Header Ads



அமைச்சர் உதுமாலெப்பையின் அவசர கவனத்திற்கு..! (படங்கள்)

(ஏ.எல்.ஜுனைதீன்)

  சாய்ந்தமருது – மாளிகைக்காடு  எல்லை வீதியின் (மாளிகா வீதி) கிழக்குப் புறப் பகுதி திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை  புனரமைப்பு வேலைகள் பூர்த்தி செய்யப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருவதையிட்டு இப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

  'ஜெய்க்கா' திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின்இ வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் கடந்த 2013.03.29 ஆம் திகதி சுமார் 17.04 மில்லியன் ரூபா செலவில் இப் பாதை புனரமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  இவ் வீதியில் வடிகான் கட்டுவதற்கென தோண்டப்பட்ட குழிகள் அப்படியே போடப்பட்டிருப்பதும் கட்டப்பட்ட வடிகானுக்கு மூடிகள் போடப்படாமல் பாதை அபாயகரமான முறையில் போக்கு வரத்திற்கு விடப்பட்டிருப்பதும் குறித்து பொது மக்கள் சுட்டிக் காட்டுவதுடன் இந்நிலை குறித்து கவலையும் தெரிவிக்கின்றனர்.

  அதிக எண்ணிக்கையான வாகனங்களும், பாதசாரிகளும், பாடசாலை மாணவர்களும் பயணிக்கும் பிரசித்தமான வீதிகளில் ஒன்றான இவ் வீதியும் இதன் வடிகான் வசதிகளும் புனரமைக்கப்படும் வேலைகள் மேலும் தாமதப்படுத்தப்படாமல் துரிதமாக முடிக்கப்படல் வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

8 comments:

  1. ஏ.எல்.ஏ. ஜுனைதீன் என்று இனிஷியல் போட்டு எழுதி இருக்கும் அன்பரே! உங்கள் சமூக உணர்வுக்கு மிக நன்றி. அப்படி இவ்வமைச்சர் செய்திருந்தால் தப்புத்தான்!

    ஆனால் நீங்களோ றஊப் ஹக்கீமின் ஆதரவாளர்!! அவருக்கே வோட்டுப்போடுபவர்!!! அவர் நம் பகுதிக்கு எதுவுமே செய்ய மாட்டார்!!! அவரைப்பற்றி வாய் திறக்க மாட்டீர்!!!! கிழக்கு மக்களை மடையர்கள் நிலையில் வைத்திருக்கும் இந்த ஹகீம்களினதும், இலங்கை ஜமியதுல் உலமாக்களினதும் ---- உங்களைப்போன்றோர் இருக்குமட்டும் ------ காட்டில் மழைதான்!!!!!!!!!!!!!!!

