Header Ads



நிந்தவூரில் பாவனைக்கு உதவாத பொருட்கள் கண்டுபிடிப்பு (படங்கள்)

(யு.எம்.இஸ்ஹாக்)

நிந்தவூரில் பொது சுகாதார உத்தியோகத்தர்களினால் ஹோட்டல்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், உணவு தயாரிக்கும் இடங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது நேற்று  பாவனைக்கு உதவாத பல பொருட்கள் கண்டு பிடிக்கப்படடன.

கல்முனை பிராந்திய பொது சுகாதார பொறுப்பதிகாரி பீ.பேரின்பம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றி வளைப்பில் 30 பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார துறை சார்ந்த சுகாதார வைத்திய அதிகாரி  ,உணவு பாதுகாப்பு அதிகாரி  ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டார்கள். கைப்பற்றப்பட்ட பாவனைக்கு உதவாத பொருட்கள் யாவும் அழிக்கப்பட்டன.

 ஒரு பிரபல்யமான பாடசாலை ஒன்றின் சிற்றூண்டிசாலை இரு வாரங்களுக்குள் சுகாதாரமான முறையில் சீரமைக்கப்பட வேண்டுமென்று எச்சரிக்கை செய்ததாகவும், தவறும் பட்சத்தில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று எச்சரிக்கை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ள விற்பனை நிலையங்கள், சுகாதாரமற்ற வகையில் இயங்கும் ஹோட்டல்கள், உணவு தயாரிக்கும் இடங்கள், பாடசாலை சிற்றூண்டிசாலைகள் என்பவை பற்றி நிந்தவூர் பொதுச் சுகாதார பணிமனைக்கு அறிவிக்குமாறு நிந்தவூர் பிரதேச பொதுச் சுகாதார பணிமனையின் பொறுப்பதிகாரி கேட்டுக் கொண்டார்.




No comments

Powered by Blogger.