Header Ads



அமைச்சர் ரிஷாத்தும், முபாறக் மௌலவியின் அறிக்கையும்..!



(எஸ்.ஹமீத்)

முபாறக் மௌலவிக்கு ஒரு கடிதம்! 

கண்ணியத்திற்குரிய முபாறக் மௌலவி அவர்களே...! 

'றிசாத் பதியுதீனுக்கு முபாரக் மௌலவியின் சவால்' என்ற தலைப்பில் ஜஃப்னா முஸ்லிம் இணையத் தளத்தில் வெளியான தங்களின் அறிக்கை சம்பந்தமாக எனது சில கருத்துக்களை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.

மௌலவி அவர்களே...! பொது பல சேனாவின் நடவடிக்கைகளில் அரசாங்கத்திற்குச் சம்பந்தம் இருக்கிறது என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவரோ அதன் செயலாளரோ பகிரங்கமாகச் சொல்லவில்லையே தவிர, சம்பந்தமே இல்லை என்று எப்பொழுதாவது கூறியிருக்கிறார்களா...? அப்படிக் கூறியிருப்பார்களாயின், அதனைத் தங்களால் நிரூபிக்க முடியுமா..?

 பாராளுமன்றத்தில் பேசவில்லை என்பதற்காக அமைச்சரின் மேல் நீங்கள் பழி போடுவது எந்த வகையில் நியாமென்று தெரியவில்லை. ஆனால் பாராளுமன்றத்திற்கு வெளியே கௌரவ ரிஷாத் பதியுத்தீன் அவர்கள் பொது பல சேனாவுக்கெதிராகப் பேசிய பேச்சுக்களும் வெளியிட்ட ஊடக அறிக்கைகளும் எல்லாவற்றுக்கும் மேலாக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் நேரடியான தர்க்கத்தில் ஈடுபட்டதும் நாடறிந்த விடயம்.அது மட்டுமல்லாது பொது பல சேனாவைப் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அறைகூவல் விடுத்தவரும் அவரே! 

சுயநலமில்லாமல் தடைகளைத் தாண்டிச் சமூகத்திற்காகச் சேவையாற்றும் ஒருவரைப் பற்றி அவதூறு சொல்வது தவறானதாகும். சில இனவாத தமிழ் அரசியல்வாதிகளால் அமைச்சர் தனது சொந்த வன்னி மாவட்டத்தில் எவ்வளவு நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பது தாங்கள் அறியாததல்ல. அந்த இனவாத தமிழ் அரசியல்வாதிகளுக்கெதிராக எப்பொழுதாவது தங்கள் பேனாவைத் தாங்கள்  பயன்படுத்தியிருப்பீர்களா...? 

அம்பை எய்தவர்கள் யாரென்று தங்களுக்கு நிச்சயமாகத் தெரியும் பட்சத்தில்-அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருக்கும் பட்சத்தில்-அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நீங்களோ, உங்கள் கட்சியோ நீதிமன்றத்தை நாடலாமே! குறைந்த பட்சம் அந்த ஆதாரங்களை ஊடகங்கள் மூலமாகவாவது பகிரங்கப் படுத்தலாமே!! அதைவிடுத்து, வெறுமனே அமைச்சரின் மேல் ஊடகங்கள் வாயிலாகப் பழி போடுவது எந்த வகையில் நியாயம்...?
தக்க ஆதாரங்கள் இல்லாமல் தங்களால் அரசாங்கதிற்கெதிராகவோ  அல்லது ஏனைய அதிகாரத் தரப்பினருக்கெதிராகவோ எவ்வாறு நடவடிக்கைள் எடுக்க முடியாதோ, அதே நிலைமையில்தான் அமைச்சர் ரிஷாதும் அவரது கட்சியும் இருக்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நீங்கள் இருப்பது வேதனையாக இருக்கிறது.

தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது பள்ளிவாசலுக்கு நேரடியாகவே சென்று தேவையான-அல்லது தன்னால் முடிந்தளவு நடவடிக்கைகளை மேற்கொண்டவர் அமைச்சர் ரிஷாத் என்பது தொடக்கம் பேஷன் பக் நிறுவனம் தாக்கப்பட்ட போது  பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டும், ஏனைய அதிகாரத் தரப்பினருடன் தொடர்பு கொண்டும் அந்தத் தாக்குதலை உடனடியாகவே முடிவுக்குக் கொண்டு வந்தவரும் அமைச்சர் ரிஷாத்தான் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா..? அல்லது, பழி சுமத்த வேண்டும் என்பதற்காகவே அறிக்கைகளும் சவால்களும் விட்டுக் கொண்டிருக்கிறீர்களா ...?

நம்மால் சில விஷயங்களை நிச்சயமாக யூகிக்க முடியும். அந்த யூகங்கள் உண்மையாகவும் இருக்கும். ஆனால் நிச்சயமான ஆதாரங்கள் இல்லாதவிடத்து, அந்த விஷயங்களின் மேல் எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும்..? அரசாங்கம்தான் இதனைச் செய்கிறது என்று தக்க ஆதாரங்களின்றி பாராளுமன்றத்தில் எவ்வாறு பேச முடியும்...?

உதாரணம் கூறுவதற்குத் தங்களுக்கு மகா பாரதக் கதைதானா கிடைத்தது...? (சந்திரனை அழகானது என்று ஒத்துக் கொண்டவன் தானே 'சந்திரனைப் போன்ற அழகான முகம்' என்று முகத்தை  வர்ணிப்பான்..?!)

கண்ணனை இந்துக்கள் கடவுளாக வழிபடுகிறார்கள். தனது சகோதரர்களான கௌரவர்கள் மீது அம்புமாரி பொழிய அர்ச்சுனன் தயங்கி நின்ற நேரம், 'கடமையைச் செய்; பலனை எதிர் பாராதே!' என்று கண்ணன் செய்த உபதேசம் பிரசித்தமானது. அந்த வேளை கண்ணன் செய்த அந்த  உபதேசங்கள்தான் கீதையாக-கீதோபதோசமாக உள்ளது. ஆக, தாங்கள் இவை அத்தனையின் மீதும் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா..?! என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுந்து விடுகிறது.(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

 ''அடுத்தவர் மீது தேடித் தேடிக் குறை கூறுபவன் நடு வீட்டில் ஒளிந்திருந்தாலும் அல்லாஹ் அவனை அவமானப் படுத்துவான்'' என்ற ஒரு ஹதீஸை அண்மையில் அறிந்தேன். எனவே, அடுத்தவர் குறைகளையே துருவித் துருவிக் குறை கூறுவதை விட்டு விட்டு, சமூகத்திற்கான பணிகளை ஆக்கபூர்வமாக முன்னெடுக்க வேண்டுமென மிக்க தாழ்மையுடன் தங்களை வேண்டிக் கொள்கிறேன். 

மேலும், அரசியலில் தனக்கென ஒரு இடத்தை அடைந்துவிட வேண்டுமென்ற தங்களின் தணியாத தாகம் பற்றி நான் எதுவும் குற்றம் சொல்ல வரவில்லை. அது தங்களது தனிப்பட்ட விருப்பம்;  உரிமையும் கூட. அதற்காக, மற்றவர்களைக் குறை கூறி, மற்றவர்கள் மேல் பழி சுமத்தித்தான் அந்த இடத்தை அடைய வேண்டும் என எண்ணுவது தவறானது. சமூகத்திற்கான நமது பணிகள் சுயனலமற்றதாகவும்  ஆக்கபூர்வமாகவும் இருந்தால் அரசியலில் மட்டுமல்ல, சகல விடயங்களிலும் வெற்றி கிடைக்கும் என்பது தாங்கள் அறியாததல்ல. 

இறுதியாக மதிப்புக்குரிய மௌலவியாகிய தாங்கள் கூறிய கண்ணனின் கீதையிலிருந்து சில வரிகளைக் கூறி, இந்த விடயத்தை நிறைவு செய்யலாமென நினைககிறேன்.

