Header Ads



சவூதி அரேபியாவில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு வழக்கறிஞர் பயுலுநர் அனுமதி

சவூதி அரேபியாவில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு வழக்கறிஞர் பயுலுநர் அனுமதி கிடைத்துள்ளது. அர்வா அல் ஹுஜைலி என்ற பெண்ணுக்கே வழக்கறிஞர் பயிலுநர் அனுமதி கிடைத்துள்ளது.

“அர்வா அல் ஹுஜைலி முதல் பயிலுனர் வழக்கறிஞரானதன் மூலம் பெண்களுக்கு வழக்கறிஞராக பயிற்சி பெறும் பாதை திறந்துவிடப்பட்டிருக்கிறது” என சவூதியின் மனித உரிமை செயல்பாட்டா ளரான வலித் அபுல்கைர் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார். இதில் ஹுஜைலி நீதி அமைச்சில் பெற்ற பதிவுப் பத்திரத்தையும் அபுல்கைர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட் டுள்ளார்.

“பயிற்சி வழக்கறிஞர் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருந்தால் கட்டாயம் வழக்கறிஞர் பதவி வழங்கப்படவேண்டும். அவர் மூன்று ஆண்டுகளுக்கு குறையாத பயிற்சியை பெற்றிருக்க வேண்டும்” என்றும் அவர் விபரித்தார். சவூதி நீதி அமைச்சின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முன்னெடுப்பாக கருதப்படுகிறது. 

கடுமையான சட்டங்களை பின்பற்றும் சவூதியில் நீதிச் செயற்பாடுகளில் பெண்கள் தனது ஆண் பாதுகாவலரின் உதவியை நாடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும் கடந்த ஒக்டோபரில் நீதி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் 2012 நவம்பரில் ஆரம்பிக்கப்படும் நீதிமன்ற நடவடிக்கையில் பெண் வழக்கறிஞர்களுக்கு வழக்குகளை ஏற்று நடத்த அனுமதிக்கப் படுவதாக கூறியிருந்தது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை.

No comments

Powered by Blogger.