    என்ன பிளைப்புடா ரஹ்மானே? இது!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. நெற்றிக்கண் அன்பரே! நான் ஏ.எல்.ஏ இனிஷியல் போடுவதில்லை எனது இனிஷியல் ஏ.எல். என்பதேயாகும். கண் முன்னாலே இருக்கும் எனது இனிஷியலேயே புரிந்து சரியாக கூறமுடியாது இருக்கும் உங்களுக்கு எனது அரசியல் பற்றி எப்படி கூறிவிட முடியும்? என்னைப் பொறுத்த வரையில் அரசியல்வாதிகளுக்கு செய்தி எழுதுபவன் நானல்ல.மக்களுக்கே செய்திகளை எழுதிக்கொண்டிருக்கின்றேன். பத்திரிகை ஆசிரியர்களில் கொடிகட்டிப் பறந்த திரு எஸ்.டி சிவநாயகம் ஐயாவின் தினபதி, சிந்தாமணி,சூடாமணி, பத்திரிகைகளுக்கும் சுடர் ஒளி பத்திரிகையிலும் நவமணி பத்திரிகையிலும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் என்று பாராமல் மக்களுக்கு செய்தி எழுதியவன் நான். மறைந்த மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் அதிகாரத்தின் உச்ச கட்டத்தில் இருக்கும் போது கூட அவரின் செயல்பாடுகள் குறித்து பல செய்திகள் எழுதியுள்ளேன். நவமணியில் அப்போது "பிரச்சினைக்குத் தீர்வு கண்ட கைக்கடிகாரம்" போன்ற பல செய்திகளைக் குறிப்பிடமுடியும்.அதுபற்றி மர்ஹும் எம் பி எம் அஸ்ஹர் அவர்களுக்கு தெரியும்.அப்படித்தான் மக்களுக்காக செய்திகளை எழுதினேன்.மர்ஹும் அஸ்ரஃப் அமைச்சராக இருந்த போது கல்முனைக் கரையோரப் பிரதேசங்களில் மேடைகளில் பேசும் பெரும்பாலான மேடைப் பேச்சுக்களை வீரகேசரி பத்திரிகையில் முழுமையாக அன்று எழுதியவன் யார் என்பது இப்பிரதேசத்திலுள்ள சிரேஸ்ட ஊடகவியலாளர்களுக்கு நன்கு தெரியும். அது மாத்திரமல்ல தற்போதய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதி அமைச்சர் கட்சிக்கு தலைமைத்துவம் பேரியல் அஷ்ரபா? ரவூப் ஹக்கீம் அவர்களா? என்ற அன்று இடம் பெற்ற போட்டியில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு முன் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அதற்குத் தகுதியானவர் ரவூப் ஹக்கீம் என்று முடிவாகியது. என்னால் எழுதப்பட்ட அக்கூட்டச் செய்தி வீரகேசரியில் முன் பக்கத்தில் தலையங்கச் செய்தியாகப் பிரசுரமாகியிருந்தது. என்னால் எழுதப்பட்ட அச் செய்தியை பத்திரிகையில் செய்தி வருவதற்கு முன் இப்படி செய்தி எழுதி பத்திரிகைக்கு அனுப்பியிருப்பதாக அறிந்து (பொத்துவிலைச் சேர்ந்த ஜவ்பர் என்னும் எனது ஊடக நண்பர் மூலம்) கொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் என்னை நேரடியாகத் தெரியாத நிலையிலும் கொழும்பிலிருந்து தொலைபேசி மூலம் என்னோடு தொடர்பு கொண்டு என்னால் அன்று எழுதப்பட்ட செய்தியை வாசித்துக் காட்டும்படி வேண்டினார். அவரின் வேண்டுகோளின்படி அச் செய்தியை வாசித்துக்காட்டினேன் அன்று அவர் என்னோடு சுமார் அரை மணித்தியாளங்கள் பேசியிருப்பார். கல்முனை வரும்போது உங்களைச் சந்திப்பேன் என்று கூடக் கூறினார்.அப்படி அவர் இன்றுவரை சந்திக்கவில்லை. இப்படி அவர்களுக்காக செய்தி எழுதிய போதிலும் நான் மர்ஹும் அஷ்ரஃப் அவர்களையோ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களையோ சந்தித்து என்னால் எழுதப்பட்ட செய்தி தொடர்பாகவோ வேறு ஏதும் விடயமாகவோ இது வரையும் தொடர்பு கொள்ளவில்லை அவ்வாறுதான் எனது செய்திச் சேவையைச் செய்து கொண்டிருக்கின்றேன் என்பது நெற்றிக்கண்ணுக்கு விளங்காது.இது போன்று அமைச்சர் அதாவுல்லா அவர்களிடமும் மறைந்த எம்.ஏம்.எம்.ஜலால்தீன் எம்.பி அவர்களிடமும் சரித்திரம் உள்ளது. அதற்கும் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் சாட்சியாக உள்ளார்கள். நெற்றிக்கண்ணுக்கு தற்போது வயது என்னவோ தெரியாது. நான் வால் பிடிக்கும் செய்தியாளன் அல்ல, மக்களுக்காக செய்தி எழுதுபவன். என்பதை நெற்றிக்கண் அவர்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. ரஹூப்ஹகீம்ட ஆளிண்டா நியாயத கேக்கிறதில என்ன தப்பு கிழக்கு மாகாண சபையில் அவங்களுக்கும் பங்கு உண்டு என்பதெ மறக்கவேண்டாம் சகோதரர் நெற்றிக்கண் அவர்களே

