Header Ads



தற்கால பிரச்சினைகளை அரசியலாக்க வேண்டாம் - அமைச்சர் அதாஉல்லா வாய் திறந்தார்..!



(ஜே.எம். வஸீர்) 

சம்மாந்துறை பிரதேச சபைக்கான புதிய நிருவாகக் கட்டிடம் 33 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. அதற்கான அடிக்கல்நடும் விழா சம்மாந்துறைப் பிரதேச சபை தவிசாளர் நௌசாட் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதியாக தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. அப்துல் மஜீட், மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் புத்திஜீவிகளும் கலந்து கொண்டார்கள். 

அதன் பின்னர்; நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா,

இன்று சம்மாந்துறைக்கு வரலாற்று முக்கியத்துவமான நாளாகும். நாடு முழுவதும் பல அபிவிருத்தித்திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதில் ஓர் அம்சமாகவே இன்று சம்மாந்துறையின் பிரதேச சபை நிர்வாகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது. உள்ளுராட்சித் துறையிலும் நிறைய அபிவிருத்தி வேலைகள் நாடு பூராகவும் எனது அமைச்சின் மூலம் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக புறநெகும வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் காணப்படும் சுமார் 100ற்கும் அதிகமான உள்ளுராட்சி சபைகள் திட்டமிட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. 

எமது நோக்கம் உள்ளுராட்சி சபைகளை எதிர்காலத்தில் வளமுள்ளதாக மாற்றியமைப்பதே. மக்களுக்கான பணிகள் இந்த உள்ளுராட்சி சபைகள் மூலமாகவே நடைபெறுகின்றது. உள்ளுராட்சி சபைகள் நிறைவான சேவைகளை வழங்குவதன் மூலமே மக்களை திருப்திப்படுத்த முடியும். அதனூடாகவே மக்களின் வாக்குகளையும் எதிர்பார்க்க முடியும். எதிர்காலத்தில் வட்டார முறையில் உள்ளுராட்சி தேர்தல்கள் நடைபெறப்போகின்றது. அதற்கான வேலைகளை எனது அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள்தான் வட்டாரத்தின் தலைவர்கள். அவர்களுக்கு எல்லா அதிகாரங்களும் வழங்கப்படும். நாடு பூராக காணப்;படும் உள்ளுராட்சி சபைகளின் கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. அவ்வாறான கட்டிடங்களை நாம் இனங்கண்டு புதிய கட்டிடம் நிர்மானிக்க நிதியுதவி வழங்கி வருகின்றோம்.

 இந்த அடிப்படையில் பொத்துவில், இறக்காமம், அட்டாளைச்சேனை போன்ற உள்ளுராட்சி சபைகளை நிர்மாணித்தும், நிர்மாணிக்க உதவி புரிந்தும் வருகின்றோம்.  இவ்வாரிருக்க தேர்தல் காலங்களில் ஏதோ ஒரு விடயத்தை கையில் எடுத்துக் கொண்டு பத்தி எரிகின்றது என்று சொல்லிக் கொண்டு உங்கள் வாக்குகளைப் பெற வேறு ஒரு கூட்டம் வரும். அவர்களுக்கு நீங்கள் வாக்களிப்பீர்கள். கட்டிடங்களையும் அபிவிருத்திகளையும் மேற்கொள்ள நாம் இருக்க வேண்டும். பாருங்கள் இந்த நிலவரத்தை. மக்கள் நிதானமாக சிந்திக்க வேண்டிய காலம் வந்திருக்கின்றது. நாங்கள் எந்த அபிவிருத்திகள் செய்தாலும் அதனை திட்டமிட்டு சரியாக மேற்கொள்கின்றோம். எதிலும் தூய்மையான எண்ணம் வேண்டும். எண்ணம்தான் வாழ்வு. கட்டிடங்கள் கட்டும் போது முறையாக திட்டமிட்டு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் பின் சந்ததி எம்மை திட்டும். அந்த சரியான வழியில்தான் சம்மாந்துறைப் பிரதேச சபைக் கட்டிடம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் சம்மாந்துறைக்கான இன்னும் பல அபிவிருத்திப் பணிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான முழு உதவியையும் தவிசாளர் நௌசாட் அவர்ளுடன் இணைந்து எதிர்காலத்தில் வழங்க தயாராகவிருக்கின்றேன். அதுமாத்திரமன்றி சம்மாந்துறை பிரதேச சபையை தரமுயர்த்தி நகர சபையாக அழகுபார்ப்பதற்கும் நான் எண்ணியிருக்கின்றேன். அந்த விடயமும் மிக விரைவில் நடைபெறும். 

இதை எல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு ஒரு முக்கியமான விடயத்திற்கு வருகின்றேன். என்னைப் போன்றவர்கள் இந்த காலகட்டத்தில் பேசவில்லை என்று நீங்கள் நினைத்திருக்கலாம். பத்திரிகைகளில்தான் நான் பேசவில்லை. இருந்தாலும் இந்த அதாஉல்லா பேச  வேண்டிய இடத்தில் பேசியும் சண்டை பிடிக்க வேண்டிய இடத்தில் சண்டை பிடித்தும் நிதானமாக பேச வேண்டிய இடத்தில் நிதானமாக பேசியும் உங்களுக்காக உரத்துக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் என்ற செய்தியையும் உங்கள் முன் கூறுகின்றேன். 

