Header Ads



புற்றுநோய் பாதித்தவருக்கு புதிய மூக்கு - விஞ்ஞானிகள் சாதனை


புற்றுநோய் பாதித்தவருக்கு எலும்பில் இருந்து புதிய மூக்கு உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்தனர். இங்கிலாந்தை சேர்ந்த 53 வயதுக்காரருக்கு மூக்கில் புற்று நோய் ஏற்பட்டது. அதனால் அவரது மூக்கு பாதித்தது. எனவே, அதை அகற்றிவிட்டு புதிய மூக்கு பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். இந்த நிலையில் எலும்பு மஜ்ஜையில் இருந்து மூக்கை உருவாக்க விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

எனவே எலும்பு மஜ்ஜையில் இருந்து செல்களை எடுத்து அவற்றை ஆய்வகத்தில் வளர செய்தனர். பின்னர் அதை புற்று நோய் பாதித்தவரின் தோள்பட்டையில் மூக்கு வடிவில் தொடர்ந்து வளர வைத்தனர். குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அதை புற்று நோய் தாக்கியவருக்கு பொருத்தினர்.

இந்த தகவலை, லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் அலெக்ஸ் செபாலியன் ஒரு மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளார். இது ஒரு பெரிய சாதனையாக கருதப்படுகிறது. 

No comments

Powered by Blogger.