1. 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,( நான் நம்பவில்லை)
2. 'எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.'(இதையும் நான் நம்பவில்லை)
3. 'எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்.' (இன்ஷா அல்லாஹ்) 


8 comments:

  1. IRANDU MUSLIMKAL KANNANIN GEETHAYIL VAATHAM SAYIKIRARKAL. PAVAM YENKGE AL QURANUM AL HADHEESUM?? YELLAME ARASIYALA??

    ReplyDelete
  2. 'Dear Mubarak Mavlani 'அடுத்தவர் மீது தேடித் தேடிக் குறை கூறுபவன் நடு வீட்டில் ஒளிந்திருந்தாலும் அல்லாஹ் அவனை அவமானப் படுத்துவான்'' என்ற ஒரு ஹதீஸை அண்மையில் அறிந்தேன். எனவே, அடுத்தவர் குறைகளையே துருவித் துருவிக் குறை கூறுவதை விட்டு விட்டு, சமூகத்திற்கான பணிகளை ஆக்கபூர்வமாக முன்னெடுக்க வேண்டுமென மிக்க தாழ்மையுடன் தங்களை வேண்டிக் கொள்கிறேன். M.N.M.Fariz

    ReplyDelete
  3. இருக்கும் அமைச்சர்களுள் ரிசாத் பதியுதீன் மக்களுக்கு நிறைய சேவை செய்துள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது ஆனால் முஸ்லிம்களுக்கு இந்த அரசாங்கத்தின் ஆசீர் வாதத்தோடு அநியாயமும் உரிமை மறுப்பும் நடக்கும் போது அதை தட்டிக் கேட்கும் திராணி அற்றவராகவே அவரது செயற்பாடு அமைந்துள்ளது அதே நேரத்தில் ராஜபக்ச அண்ட் கோ அவர்களை ஆதரிப்பவராகவே இருக்கின்றார் (நக்குண்டார் நாவிழந்தார்)

    ஹமீத்தின் வாதத்தை உற்று நோக்கினால் எனக்கு எனது நண்பர் கூறிய கதை தான் ஞாபகம் வருகிறது.

    தகப்பனும் மகனும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது....

    மகன்: வாப்பா வாப்பா நாய் ஓடுது வாப்பா...

    தந்தை: டேய்..!! பண்டி.. !!! சாப்பிடும் போது நாய் என்று கூறாதே..

    இருவரும் இந்து மத இதிகாசத்தை நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள் ......
    " ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்"

    ReplyDelete
  4. ஏற்கனவே முபாறக் மெளலவியின் மடல் கண்டோம். மிகவும் வேதனைக்குரியது, இவர் நம்மிடையே சிலரைக்குறைகூறிக்கொண்டிருக்கின்றாரே தவிர பிரச்சினைக்குரியவர்களிடம் பேசவில்லை.

    சகோதரர் ஹமீத் எல்லாவிடயங்களையும் ஒரளவுதான் சொல்லி இருக்கின்றீர்கள் என்னைப்பொறுத்தளவும் இதுபோன்ற குறைகூவீகளுக்கு போதாது, முபாறக் ”மெளலவி” இவர் மெளலவியென்றால் குர் ஆனை ஓதியவர் என்றால் இவருக்கு எங்கிருந்து வந்தது அவர் மேற்கோள் காட்டிய இராமாயணமும் பகவத்கீதையும் இதை உதாரணம் காட்டிப்பேச இவர் வெட்கப்படவில்லையா? இதிலிருந்தே புரிகின்றது இவருடைய ஈமானின் பலம். இதுபோன்ற மனிதர்கள் சிந்தித்துச்செயல்படமாட்டார்களா? ஏன் இவர்கள் நமக்கிடையே பிரச்சினைகளை உண்டாக்கப்பார்க்கின்றார்கள். முதலின் இவர்களுக்குரிய தேவை என்னவென்பதை பார்க்கவேண்டும் இனிமேலும் இதுபோன்ற குருட்டுத்தனமான் உதாரணங்களுடன் கடிதங்களு கண்டனங்களும் என்ற பெயரின் முஸ்லிம்களுக்கிடையில் குழப்பங்களை உண்டாகவேண்டாம் என்று சொல்லுங்கள்.
    முபாறக் மெளலவிக்கு அமைச்சர் ரிசாத் பதியுத்தீனுடன் தனிப்பட்ட கோபதாபங்களோ குரோத விரோதங்களோ இருக்கலாம், அதை அவர் தனிப்பட்ட முறையில் பார்த்துக்கொள்ளட்டும். ஏதோ ஒருகாரணத்துக்காக தான் நினைத்ததையெல்லாம் சோடித்து பொய்யானதொரு பாரிய விடயமொன்றை அமைச்சரின் பேரில் போடுகிறொமென்று முஸ்லிம்களின் தலையிலேயே மண்ணைவாரிப்போடும் இதுபோன்ற பாரிய குற்றச்செய்லகளையும் வீணான வெட்டிப்பேச்சுக்களையும் தவிர்த்து உமதுதொழிலைமட்டும் பார்க்குமாறு மெளலவிக்குச்சொல்லுங்கள்.