எனது வாழ்வில் நான் அரசியலுக்காக பொய் கூறியது இல்லை. தேவையில்லாதவற்றை ஊடகங்களில் பேசி பத்திரிகைகளுக்கு செய்தி வேண்டுமென்பதற்காக செய்தி கொடுத்து மக்களை சூடாக்கி அதில் அரசியல் செய்பவன் நான் அல்ல. சமூகத்திற்கு உண்மையான தலைவர்கள் சமூகத்திற்காக உள்ளொன்று புறமொன்று பேசி குழப்பத்தை ஏற்படுத்தவும்மாட்டார்கள். 

அதனடிப்படையில் தேவையான விடயங்களை மிகவும் அமைதியாக செய்து வருகின்றேன். அதுதான் தலைமைத்துவப் பண்பு. அவர்கள்தான் தலைவர்கள், நேரத்திற்கு நேரம், காலத்திற்கு காலம் வாக்குகளைப் பெறுவதற்காக மக்கள் மத்தியில் நான்தான் தலைவர் என்று அடையாளப்படுத்துவதற்காக பேசக்கூடாதவற்றைப் பேசி பின்னர் அதனை பகிரங்கமாக வாபஸ் பெற்றுக் கொள்வதும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு முகம் கொடுக்க இயலாமல் தடுமாறுவதும்  வரலாற்றில் நமக்கு கற்ற விடயங்கள் நிறையவே உள்ளது. தலைவர்கள் என்பவர்கள் சமூகம் பிழையாக நடந்தாலும் சமூகத்தினை வழிநடாத்த வேண்டியவர்கள். சமூகத்தின் உணர்வுகளை அடக்க வேண்டியவர்கள் சமூகத்திற்கு நன்மை தீமைகளை எடுத்துக் கூற வேண்டியவர்கள் அதற்காகத்தான் சமூகம் எங்களை வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியிருக்கின்றார்கள். இல்லாவிட்டால் சமூகம் முடிவெடுப்பதாயின் சமூகம் எம்மை பாராளுமன்றம் அனுப்பத் தேவையில்லை. ஆகவே எந்தெந்த இடத்தில் இருக்கமாக பிடிக்க வேண்டுமோ எந்த இடத்தில் மெதுவாக பிடிக்க வேண்டுமோ அங்கெல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப நடந்து மக்களை சரியாக வழிநடத்துபவர்கள்தான் உண்மையான தலைவர்கள். 

அந்த வகையில் சரியான விடயத்தை பிழையான சந்தர்ப்பத்தில் செய்தால் அது பிழைத்து விடும். பிழையானவற்றை சரியான நேரத்தில் செய்தால் கூட அது சரியாகிவிடும். காலத்திற்கு காலம் ஒவ்வொன்று வரும் அதனை முறையாக எதிர்கொள்ள வேண்டும். அதற்கு முறையான தீர்வுகளைப் பற்றி உண்மைக்கு உண்மையாக சிந்தித்தால் அது சரியாகிவிடும். அதனை வைத்து அரசியல் இலாபம் தேட முனைந்தால் தீர்வு கிட்டாது. ஏனென்றால் அங்கு இஹ்லாசான எண்ணம் இல்லை. எதிலும் இஹ்லாசாக நடக்க வேண்டும். 

நாம் கிழக்கிலிருந்து வீரம் பேசி ஊடகங்களில் அறிக்கை விடுவது சிறிய விடயம். ஆனால் கிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம்களையும் அங்கு அமைந்திருக்கின்ற பள்ளிவாயல்கள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். அதனை எண்ணித்தான் அறிக்கைளையும் விட  வேண்டும். சற்று சிந்தித்துப் பாருங்கள். இவைகளையெல்லாம் கருத்திற் கொண்டுதான் பத்திரிகைகளில் அறிக்கை விட வேண்டும். எனக்கு அறிக்கை விடத் தெரியாமலில்லை. கிழக்கிற்கு வெளியில் ஏற்படும் பாதிப்புக்களையும் சிறுபான்மையாக வாழும் எமது மக்களைப் பற்றியும் யோசித்து விட்டுத்தான் நான் சூடான அறிக்கைகளை விடுவதில்லை. இழந்தால் இலகுவில் பெற முடியாது. இழக்க முன் சிந்திக்க வேண்டும். 

ஓர் அரசியல் தலைமை ஒரு நடவடிக்கையில் ஈடுபட முன் அதன் சாதக பாதகங்களை எண்ண வேண்டும். அதனை விடுத்து இவ்விடயத்தை வைத்து வாக்குகளை நாம் அதிகரிக்க வேண்டுமென்று எண்ணக்கூடாது. அது உயிருள்ளதாக அமையாது. மக்களுக்கு செய்யும் துரோகம் அது. எப்போதும் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். எல்லா  சேனாவையும் மீறிய சக்தி அல்லாஹ்விடம்தான் இருக்கின்றது. இதை நாம் மறந்து விடக் கூடாது. நாம் என்னதான் சிந்தித்தாலும் செய்தாலும் அல்லாஹ் நாடியது நடக்கும். இஸ்லாமியர்களான நமக்கு நூறு வீத நம்பிக்கை இருக்க வேண்டும். 

