Header Ads



இனவாதிகளின் நாகரீகமற்ற செயற்பாடுகளை பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்க முடியாது


(எம்.எம்.ஏ.ஸமட்)

அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு பௌத்த பிக்குகள் துணைபோவது அவர்கள் கௌதம புத்தரின் போதனைகளை மறந்துவிட்டனரா என எண்ணத்தோன்றுகிறது.

இவ்வாறு தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெவ்வை குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக பெரும்பான்மை சமூகத்தைச்சார்ந்த மதகுருமார்களை உள்ளடக்கிய இனவாதக் குழுவொன்று முஸ்லிம் சமூகத்துக்கெதிராக மேற்கொண்டு வரும் அருவறுக்கத்தக்க செயற்பாடுகள் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அமைச்சர் உதுமாலெவ்வை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்நாடு பல்வேறு வழிகளில் சர்வதேச அழுத்தங்களை எதிர்நோக்கி வருகிறது. அந்த அழுத்தங்களை மேலும் வலுவூட்டுவதற்கான செயற்பாடுகளில் பெரும்பான்மைச் சமூகத்தைச்சார்ந்த குறைந்த எண்ணிக்கை கொண்ட இனவாதக் குழுவென்று மக்களை நல்வழிப்படுத்தும் பௌத்த பிக்குகளை இணைத்துக்கொண்டு, அவர்கள் தலைமையில் முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளைத் தூண்டும் முகமாகவும் மனங்களைப் புண்படுத்தும் வகையிலும் மேற்கொண்டுவரும் மனித நாகரிகமற்ற செயற்பாடுகளை வெறுமனே பார்த்துக்கொண்டு மௌனமாக இருந்துவிட முடியாது.

கடந்த 30 வருடங்களாக இந்நாட்டில் இடம்பெற்று வந்த கொடூர யுத்தத்தின் காரணமாக பெறுமதி மிக்க உயிர்களும் சொத்துக்களும் அழிந்தொழிந்துள்ளன. மதகுருமார்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என பல தரப்பினரின் உயிர்கள் எவ்வித காரணங்களுமின்றி பறிக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களும் கோயில்களும் தேவாலயங்களும் ஏன் விகாரைகளும் அழிக்கப்பட்டுள்ளன. இவை ஏற்பட்டதற்கான காரணங்கள் இதன் வரலாற்றுப்பின்னணி எவை என்பதை இவ்வரலாறுகளைத் தெரிந்நதவர்கள் அறிந்திருப்பார்கள். 

ஒரு இனத்தை புண்படுத்தி அல்லது அழிக்க நினைத்துச் செயற்பட்டவர்கள் இவ்வுலகில் நிலைத்ததில்லை. இதற்கு  இவ்வுலக நாடுகள் பலவற்றில் இடம்பெற்றுவந்த நிகழ்வுகள் மற்றும் அவற்றை  வழிநடத்தி வந்நதவர்களின் சரித்திரங்கள் வலாற்றுச் சான்றுகளாவுள்ளன. 2005ஆம் ஆண்டு அக்கரைப்பற்று பள்ளிவாசலில் அதிகாலைத் தொழுகையில் ஈடுட்டிருந்தோர் மீது கண்மூடித்தனமாக கைககுண்டுத்; தாக்குதல்களை மேற்கொண்டு பல உயிர்களைக் காவுகொண்டோர் ஒரு சில மாதங்களின் பின்; அவர்கள் சுட்டுக்கொள்ளபட்டனர். அழிவுகளையும் அடக்குமறைகளையும் புரிவோர் அதே வழியில் ஒழிக்கப்படுவார்கள், அடக்கப்படுவார்கள் என்பதற்கு இது நல்லதோர் உதாரணமாகவுள்ளதென்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

