Header Ads



கல்முனையில் உடைந்திருக்கும் வீதிகள் - கண்டுகொள்ள யாரும் இல்லை (படங்கள்)


(யு.எம்.இஸ்ஹாக்)

இரண்டு வாரங்களுக்கும் மேலாக கல்முனையில் வீதி உடைந்துஇருந்தும் அதனை வீதி அபிவிருத்தி அதிகார சபை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக புத்திஜீவிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கல்முனை பிரதேசத்தின் முக்கிய அரச தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ள நீதி மன்ற வளாக வீதியின்  மத்தியில் உடைவு ஏற்றபட்டு இரண்டு வாரங்களுக்கும் மேலாகி விட்டது. இந்த உடைவினால் ஆபத்துக்கள் ஏற்ட்பட்டுவிடும் என்று பயந்த பக்கத்துக்கு கடை வியாபாரி  அவரிடமிருந்த பலகை துண்டு,வெங்காய சாக்கினால் அடையாளமிட்டுள்ளார் . அவரிடம் இருக்கும் அந்த இரக்கமும்,பயமும்  வீதி அபிவிருத்தி அதிகார சபையின்  அதிகாரிகளுக்கு இன்னும் ஏற்படவில்லை என்பது தெளிவாகின்றது.

கல்முனையில் உள்ள நீதி மன்ற கட்டிடங்கள்,சிறைச்சாலை, ஸ்ரீ லங்கா டெலிகாம்,வீதி அபிவிருத்தி திணைக்களம் ,கார்மேல் பத்திமா  தேசிய பாடசாலை ,கல்முனை ஆதார வைத்திய சாலை  மகப் பெற்று பிரிவு ,மற்றும் தனியார் கல்வி நிலையங்கள்,விடுதிகள் என்பனவும்  இவ்வீதியில்  அமைந்துள்ள நிலையில்  இந்த உடைவை கவனத்தில் எடுக்காமல் இருப்பது அரசியல் வாதிகளின் கவனக் குறைவா ?அல்லது அதிகாரிகளின் கவலயீனமா ? அல்லது வீதி  உடைந்து அவ்விடத்தில் விபத்தொன்று ஏற்படும் வரைக்கும் காத்திருப்பு நடை பெறுகின்றதா?



No comments

Powered by Blogger.