இந்த நாடு பல்லின சமூகங்கள் வாழும் நாடு. எல்லா சமூகத்திற்குள்ளும் பிரச்சினை இருக்கின்றது. முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது. தமிழர்களுக்கும் தமிழர்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது. சிங்களவர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் மத்தியில்தான் எல்லா சமூகங்களும் வாழ்ந்து கொண்டு வருகின்றோம். முஸ்லிம்களாகிய நாம் அனேகமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பழகி இருக்கின்றோம்;. பள்ளிவாயல்களில் தொழும்போது சுஜூதிலும், ருக்ஊவிலும் சஹிதாக்கப்பட்டிருக்கின்றோம். இதனைப் பார்க்கவும் உணர்ச்சி வேறொன்றிலும் வர முடியாது. ஏன் முஸ்லிம்களாகிய நாம் வயல்களில் கொன்று குவிக்கப்பட்டிருக்கின்றோம். குடும்பம் குடும்பமாக கொன்று குவிக்கப்பட்டிருக்கின்றோம். புனித மக்கா பயணம் செல்லும் போது சஹீதாக்கப்பட்டிருக்கின்றோம். தாய் முன் தந்தையும் தந்தை முன் தாயையும் தாய் தந்தை முன் பிள்ளைகளையும் துண்டாடக் கண்டிருக்கின்றோம். எவ்வளவு அனுபவம் எமக்கிருக்கின்றது. இதனை எந்த பத்திரிகைகளும் அன்று எழுதவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் இதற்கு முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. பத்திரிகைகள் அதனை எல்லாம் மறைத்துதான் எழுதியது. குறிப்பாக தமிழ் ஊடகங்கள் இவற்றையெல்லாம் செய்தவர்களை பயங்கரவாதிகள் என்று கூட எழுதவில்லை போராளிகள் என்றே சொல்லப்பட்டது. இதுதான் நிலவரம் அவற்றை நாம் மறந்து விடக் கூடாது. 

முஸ்லிம் சமூகமான நாம் வரலாற்றில் எதிர் கொண்ட கசப்பான விடயங்கள் இவை. இன்று பல கோணங்களிலிருந்து முஸ்லிம்களுக்கு எதிரான பல விடயங்கள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. இவைகளை ஒரு சாரார் தூண்டுகின்றனர். இதற்கு பின்னணியில் யாரும் இருப்பார்கள். பத்திரிகைகளும் இதனை குழப்புகின்றன. பத்திரிகையை பார்த்து மாத்திரம் நீங்கள் எதனையும் தீர்மானிக்கக் கூடாது. முஸ்லிம்கள் பத்திரிகை மாத்திரம் பார்த்து முடிவெடுத்து தீர்மானிக்கக் கூடியவர்களாக நாம் இருக்க முடியாது. 

ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு நோக்கத்தைக் கொண்டு செயற்படுகின்றது. சில பத்திரிகைகள் கூட்டி விடுகின்றன. அல்லது ஒரு சாராரை மற்ற சாராரிடம் இணைத்துக் கொள்ள எழுதுகின்றது. சில பத்திரிகைகள் நிதானமாகவும் செயற்படுகின்றன. அவர்களின் உள்ளத்தில் என்ன இருக்கின்றது என்று எமக்குத் தெரியாது. முஸ்லிம்கள் தனிக் காலாசாரத்தைக் கொண்டவர்கள்.  அவர்களுடைய பாதை தனித்துவமானது. முஸ்லிம்களின் உடை தனித்துவமானது உணவு  தனித்துவமானது என்பதனை இன்று எல்லா சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஏன் அண்மையில் சம்பந்தன் ஐயா கூட பாராளுமன்றத்தில் பேசி இருக்கின்றார். முஸ்லிம்கள் தனிக் கலாசாரத்தை கொண்டவர்கள் என்று. 

ஏற்கனவே கூறியது அதுவல்ல. இஸ்லாமியத் தமிழர்கள் என்று சொன்னார்கள். ஆனால் இன்று சொல்கிறார்கள். முஸ்லிம்கள் தனித்துவமானவர்கள் என்று. முஸ்லிம்களின் உணவு உடை என்பது தனித்துவமானது என அவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். தற்காலப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டவர்களும் பெரும்பான்மை இனத்தவர்களும் இப்போது இதனை ஏற்றுக் கொள்கின்றார்கள். அதற்கு அல்லாஹ்வுக்கு சுக்ர் செய்ய வேண்டும். 

