Header Ads



முஸலிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை - ஜனாதிபதி மஹிந்த


இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகளை நிறுத்த தமது அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமென ஜனாதிபத  மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று வியாழக்கிழமை முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்குமிடையே நடைபெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தெரிவிகப்பட்டுள்ளது.

சிரேஷ்ட அமைச்சர்களான ரத்னசிறி விக்ரமநாயக்க, டியூ குணசேகர,ஏ.எச்.எம்பௌசி, அமைச்சர்களான நிமால் சிறிபால டி. சில்வா, பசில் ராஜபக்ஷ, ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, றிசாட் பதியுதீன், பிரதி அமைச்சர்களான ஹிஸ்புல்லா, அப்துல் காதர், நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இங்கு ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது,

முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்கவுள்ளேன். இந்த தெரிவுக்குழுவின் முன்னிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகளை பரப்புவோர் சாட்சியமளிக்க முடியும். முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க இடமளிக்க முடியாது. இனவாத கருத்துக்களை பரப்பும் பௌத்த பிக்குகளை அழைத்து நான் பேசுவேன் எனவும் ஜனாதிபதி மஹிந்த இதன்போது உறுதியளித்துள்ளார்.

அத்துடன் முஸ்லிம் எம்.பி.க்கள் சில இனவாத செயற்பாடுகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றபோது, உடனடியாகவே அதனுடன் சம்பந்தப்பட்ட செயலாளர்க்கு தொலைபேசி அழைப்பெடுத்துள்ள மஹிந்த, குறித்த ஊடக நிறுவனங்கள் குறித்து நடடிவக்கை மேற்கொள்ளுமாறு பணித்ததாகவும் எமது இணையத்தறிகு  அறியவருகிறது.

5 comments:

  1. good news for srilanka

    ReplyDelete
  2. எதுக்குத்தான் இல்லை நாடாளுமன்ற தெரிவுக்குழு என்னதான் அதில் எடுக்கும் முடிவு ? ஏன் இவர்களை ஆர்ப்பாட்டத்தில் இருக்கும் பொது கைது செய்ய முடியாது ? ஏன் அதற்கு கட்டளை பிறப்பிக்க முடியாது ? ஏன் எனில் அவர்கள் பெரும்பான்மை சமூகம் என்பதாலா ? இதே நேரம் ஹிந்து அல்லது முஸ்லீம் மற்றும் சிறுபான்மை சமுகத்தை சேர்ந்தவர்கள் இப்படி புத்த சமயத்துக்கு எதிராக கோசம் எழுப்பினால் இப்படி மௌனம் காப்பார்களா ? எங்கே இவைகளுக்கு பதில் யாரிடம் கேட்பது ? முஸ்லிம்களால் முடிந்த ஒன்று அல்லாஹ்விடம் முறையிடுவதுதன். ஆனால் எந்த முஸ்லிமும் கோழை அல்ல ?

    ReplyDelete
  3. ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை வழமையான வார்த்தையாகவன்றி உறுதியான உறுதி மொழியாக நம்புகின்றோம். முஸ்லிம்களின் நம்பிக்கையினை்த் தக்கவைத்துக் கொள்ள அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பமாகவும் இது இருக்கலாம்.

    ReplyDelete
  4. அட அட அட... இதை தம்புள்ள பள்ளி உடைக்கும் போது செய்திருக்கலாம் அமைச்சர்களே!. அனுராதபுரத்தில் வெளியேற்றப்பட்ட மக்களுக்காக என்ன செய்வது என்று கேட்டிர்களா அமைச்சர்களே!. ?

    ReplyDelete
  5. சரி சரி விடுங்க முல்லா மனிதன் திருந்துவதில்லையா?

    ReplyDelete

Powered by Blogger.