த அமைப்பு தொடர்ச்சியாக மேற்கொண்ட  செயற்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தது போதும் இனியாவது எமது நாட்டிலுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டு அவசர அவசியமான ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர்பாக எமது முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுடைய நடவடிக்கைகளில் காத்திரமான பங்களிப்பு இதுவரை நடைபெறவில்லை என்ற கருத்தே முஸ்லிம் பொது மக்களிடத்தில் இருந்து வருகின்றது.

முஸ்லிம்களுடைய புனித குர்ஆன் விடயத்தில் பொய்யான கட்டுக்கதைகளைப் பரப்பி இழிவுபடுத்தும் கைங்கரித்தில் ஈடுபட்டுள்ள இந்த அமைப்புத் தொடர்பாக எமது முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்று பட்டு இந்த அமைப்புக்கு எதிராக தீர்க்கமான தீர்மானத்தை நிறைவேற்றி அரசாங்கத்தின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும். அரசாங்கத்தினுடைய  பங்காளிக் கட்சியாக இருந்தாலும் சரி. அரச தரப்பு அரசியல் பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி முஸ்லிம்களுடைய சமய கலாசார பாதுகாப்புத் தொடர்பாக அச்சுறுத்தல் வருகின்ற போது அதைத் தொடர்ச்சியாக பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு சாதகமான திருப்பமுனையாக அமையாது.

பொது பல சேனா தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தாமையிருப்பது என்பது எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இது தொடர்பாக ஜனாதிபதியிடம் இன்னும் துணிச்சலுடன் எடுத்துக் கூறவில்லையோ அல்லது எடுத்துக் கூறத் தயங்குகின்றார்களோ என முஸ்லிம்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்துடன் இருந்து கொண்டு வெறும் பொய்யான ஊடக அறிக்கை மாத்திரம் விடுவதை நிறுத்தி விட்டு இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முன்வருதல் வேண்டும். இல்லையேல் அரசாங்கம், பொது பல சேனா, எமது முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஆடும் நாடாகமா என எதிர்மறையாகச் சிந்திக்கத் தோன்றுவதாக எனப் பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தற்போது நல்ல சூழ்நிலையிலுள்ள சிங்கள மக்களுடைய உள்ளங்களும் தொடரான இனவாதக் கருத்துப்பரப்புரையின் காரணாக படிப்படியாக முஸ்லிம்கள் மீதுள்ள சிநேகிததன்மையை சிங்கள மக்கள் விலக்கிக் கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனவே தங்களுடைய அரசியல் பாதுகாப்புக்காக அறிக்கை மாத்திரம் விடுவதைத் தவிர்த்து விட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு முஸ்லிம் அரசியல் பிரதிநிகள் கட்சி பேதங்களை மறந்து செயற்படல் வேண்டும் என்று மாகாண சபை உறுப்பினர் ஷhபி றஹீம் மேலும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.