ஒரு பிரச்சினை உருவாகித்தான் முஸ்லிம்களை பற்றி மற்றைய சமூகத்திற்கு தெளிவு வருகின்றது. கலகம் பிறந்துதான் நியாயம் பிறக்கும். இப்போது முஸ்லிம்கள் தனித்துவமானர்கள் என்ற விடை பிறந்திருக்கின்றது. இவைகளைப் பற்றி நாம் ஆழமாக சிந்திக்க  வேண்டும். வுpடிந்தவுடன் பத்திரிகையை மாத்திரம் பார்த்து விட்டு இதோ பார்த்தீர்களா அங்கு அப்படி இங்கு இப்படி என்று தீர்மானம் எடுக்க வேண்டாம். அதிலிருந்து நாம் விடுபட வேண்டும். வருகின்ற செய்திகள் அனைத்தும் உண்மை என்று நினைக்க வேண்டாம். அதன் உள்ளார்ந்தம் என்ன என்று உங்களுக்குத் தெரியாது. சம்பந்தனின் பேச்சினில் உள்ள உள்ளார்ந்தம் என்னவென்று எமக்குத் தெரியாது. ஏன் பெரும் கதைகள் சொல்லும் பொதுபலசேனாவின் கருத்துக்களும் அவர்களின் உள்ளார்ந்தமும் எமக்குத் தெரியாது. அதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்றும் எமக்குத் தெரியாது. நிச்சமாக தெரியும் விடயமொன்று அல்லாஹ்வை யாரும் ஏமாற்ற முடியாது. அவனை மீறி ஒன்றும் நடக்கவும் முடியாது. அவன் முடிவுதான் இறுதி முடிவு. 

எனவே மீண்டும்  சொல்கின்றேன் வீராப்பு அறிக்கைகளை விடுவது சிறு விடயம். அவைகளினால் ஏனைய இடங்களில் வாழும் சமூகத்திற்கு பாதிப்பாகிவிடக்கூடாது. இதில் நாம் கவனமாக செயற்பட வேண்டும். நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளைப்பற்றி அதாஉல்லா பத்திரிகைளில் அறிக்கை விடவில்லை என யாரும் சிந்திக்க வேண்டாம். அதாஉல்லா பேச வேண்டிய இடத்தில் பேசிக் கொண்டிருக்கின்றான். அவைகளை பேசிவிட்டு இப்படி பேசிவிட்டேன் என்று பத்திரிகைகளுக்கு கூறி அதில் அரசியல் செய்ய நான் விரும்பவில்லை. பத்திரிகை செய்திகளை அல்லாஹ்வாக நம்ப வேண்டாம். முதல் அல்லாஹ்வையும் இரண்டாவதாக முஸ்லிம் தலைவர்களாகிய எம்மையும் நம்புங்கள். 

இலங்கை வரலாற்றில் ஒரு பிரதிக் கல்வி அமைச்சராக இருந்து நமது தலைமை அவமதிக்கப்பட்டது என்பதற்காக நமது சமூகம் தலை குணிந்து விட்டது என்பதற்காக சமூகத்திற்காக முதன் முதலில் ராஜினாமா செய்தவன் என்றால் வரலாற்றுப் புத்தகத்தை புரட்டிப் பாருங்கள். அது நானாகத்தான் இருக்கின்றேன். என்னை மீண்டும் உரசிப்பார்க்க வேண்டியதில்லை. முஸ்லிம் சமூகத்திற்காக எதனை எங்கு செய்ய வேண்டுமோ அதனை அமைதியாக  அங்கெல்லாம் செய்து கொண்டிருக்கின்றேன். நாம் சமூகத்திற்காக எதனையாவது இழந்து எதனையாவது பெற வேண்டும் என்றிருந்தால் அதில் உண்மைக்கு உண்மையான நியாயம் இருந்தால் எதனையும் இழந்து நம் சமூகத்திற்கு நியாயத்தைப் பெற அதாஉல்லா தயாராக இருக்கின்றான். எனவே முஸ்லிம்கள் பொறுமை காக்க வேண்டும். அதுதான் எமது பிரதான ஆயுதம். பிரச்சினைகளை அனுகும் முறையில் நாங்கள் அனுகிக் கொண்டிருக்கின்றோம். நிச்சயம் தெளிவு பிறக்கும் எனவும் அமைச்சர் தனதுரையில் தெரிவித்தார். 

17 comments:

  1. அமைச்சர் அவர்களே!
    வெளிப்படையாகவே சொல்கிறேன், உங்களை இன்னும் என் இதயம் ஏற்க இடம்தர கொஞ்சம் இம்சைபடுகிறது. இருப்பினும் எங்கள் ஊர் பிரச்சினையை மிகச் சாதுர்யமாகச் செய்து, தலைக்கு வந்ததை தலிப்பாகையோடு போக வைத்ததற்கு. நன்றிகள் பல. இந்த நன்றியை இத்தருணத்தில் நன்றி நவிலுகிறேன்.

    நீங்கள் இந்தப்பேச்சை பொத்துவில் பிரச்னைக்கு முன் கதைத்திருந்தால், நிச்சயமாக, திண்ணமாக, உங்களைத் திட்டித்தீர்த்திருப்பேன். அப்படி ஒரு ஒவ்வாமை எனக்குள் இருக்கிறது.

    முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால், முடித்துக்கொடுப்பர்கள் என்று நினைத்தவர்களெல்லாம், ஒரு நிலையில்லாமல் இருந்த நேரத்தில் நன்றாக காய் நகர்த்தினிர்கள்! பாராட்டுக்கள்.

    இன்னும் பாப்போம்! அதுவரைக்கும் நம்பிக்கை வைக்கவும் மாட்டோம் வையவும் மாட்டோம்!