இஸ்லாம் எந்தவொரு மதத்தையோ, மனிதனையோ நிந்திக்கச் சொல்லவில்லை. புண்படுத்தச் சொல்லவுமில்லை. மாறாக கௌரவப்படுத்தச் சொல்கிறது. 'இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களின் உடல்கள் நல்லடக்கத்துக்காக வீதியில் எடுத்தச் செல்லப்படுகின்ற போது அதற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துமாறு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்துள்ளார்கள';. இறந்த உடலுக்கு இத்தகைய மரியாதை வழங்க வேண்டுமென்று போதிக்கும் இஸ்லாம் ஏனைய மத்தவர்களின் இதர விடயங்களுக்கு எத்தகைய கௌரவத்தை வழங்கச் சொல்லியிருக்கும் என்பது இந்த நபி போதையினூடாக புரிந்துகொள்ளலாம். முஸ்லிம்களில் ஒரு சிலர் புரியும் குற்றங்கள் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களும் குற்றம் புரிபவர்களாகவோ அல்லது இஸ்லாம் குற்றங்களை அங்கிகரிப்பதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. எந்தவொரு மதமோ அல்லது மதத் தலைவர்களோ அடுத்தவரின் மத்தையோ மதக்கடமைகளோ கேவலப்படுத்தச் சொல்லவுமில்லை. அவற்றுக்கு தடைவிதிக்கப் போதிக்கவுமில்லை. 

முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களுக்கு எதிராக செயற்படும் இனவாதக்குழுக்களுக்கு பௌத்த பிக்குகள் துணைபோவது, அவர்களோடு இணைந்து  செயற்படுவது கௌதம புத்தரின் போதனைகளைப் புறம்தள்ளி இம்மதகுருமார் செயற்படுகிறார்களா என எண்ணத்தோன்றுகிறது.

இந்நாட்டின் ஜனாதிபதியும் பெரும்பான்மை சிங்கள மக்களும் ஏனைய இன மக்களுடன் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் அரவணைத்து வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் செயற்படும்போது, ஒரு சில பேரியவாத சக்திகளும் அதற்கு துணைபோகின்ற பௌத்த பிக்குகளும் சமூகங்களுக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கும் விடயமாகும். 

இந்நாட்டில் பெரும்பான்மையினராக சிங்கள மக்கள் வாழ்ந்தாலும், இந்நாடு ஒரு இனத்துக்குச் சொந்தமானதல்ல. இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து இனங்களுக்கும் இந்நாடு சொந்தமானது. இந்நாட்டை மேற்குலக ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து மீட்பதற்காக, சுதந்திரச் தேசமாக மாற்றுவதற்காக் இந்நாட்டின் அனைத்து சமூகங்களையும் சார்ந்த பெரியார்கள். அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் ஒன்றினைந்து போராடியிருக்கிறார்கள். அதன் மூலம் 1948ஆம் ஆண்டு இந்நாடு சுதந்திரம் பெற்றது. இன்னும் ஒரு சில தினங்களில் 65ஆவது சுதந்நதிர தினத்தை இந்நாடு கொண்டாவுள்ளது.

இந்நாடு சுதந்திரம் அடைவதற்கு ஒரு சமூகத்தைச்சார்;ந்த அரசியல், சமூகத் தலைவர்கள் மட்டும் போராடவில்லை என்பதை, இந்நாடு ஒரு இனத்துக்குரியது என்று சின்னத்தனமாக பிரச்சாரம் செய்து வருகின்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும.  இந்நாடு ஒரு இனத்துக்கு மாத்திரம் சொந்தமானதென்றால் ஏன் ஏனைய இனத்து மக்கள் தேசிய கீதத்துக்கு எழுந்து நின்று மரியாதை செய்கிறார்கள் என்று கேட்கத்தோன்றுகிறது.

இந்நாட்டில் வாழும் அனைத்துப்பிரஜையும் அனைத்து சமூகமும் தங்களது கல்வி, அரசியல், சமூக, சமய, பண்பாட்டு கலை, கலாசார, பாரம்பரிய விடயங்களை ஏனையவர்களைப் பாதிக்காத வகையில், ஏனைய சமூகத்தின் சுதந்திரத்தையும் உரிமையையும் மீறாத வகையில் அனுபவிப்பதற்கும், அனுஷ்டிப்பதற்கும் உரிமையுடையவர்கள். ஏனெனில் இது ஒரு ஜனநாயக நாடு என்பது விளங்கிக் கொள்ளப்பட வேண்டும்.