    எல்லாரும் ஹஜ்ஜுக்கு போராங்கெண்டு சொல்லி கரப்பத்தானும் ஹஜ்ஜுக்குப்போயிச்சாம் இதுவும் ஒரு உதாரணம்தான்....

    ReplyDelete
  5. brother Risard! muslimkelukku nadenthe aneethikku ethirahe mubarek mowleviyaip pol unkelukkum sadde poorwemane nadevedikkaai edukke mudiyathu ental yen aresil oddik kondirukkinteerkel? unkelukku first urimaiya? afivirutthiya?mukkiyem.

    ReplyDelete
  6. salam first of all muslims must be get together and the muslims members of Parliament.if any party if anything goes against to islam they must cooperate. then only we can show real unity.of muslim. no need to blame each other.

    ReplyDelete
  7. ஒருமுறை மறைந்த மாமனிதர் கலாநிதி பத்யுடீன் மஹ்மூத் அவர்கள் கூறினார்கள், இந்த நாட்டை ஒருகாலத்திலும் முஸ்லிம்களால் ஆட்சிசெய்யமுடியாது, ஆனால் நாம் முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்தால் யார் ஆழ்வது என்பதை தீர்மானிக்கும் சக்தி எம்மிடம் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது, அதிலும் குறிப்பாக இரண்டு பெரும்பான்மை கட்சியிலும் முஸ்லிம்கள் கட்டாயம் இருக்கவேண்டும் அப்போது யார் ஆட்சி செய்கின்றார்களோ அந்த கட்சியில் இருப்பவர்கள் முஸ்லிகளுக்கு அவர்களால் முடிந்த அத்தனை சேவைகளையும் செய்யவேண்டும் ஆனால் கண்டிப்பாக மாற்றுக்கட்சியில் இருக்கின்ற ஒரு முஸ்லிம் உறுப்பினரை விமர்சிக்கக்கூடாது எப்போது ஒரே இனத்தைச்சேர்ந்த இருவர் ஒருவரை ஒருவர் அரசியலுக்காக விமர்சிக்க தொடங்குவார்களோ அன்று முதல் முஸ்லிம்கள் தமது இருக்கின்ற அனைத்து உரிமைகளையும் நிச்சயம் பறிகொடுத்து விடுவார்கள் என்று, அவர் ஒரு உதாரணம் காட்டினார் நானும் ACS ஹமீது அவர்களும் ஒருகட்சியிலும் MH முஹம்மது அவர்களும் பாகீர் மாட்கார் அவர்களும் மறு கட்சியிலும் இருக்கின்றோம் நாம் அனைவரும் எங்களால் முடிந்ததை நமது சமூகத்திற்காக செய்துவருகின்றோம் நீங்கள் எப்போதாவது நாங்கள் பாராளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ ஒருவருக்கு ஒருவர் தாக்கிபேசியதை பார்த்தீர்களா? இந்த முன்மாதிரியை அனைவரும் பின்பற்றுங்கள் என்று பேசியது இன்று போல் எனது நினைவில் உள்ளது.
    குறிப்பு. இதை தற்போதைய அரசியல் தலைவர்கள் அல்லது வரும் காலத்தில் தலைவராக வரவேண்டும் என நினைப்பவர்கள் கேட்டு நடப்பார்களா? வேதாந்தம் பேசும் முனாபிக் அஸ்வர் கொஞ்சம் பதீஉதீன் மஹ்மூத் அவர்களை பற்றி யோசித்தால் இந்த சமூகம் நிச்சயம் நன்மை பெறும்.

    ReplyDelete

Powered by Blogger.