    ReplyDelete
  2. சாத்தான்கள் வேதம் ஓதத்தொடங்கி விட்டன. " தற்கால பிரச்சினைகளை அரசியலாக்க வேண்டாம்" என்று கூறி அரசியல் நடத்தும் பச்சோந்தித்தனம் உங்களின் கைவந்த கலை. // நாடு பூராக காணப்படும் உள்ளுராட்சி சபைகளின் கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. அவ்வாறான கட்டிடங்களை நாம் இனங்கண்டு புதிய கட்டிடம் நிர்மானிக்க நிதியுதவி வழங்கி வருகின்றோம்.// என்று கூறியுள்ளீர்கள். " மிகவும் மோசமான நிலையில் காணப்படுவது கட்டிடங்கள் மட்டும்தானா? .ஐயா உண‌மைதான் கட்டிடம் நிர்மானிக்க நிதியுதவி வழங்கி வருகின்றீர்கள் அதற்குள் அடங்கியிருக்கும் உங்கள் பங்கு என்ன? பரம்பரைப் பணக்காரன் என்று மட்டும் கூறி விடாதீர்கள். ஆசிரியராய் இருந்தபோது உங்கள் வங்கியின் பண பலம் என்னவென்பதும் தெரியும், இன்று உங்களின் சொத்துமதிப்பு என்னவென்பதும் தெரியும். இது யாரின் பணம்? இது யாரின் சொத்து? அல்லாஹ்விடம் இதற்கு எப்படி பதில் கூறப்போகிறீர்களோ தெரியவில்லை

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. # உங்களது வாழ்வில் அரசியலுக்காக பொய் சொல்லவில்லை,
    அப்படியானால் சென்ற மாகாணசபை தேர்தலில் எந்த பள்ளியும் தாக்கப்படவில்லை என்று சொன்னது உணமையா?
    # முன்னால் அமைச்சர் பேரியல் அஷ்ரப் யினால் கொண்டுவரப்பட்ட தீகவாபி சுனாமி வீட்டுத்திட்டத்தில் நீங்கள் தலையிட்டு குலைத்தது பொய்யா?
    # ஹலால் பிரச்சினை மற்றும் பன்றி உருவத்தில் அல்லாஹ் என்ற வாசகம் எழுதி ஊர்வலம் சென்று எரித்தனர். அதற்கு நீங்கள் வீராப்பு அறிக்கைகளை விட வேண்டாம், குறைந்த பட்சம் பாராளுமன்றத்தில் கண்டமாவது தெரிவிக்காதது ஏன்?
    இது மன்னிக்க முடியாத குற்றம்.
    ஒவ்வொரு முஸ்லிமின் மனம் நொந்தது உங்களுக்கு தெரியாத அமைச்சேரே?
    பாராளுமன்ற தேர்தலில் நானும் உங்களுக்கு வாக்களித்தவன். இனிமேல் தற்போது பாராளுமன்றத்தில் உள்ள எவருக்கும் வாக்களிக்க மாட்டேன்.!

    ReplyDelete
  6. What happened to the houses built in Akkaraipattu by Saudi Government. What you did to get those houses for Muslim tsunami victims. How long you are going to wait to solve this problem. Are you waiting until someone solve this problem to make a statement like this.
    Will wait and see how long you can cheat Muslims like this.

    ReplyDelete
  7. அன்பின் சகோதரர்களே!

    நான் நினைக்கிறேன், இந்தக் கருத்துக் கூறலில் அதிக கடுஞ் சொற் கணைகள் எறியப்பட்டவர்கள் இரண்டு பேர்,
    1. சகோதரர் றஊப் ஹகீம் 2. சகோதரர் அதாஉல்லாஹ்.

    இந்தக் கணைகள் தனிப்பட்ட அவர்களுக்கு வீசப்பட்டவைகளே தவிர அவர்கள் கருத்துக்காக அல்ல!

    நானும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் இவ்விருவரின் அரசியல் நடவடிக்கைகளை அறிந்தவன் என்ற வகையிலும், இவர்களின் போர்களில் இருதலைக் கொள்ளியானவர்களுள் நானும் ஒருவன் என்ற காரணத்தினாலும்; கருத்துக் கூற எனக்கு தகுதியும் உரிமையும் இருக்கிறன என்று நினைக்கிறேன்.

    உங்கள் அனைவரின் கருத்துக்களையும் மதிக்கிறேன். கண்ணியத்தோடு மதிக்கலாமா? என்று கேட்டால் ஆமென்று சொல்ல மறுக்கிறேன்.

    அவ்வளவு தரம் குறைந்ததாக உள்ளது நம் கருத்துக்கள்.
    [எனக்கு இன்னுமொரு சந்தேகம் சகோதரர்களுக்குள் சச்சரவைக் கொண்டுவர முஸ்லிம் பெயர்களில் எழுதும் கைக்கூலிகளும் இருக்கலாம், கையாலாகாதவர்களும் இருக்கலாம்.]

    எதற்கும் விழிப்பாகவும், தெளிவாகவும் இருப்போம்!

    நாம் முஸ்லிம்கள். முன்மாதிரிகளாய் இருக்க வேண்டியவர்கள். ஆனால் எந்த மாதிரியும் இல்லாமல் இருக்கிறோம்!

