Header Ads



ஜனாதிபதி மாளிகையிலிருந்து காணாமல் போன கிளிகள் - தகவல் அறிந்தால் அறிவிக்கலாம்

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வளர்க்கப்பட்டு வந்த மெக்கோ ரக கிளிகள் நான்கு, அங்கிருந்து பறந்து சென்றுவிட்டதாக ஜனாதிபதி மாளிகையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். 

இவ்வாறு பறந்து சென்ற கிளிகளில் இரண்டு சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கலவைகளைக் கொண்டவை எனவும் ஏனைய இரண்டும் நீலம் மற்றும் மஞ்சள் நிறக் கலவைகளைக் கொண்டவை எனவும் அவர் குறிப்பிட்டார். 

இந்த கிளிகள் தொடர்பில் தகவல் அறிந்தால், 0777 – 535377 என தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு பேச்சாளர் மேலும் கூறினார்.  Tm

No comments

Powered by Blogger.