Header Ads



இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரைக்கு இம்முறையும் 2240 பேருக்கே அனுமதி


(எம். எஸ். பாஹிம்)

புனித ஹஜ் கடமை யை நிறைவேற்றுவதற்காக இம்முறை இலங்கையிலிருந்து 2240 பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள் ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் தெரிவித்தது. 

ஆனால் ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வதற்காக 7500 க்கு மேற்பட்ட வர்கள் விண்ணப்பித்திருப் பதாக தெரிவித்த திணைக்கள பணிப்பாளர் எம். எச். எம். ஸமீல் இதில் தகுதியானவர்களை தெரிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். புனித மக்காவை அண்மித்த பிரதேசங்களில் 

விஸ்தரிப்பு பணிகள் இடம்பெற்று வருவதால் ஹஜ் யாத்திரிகர்களின் தொகை கடந்த சில வருடங்களாக மட்டுப்படுத்த ப்பட்டு வருகிறது. கடந்த வருடமும் 2240 பேருக்கே கோட்டா வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், ஏற்கெனவே 7500 பேர் விண்ணப்பித்துள்ளதால் அதில் முன்னுரிமை அடிப்படையில் தகுதியானவர்களை தெரிவு செய்வதாக கூறினார். 

முதற் தடவையாக ஹஜ் கடமைக்கு செல்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறிய பணிப்பாளர், இது தொடர்பான கடிதங்களை தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அனுப்பி வருவதாக குறிப்பிட்டார். இந்த பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் ஹஜ் யாத்திரிகர்களை அழைத்துச் செல்லும் ஹஜ் முகவர்களை தெரிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. 

கடந்த தடவை சில ஹஜ் முகவர்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ள தோடு அது குறித்தும் கவனித்தே அனுமதி வழங்கப்பட இருப்பதாக அறிய வருகிறது. இம்முறை உம்றா கடமைக்கு யாத்திரிகர்களை அழைத்துச் செல்ல சில முகவர்களுக்கு தடை விதிக்கப்பட்டமை தெரிந்ததே.

No comments

Powered by Blogger.