    நாம் நாகரிக எல்லைகள் தாண்டக் கூடாதவர்கள். ஆனால் மிகவும் சௌகரிகமாக நாகரிக எல்லைகளை உடைக்கிறோம்!

    நாம் வகுப்பு வாதம் இல்லாத சமூகம். ஆனால் வகுப்பு வாதம், கட்சி வாதம், ஊர் வாதம் என்ற அசிங்கத்துகுள் இறங்கி நாமே நமக்கு அழுக்குகளையும், அருவருப்புகளையும் பூசிக்கொள்கிறோம்.

    நம்மைத் தூண்டி விட்டு நம்மைத் தாண்டிவிடப் பார்கிறார்கள்.

    மற்றவர்களுக்கு அவல் கொடுக்கிறோம் அதிலும் பாகிட்டுக் கொடுக்கிறோம்! சும்மா ஆடும் பேய்களுக்கு பக்க வாத்தியம் போடுகிறோம்!

    நாம், அண்ணல் நபி அவர்களால் வடிவமைக்கப்பட்ட சமூகம்,
    நல் வழிகாட்டப்பட்டப் சமூகம்,
    சீராக வார்க்கப்பட்ட சமூகம்,
    முழுமையுடன் நிறைவு செய்யப்பட்ட சமூகம், ஆனால்

    முஸ்லிம்கள் என்ற பெயர் தாங்கிகளாய், அஃறிணைகளாய் நம்மில் பலர் இருந்து கொண்டிருக்கிறோம்.

    இதுவே இன்றைய சேனாக்களும், அன்றைய வனவிலங்குகளும் நம்மைக் கிள்ளுக்கீரைகளாய் எண்ணி இருக்கிறார்கள்.

    உங்கள் ஒவ்வொருவரின் கருத்திலும் உங்கள் உணர்சிகளை மட்டுமே காண்கிறேன். உருப்படிகள் ஊனப்பட்டிருக்கின்றன. குறை கூற வாய் திறந்தால், பேனா எடுத்தால், இரண்டையும் மூடமுடியாமல் போய்விடும்.

    அத்தனை தப்புக்களும், தவறுகளும் உள்ளன. உலகில் யாருமே நிறைவானவர்களல்லர்.

    நன்று படித்தவர்கள் கூட காழ்புணர்ச்சி காரணமாக, கட்சி சார்பு காரணமாக, ஊர் பேதம் காரணமாக, காரணம் சொல்லத் தெரியாத வெறுப்பு வைத்திருக்கிறார்கள். கண்மூடித்தனமாக ஒருபக்க சார்பாக எந்த பயமுமில்லாமல் திட்டித் தீர்கிறார்கள்.

    அந்த அளவுக்கு, அரசியலில்; நாம், எல்லாம் தமிழ் நாட்டு சினிமா நட்சத்திர ரசிகர் மன்ற உறுப்பினர்கள் போல் நடந்து கொள்கிறோம்! சிந்தனை, ஆய்வு, நன்மை, தீமை, பாவம், புண்ணியம், சரி, பிழை என எதுவுமே நம் தலைகளுக்குள் ஏறாமல்;

    அப்பப்போ உணர்வுகள் சொல்வதை மட்டுமே கேட்டுப் பழகி விட்டோம்! கருத்துச் சொல்லும் களம் மன இறுக்கம் வீசும் இடமாக மாறியுள்ளது.

    இதில் நிச்சயம் நமக்குள் மாற்றம் வேண்டும்! நாம் மிகவும் இக்கட்டான நிலைக்குள் தள்ளப் பட்டிருக்கிறோம்! இன்னும் தள்ளப்பட்டவாறே கிடக்கிறோம்! யார் இந்தப் பள்ளத்தாக்கில் இருந்து மீட்பார்? யாருமிலர்!
    பிரிந்திருக்கும் நாமே ஒன்று கலந்து, நாமே கை கோர்த்து, நாமே தோள் கொடுத்து, நாமே ஒன்றிணைந்து, நாமே பலம் சேர்த்து, நாமே கலைத் தினகரன்போல்; புதுச் சக்தியுடன், வெற்றி பெறுவோம் என்ற யுக்தியுடன் தொப்பிள்கொடி உறவுகளாய், ஒரு கொடியின் மலர்களாய் ஒருவருக்கொருவர் படிகளாகியும், தடிகளாகியும், ஏணிகளாகியும், ஏதங்கள் ஆகியும் வெளி வரவேண்டும்! அல்லாஹ்வின் உதவியால் விடிவு பெறவேண்டும். நாம், நம்பி நடத்தல் விலக்கி, நம்ப நடக்க பழகிக்கொள் வோம்.

    கண்டிப்போம்! கௌரவமாய் கண்டிப்போம்! கருத்துக் கூறுவோம் ஒரு முஸ்லிமாய்க் கூறுவோம்! சேருவோம் எல்லோரும், இன்ஷாஅல்லாஹ் விரைவில் ஒன்று சேருவோம். ஆமீன்.

