Header Ads



முன்னாள் அமைச்சரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்பு


(J.M.Hafees)

முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் அவர்களது பூர்வீக வீட்டிலிருந்த 52 இலட்ச ரூபா பெறுமதி வாய்ந்த தங்கத்தினால் பகுதி அளவில் வார்க்கப்பட்ட சுவர்கடிகாரம் ஒன்றும் ஆறு அடி உயரமான பித்தளை குத்து விளக்கு ஒன்றும் திருட்டுப் போன நிலையில்  பழைய இரும்பு விற்பனை செய்யும் கடையில் இருந்து பொலீஸார் மீட்டுள்ளனர்.

இலங்கை வரலாற்றில் வரவு செலரவுத் திட்ட அறிக்கை வாசிப்பதில் பல்வேறு சாதனைகள் புரிந்த நீதி அமைச்சரான இவரது பரம்பரைக் குடி இருப்பான கீகியன கந்தவத்தை என்ற இடத்தில் 300 வருடங்கள் பழைமை வாய்ந்த மேற்படி பொருட்கள் வீட்டுக் கதவு உடைக்கட்டு திருடப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் பழைய இரும்பு வியாபாரி உற்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி விலையுயர்ந்த பொருட்களை மிகச் சிறிய தொகைக்கு அதனைத் திருடியவர் விற்பனை செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.



No comments

Powered by Blogger.