    ReplyDelete
  4. yaar seythaal enna ? apiwiruthi nadanthaal pothu makkalukkuthaan nanmai.
    paathai amaippu enpathu oru naalil nadanthu mudiyum onralla; maylum Sainthamaruthil thaan athika alawu paathai apiwiruthi nadanthullathaaka ariya mudikinrathu.
    kurukiya sinthanaikalukku adimaip pattu wimarchippathai niruthunkal.

    ReplyDelete
  5. akkaraipattu, we are going to celebrate 2nd anniversary .
    arasiyella ethellam sahajamappa.

    ReplyDelete
  6. தனது பெயரைப் போட்டு முதுகெலும்புடன் கட்டுரை எழுதி இருக்கும் அந்த சகோதரரை முதுகேளும்பிள்ளமால் சொந்தப் பெயரைப் போடமல் எழுதும் உங்களைப் போன்ற கோழைகளைப் பற்றி யாருமே கணக்கெடுக்க மாட்டார்கள். ..........

    ReplyDelete
  7. அஹ்மத் ஜூனைத் அவர்கட்கு,
    ஏ.எல்.ஏ. போட்டதற்கு மன்னிக்கவும். நான் எழுதியது உண்மைதான் என்று உங்கள் நீண்ட நெடிய பதிலில் தெரிகிறது! பாவம் நீங்கள் எதையும் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம்! நீங்கள் விரும்பியதை எழுதுங்கள்! இதற்குப் பின் நான் பின்னூட்டல் எதுவும் உங்கள் கட்டுரைக்குச் செய்யாமல் இருக்க முயற்சி செய்கிறேன்!

    ஜுனைத் அவர்களே நம் இருவருக்கும் இடையில் யார் இந்த "Ibnuabdullah" தமிழின் முதுகெலும்பு உடைத்து - முந்திரியக் கொட்டைபோல், எழுதத் தெரியாமலும், நன்றாய் எழுத வராமலும் - கஷ்டப்பட்டிருக்கும் இந்த இப்னுக்கு என் அனுதாபங்கள்!!!!

    ReplyDelete
  8. நெற்றிக்கண் சகோதரருக்கு....
    சகோதரரே! இதற்குப் பின்னர் நான் எதுவித பின்னூட்டலும் எழுதமாட்டேன் எனத் தெரிவித்திருந்தீர்கள். ஏன் அப்படியான முடிவுக்கு வந்தீர்கள். கட்டுரை,செய்திகளுக்கு தமது கருத்துக்கள், அபிப்பிராயங்களை தெரிவித்து எழுதுவது உங்களின் சுதந்திரம் அதை யாராலும் தடுக்க முடியாது தொடர்ந்து எழுதுங்கள். ஆனால், தனிப்பட்ட முறையில் யாரையும் யாரும் தாக்கி கருத்துக்கூறி எழுதுவது சரியல்ல.அது நாகரிகமும் அல்ல.உங்களிடம் நல்ல பண்புகளும் இருக்கின்றது என்பதற்கு உங்களின் இரண்டாவது கடிதம் சான்று. ஆனால், மற்றவர்களைத் தாக்கி எழுதக்கூடாது சுவரில் எறியும் பந்து மீண்டும் எம்மிடமே வருவது போல் அது எம்மையே வந்து சேர்ந்துவிடும்.
    நன்றி - ஏ.எல்.ஜுனைதீன்.

    ReplyDelete

Powered by Blogger.