    ReplyDelete
  8. மெய்ப்பொருள்! உங்கள் கருத்தை நான் முற்றாக ஆதரிக்கிறேன். ஊர்வாதம்,பிரதேச வாதம் என்னும் பித்துப்பிடித்து அலைகின்ற வாசகர்களை அதிகமாக இங்கு காண்கின்றேன். இந்தக்கூட்டம்தான் அதாஉல்லா மட்டும் முஸ்லிம்களின் பிரச்சினை சம்பந்தமாக வாய் திறக்கவில்லை என்று இதே website இல் வாய் கிழியக் கத்தினார்கள் ஆனால் இப்போது சம்பந்தமே இல்லாமல் எழுதுகிறார்கள். இந்தக்கூட்டத்தின் வேலையே அதாஉல்லா என்ன செய்தாலும் அதில் குறை காண்பதுதான், இதற்கு முஸ்லிம்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் போல் கருத்தை எழுதுகிறார்கள்.இதைத்தான் எமது முதியோர் பின்வருமாறு சொல்வார்கள் "விருப்பமில்லாத புருஷன் பொண்டாட்டிக்கு கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குற்றம்" அதற்கு நல்லதொரு உதாரணம்தான் Gee இன் comment. உண்மையிலேயே நெய்யைப்போன்று தலைக்குள்ளிருப்பது உருகிவிட்டதா என்று எண்ணத்தோன்றுகிறது. அனைவருக்கும் அல்லாஹ் உண்மையான சமூகப்பற்றைத்தந்தருள்வானாக.

    ReplyDelete
  9. அன்பான மெய்ப்பொருள் கருத்தாளரே, நல்லவிடயம் சொன்னீர், ரகமாய் சொன்னீர். மிகவும் நியாயமானவர்போல் சொல்கிறீர், நல்லது. ஆனால்,ஏன் உங்கள் வியாக்கியானத்தை அமைச்ச‌ர்கள் றிசாத், ஹகீம், ஏனைய முஸ்லீம் தலைமைகள் என்று சொல்லிகொன்டிருப்பவர்களை திட்டித்தீர்த்தபோது செய்யவில்லை. எம் சகோதரர்கள் இந்த கருத்துகூற‌லின் மூலம் அரசியலும் செய்தார்கள். இந்த இணயதள ஆசிரியர் தணிக்கை செய்யாமலே சிலவற்றை பிர‌சுரித்ததும் இந்த இணயதளத்துக்கு நல்லதல்ல என்று கூட நினைக்குமள‌வுக்கு மிகவும் கேவலமாக பேசித்தள்ளினார்கள். இப்பொது மட்டும் தாங்கமுடியாமல் பயான் பண்ணுகிறிர்கள். நீன்ட நாட்களுக்கு பின் அதாஉல்லஹ் அமைச்ச‌ர் வாய்திறந்த சேய்தியின் கருத்துகலளுக்கு மட்டும் இப்படி பயான் பண்ணுவது ஏன்?இது எப்பொதும் எமக்குள் இருக்கவேன்டியவையே.

    ReplyDelete
  10. அமைச்சர் அவர்களே
    வாய் திறந்தாலும் திறக்காவிட்டாலும் நீங்கள், ஹகீம், றிசாத், ஏன் புதிய தானைத் தளபதியான ஆசாத் சாலி யாருக்கும் இனி முஸ்லிம்கள் மத்தியில் சந்தை கிடையாது நீங்கள் புதிய தலைமைகளைத் தேடிக் கண்டுபிடிக்க‌வே சொல்கிறீர்கள் அரசியல் தலைமைகள் அரசியல்தான் செய்கிறார்கள் எங்களுக்கு நீங்களும் ஒன்றுதான் ஹகீமும் ஒன்றுதான் எல்லாமே ஒரே குட்டைடியில் விளைந்த மட்டைகள்தான். போங்கள் இனியும் உங்கள் கதை வேண்டாம் தலைவரே.
    உரிமை அரசியல் வேண்டாம் என்று அபிவிருத்தி அரசியல் செய்தீர்(அக்கரைப்பற்றுக்கு மட்டும்), இன்று மத அடையாளங்களைக் கூட அழித்தொழிக்கும் போது அரசியல் செய்ய வேண்டாம் என்கிறீர். அப்போ அரசியலுடாக எதைச் செய்கிறீர் ? எமது ஹலால், ஹீஜாப், பள்ளிவாசல், களுக்கில்லாத அரசியல் வேறு எதற்கு இன்டகூலருக்கும், பிறாடோவிற்குமா ? போங்கள் தலைவரே நாற்றமெடுக்கிறது.

    ReplyDelete
  11. மெய்ப்பொருளாரின் கருத்தில் எனக்குக் கருத்து வேறுபாடு கிடையாது .காழ்ப்புணர்ச்சியற்ற கருத்துக்களால்
    கருத்துக்களம் மணம் பரப்பட்டும்.

    ReplyDelete
  12. YAARAYUM YAARUM KURAI KOORA WENDAM. ELLORUM NAMMAWARHAL. SAMOOHATHTHUKKU ELLORUM AWASIYAM.

    ReplyDelete
  13. Dear Mr He Openion,

    My start had a start trouble because of you. This is the first time I am writing after an extended monitoring of the comments of our brothers. Somewhere I have to start unintentionally started with your opponent’s articles. It is beyond my control that might have ignited you to write.

