Header Ads



யெமனை பிரிக்கும் எல்லையில் பாரிய வேலியை அமைக்க சவூதி அரேபியா திட்டம்


(Tn) அடிக்கடி தொந்தரவு கொடுக்கும் தனது அயல் நாடான யெமனை பிரிக்கும் எல்லையில் பாரிய வேலியை அமைக்க சவூதி அரேபியா திட்டமிட்டுள்ளது. செங்கடலில் இருந்து சவூதியின் மேற்கு எல்லையான ஓமான் வரையில் 1,800 கிலோ மீற்றர் தூரத்திற்கு யெமனை பிரிக்க எல்லை வேலி அமைக்கப் படவுள்ளது. 

யெமனில் நீண்டகாலம் ஆட்சியிலிருந்த ஜனாதிபதி கடந்த 2012 இல் பதவி விலகியதையடுத்து அங்கு பாதுகாப்பு நிலை சிக்கலாகியிருப்பதாக சவூதி எல்லை பாதுகாப்பு அதிகாரி லுதினன் கொலனல் ஹமிட் அல் அஹ்மரி குறிப்பிட்டுள்ளார். அரேபிய தீபகற்பத்திற்கான அல் கொய்தா தளமாகவும் யெமன் இருந்து வருகிறது.

யெமன் அரச எதிர்ப்பு போராட்டத்திற்கு பின்னர் 33 ஆண்டு காலம் ஆட்சிலிருந்த ஜனாதிபதி அலி அப்துல்லா சலா பதவி விலகினார். இதன் பின்னர் எல்லை பாதுகாப்பு மோசமடைந்துள்ளது.

போதைக் கடத்தல்காரர்கள், ஆயுதக் கடத்தல்காரர்கள் சவூதியில் ஆதிக்கம் செலுத்த முற்படுவதோடு, ஆயிரக் கணக்கான சட்டவிரோத குடியிருப்பாளர்களும் சவூதியில் ஊடுருவி வருகின்றனர். ஆயுதக் கடத்தல்காரர்களால் 5 சவூதி எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் அண்மைக் காலத்தில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.