Header Ads



காதி நீதிபதி தடுத்து நிறுத்தினார் - ரவூப் ஹக்கீமுக்கு ஏமாற்றம்


(அனா)

ஓட்டமாவடி காதி நீதிமன்றக் கட்டிடம் பூர்த்தி செய்யப்படாத நிலையில் அக் கட்டிடத்தினை திறந்து வைப்பது தொடர்பான வைபவத்தினை காதி நீதிபதி தடுத்து நிறுத்தியுள்ளார்.

நீதி அமைச்சின் 44 லட்சம் ரூபா செலவில் ஓட்டமாவடி மாஞ்சோலைப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்திற்கான காதி நீதி மன்றக் கட்டிடம் இன்று (13.04.2013) காலை 10 மணிக்கு நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைக்கவிருந்தார்.

இதற்கான அழைப்பிதழ்கள் நீதி அமைச்சின் செயலாளரினால் பிரதேசத்தின் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பிதழ்கள் விடுக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் இக் கட்டிடம் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் இக் கட்டிடத்தினை திறப்பதற்கு காதி நீதிபதி ஆற்சேபனை தெரிவித்துள்ளார். காதி நீதி மன்றத்தினை திறப்பது தொடர்பாக பலர் காதி நீதிபதியிடம் எடுத்துக் கூறியபோதும் அக் கோறிக்கைகள் எதுவும் செவிமடுக்கப்படவில்லை. இதனால் இக் கட்டிடம் தொடர்பான திறப்பு விழா வைபவம் பிற்போடப்பட்டுள்ளது. 

முக்கிய குறிப்பு  எமது பிராந்திய செய்தியாளரினால் அனுப்பிவைக்கப்பட்ட இச்செய்தி குறித்து, ஜப்னா முஸ்லிம் இணையம் ரவூப் ஹக்கீம் மற்றும் அவரது ஊடகச் செசயலாளருடன் தொடர்புகொண்டு விபரம் அறியமுயன்ற போதும் எமது முயற்சி பயன் தரவில்லை.



3 comments:

  1. open panna wenam ,, anna ennum konja nall wait pannuga podu balu sena sollum srilanka la alla katykoodum eludu mooda wenum nu ,, but adoko konjam time adukum ,, anralum lankala allarukum oresattam oreee madam nu warum wait and seeeeeeeeeeeeeeee baby

    ReplyDelete
  2. sevaigala maximama sainga kurotham kattathinga plz

    ReplyDelete
  3. வைபவத்தினை காதி நீதிபதி தடுத்து நிறுத்தவில்லை. இது உண்மைக்கு புறம்பான செய்தியாகும். கடந்த வெள்ளிக்கிழமை கட்டிட திறப்பு விழா தொடர்பான கூட்டமொன்றில் பிரதேசபை உறுப்பினர்கள், அமைச்சின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், அமைச்சின் பொறியியலாளர், காதி நீதிபதி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் பிரதேசவாசிகலும் கலந்துகொண்டனர். அதில் ஏற்கனவே திட்டமிட்டபடி கடந்த வியாழக்கிழமை கட்டிட வேலையை முடித்து தருவதாக கூறிய கொந்துராத்துக்காரர்கள் உரிய நேரத்தில் வேலையை முடித்து தராததால் முற்றுப்பெறாத நிலையில் அக்கட்டிடத்தை திறப்பதில்லை என்றும் முற்றுப்பெற்ற பின்னரே திறக்கப்படல் வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு 13.04.2013 நடைபெறவிருந்த கட்டிட திறப்பு விழா தற்காலிகமாக பிற்போடப்பட்டது . இருந்தும் கட்டிட வேலையை விரைவாக முடித்து தருமாறு கொந்தரத்துகாரர்களிடம் அமைச்சின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் அவர்களினால் பரிந்துரை செய்யப்பட்டது. அதேவேளை இந்த தாமதம் தொடர்பாக விசாரணை இடம்பெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கமைய பூர்த்தி செய்யப்பட்ட கட்டிடத்தை மிக விரைவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் திறந்து வைப்பார் எனவும் சொல்லப்பட்டது.

    ReplyDelete

Powered by Blogger.