    You have condemned me in a sarcastic way that I have pretended to be reasonable, pretended to be a preacher and biased. It clearly shows depth of your fury against Mr Athaullah. I do not know that the grudge may be reasonable or unreasonable.

    But my intention is simply pure and written towards obtaining a positive impact. Your comment did not hurt me but my purity, I still reiterate my comment is genuine and I respectfully asked you to go back to it and read. This is the first word Allah (SWT) sent to Rasoolullah “READ”.

    I have read many of your comments too and others as well. I remember you have written in English too, hence let me explain in English. I have a list of commentators and their respective interests and demagogues. I can boldly say that you did not read my comments whole heartedly. ‘You have jumped the gun’’.

    I remember a wonderful saying in English, It exactly fits with your comment that: “People listen with the intention of reply, not with the intention of understanding it”. Some or one line of my comment might have hurt you. If so I am sorry that is not intentional may be a coincidence.

    I have noticed your comments a couple of time that you have reprimanded, degraded and slurred Mr Athaullah in your comments. I did not say those were wrong; those are your opinions, but those comments definitely say, naturally, you are dead against to Mr Athaullah. This is the case in others who hate Mr Rauf Hakeem or any others.

    This is what I have clearly saying you all are throwing your hostilities with the label of comments. My humble request is to stop that and to start thinking differently, I mean, OUT OF THE BOX!

    Trust me, Brother Rauf, Athaullah and other Muslim parliamentarians; I consider them as my brothers with ups and downs. Nobody is perfect and we find very difficult to see a role-model. Many of us are victims of presumed role-model(s).

    How can we expect others to be perfect when we have with in our nuclear family, there are “black sheep”. This is the reality. So what we have to do is to get our parliamentarians corrected rather than wrongly directed.

    My hope still lives where, at least, the Muslim politicians gather at a point where Islam becomes an issue. This unity, the uniqueness I am talking about.

    Do hope you must have understood my intention. And we all have to work together to see the togetherness and its steadfastness. We need peace soldiers! We need humanity platoons! We need people like you to raise voice when justice is denied! Insha Allah we will soon come under one umbrella! Under, which umbrella? Allah knows!

    May Allah guide us the right path! Aameen!

    ReplyDelete
  14. நானும் அக்கரைப்பற்றான் (நா.அ.) என்று பெயர் இட்ட தம்பி!

    கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது அக்கரைப்பற்றில் இடம் பெற்ற மு.கா.வின் இறுதிக்கூட்டம், உங்கள் ஊரின் தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்னாள் இடம்பெற்றதையும் அதில் நீங்கள் முதலாமவராக உரை நிகழ்த்தியதையும் நீங்கள் சற்று நினைத்துப் பாருங்கள்.

    தொண்டை கிழியக் கத்திய உங்களது உரை இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. அரசியலுக்காக தான் பொய் சொல்வதில்லை என்று அதாஉல்லா சொல்கிறார் என்று கூறிய நீங்கள் தம்புள்ளை பள்ளி உடைப்பைச் சொல்லி அதவுல்லாவைப் பொய்யாகினீர்கள் இது தருமாம எனவும் கேட்டீர்கள்.

    இப்போதும் மேலே உங்கள் கருத்துரையில் அதைத்தான் சொல்லி இருக்கிறீர்கள். சரி நா.அ. அவர்களே நீங்கள் வீரப்புடனும் உணர்சிவசத்துடனும் பேசிய தம்புள்ளைப் பள்ளி விவகாரத்தில் நீங்களோ அல்லது நீங்கள் ஆதரித்துப் பேசிய நீங்கள் பின் பற்றும் "மாதிரியோ" அல்லது உங்கள் கட்சியோ, அதன் தலைமையோ! சாதித்துக் கிழித்ததைச் சொல்லுங்கள் பார்க்கலாம்!

    ReplyDelete
  15. சகோதரர் ஆராய்ச்சி மணி,
    நான் அதாவுல்லா வின் எதிரி அல்ல.
    நான் அவரை மட்டும் குற்றம் சுமத்தவில்லை.
    தற்போது பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் M.P க்களையும் சுட்டிக்காட்டுகிறேன்.
    எனக்கு அரசியலில் அனுபவம் குறைவு, மேடை எரிப்பேசியதும் இல்லை.
    எதாவது குறையிருந்தால் மன்னிக்கவும்.
    முஸ்லிம் காங்கிரஸ் எதையும் கிழிக்கவில்லை.
    ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதுவும் கிளிக்கவும் இல்லை.
    * முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் ஒரே ஒரு தலைமகன் (ஆசாத் சாலி).
    சம்பந்தன் ஐயா பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு சார்பாக பேசியதற்கு எனது தனிப்பட்ட நன்றிகள்.

    ReplyDelete
  16. Eathum pirachchinai vanthal Athavulla vaai thirakka vendum anaal vote mattum muslim concress itku poduveyal.perum aasana palaththodu irukkum hakeeme vaai thurakkala.Asath sali vaai thoranthu house arest aahi ippothan mamanar thayavula ulathuraru athukkulla ivaraiyum vaayakkoduthu punnakka solrayela?

    ReplyDelete

Powered by Blogger.