இந்நாட்டின் சுதந்திரத்தையும், இறைமையையும், கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டியது இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் தார்மீகப் பொறுப்பாகும். ;நாட்டின் அமைதியைச் சீர்குழைத்து, நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டில் எவர் ஈடுபட்டாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் எனக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். மக்களை நல்வழிப்படுத்தும் மத போதகர்களான மரியாதைக்குரிய பௌத்த பிக்குகள் இத்தகைய இனவாதக்குழுவுக்கு தலைமை வகித்துச் செயற்படுவது எந்த வித்திலும் தர்மமாகாது. அது அதர்மமாகவே கொள்ளப்படத்தக்கது.

ஓர் இனத்தின் சமூக, சமய செயற்பாடுகள் ஏனையவர்களின் உரிமைகளைப் பாதிக்கிறதென்றால் சம்பந்தப்பட்டவர்களுடன்; சாத்வீக முறையில் பேச்சுவார்த்தையினூடாக அனுகி, அப்பிரச்சினைகளுக்கு தீர்வைப்பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். முஸ்லிம்கள் பின்பற்றுகின்ற ஹலால் என்றால் என்ன? ஷரியா சட்டம் என்றால் என்ன? ஏன் இவற்றை முஸ்லிம்கள் கடைபிடிக்கிறார்கள்? எதற்காகக் கடைபிடிக்கிறார்கள்? பள்ளிவால்கள் ஏன் கட்டப்படுகின்றன?. அங்கு என்ன நடபெறுகிறது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும். அதைவிடுத்து, நாகரியமற்றமுறையில் முஸ்லிம்களின் மத உணர்வைத் உசுப்பும் வகையில் இஸ்லாம் உண்ணுவதற்கு அனுமதிக்காத விலங்கில் 'அல்லாஹ்' என்ற நாமத்தை எழுதி அதை எரிப்பதும், அகில இலங்கை ஜம்மியத்து உலமா மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களுக்கு எதிரான  வேண்டத்தகாத பிரச்சாரங்களை மேற்கொள்ளுவதும,; அவற்றை பயங்கரவாத அமைப்புக்களாக, அமைப்புக்களுக்கு உதவுவோர்களாகக் காட்ட முற்படுவதும், பள்ளிவாசல்களைத் தாக்குவதும் பள்ளிவாசல்கள் கட்டப்படக் கூடாது என்று கையெழுத்து வேட்டையில் ஈடுபடுவதும், முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபாரத்தளங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதும் பொருளாதாரத்தை முடக்க முற்படுவதும் ஒரு ஜனநாயக நாட்டில் எந்தவகையில் நியாயமாகும். 

 மனித தர்மத்துக்கும், ஜனநாகத்துக்கும் மததிப்பளிக்காமல் அவற்றை மக்கள் மயப்படுத்தி எல்லோரையும் பிரச்சினைக்குக்குள் தள்ளுவது பாரிய விளைவுகளைத் தோற்றுவிக்கக்கூடும். அதுமாத்திரமின்றி, மனித நாகரியத்தையும் மனிதநேயத்தையும் மதிக்கின்றவர்களின் மனங்களை புண்படுத்துவதாகவும் அமையுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் குளியாப்பிட்டிய நகரில் நிகழ்ந்த அசாதாரண சூழ்நிலையைடுத்து முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள். அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோர் உடனடியாச் செயற்பட்டு, ஜனாதிபதியைச் சந்தித்து ஜனாதிபதியின் கவணத்துக்கு இவ்விடயத்தைக் கொண்டு வந்ததன் ஊடாக முஸ்லிம்களுக்கொதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்பாக தெரிவுக்குழு வொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்நடவக்கையானது இந்நாடு மீண்டுமொரு அபாயகரமான சூழக்கு தள்ளப்படக்கூடாது என்பதில் ஜனாதிபதி அக்கரையுடன் செயற்படுகிறார் என்பதை  எடுத்தக்காட்டுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளா.

இருப்பினும், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை தடுப்பதற்கான செயற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்பதே முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஏனெனில், உலகில் மிகம் சக்தி வாய்ந்த புலிகள் அமைப்பைத் தோற்கடித்த ஜனாதிபதிக்கு இச்சிறுகுழுவின் செயற்பாடுகளை அடக்கி வீணான, விரும்பத்தகாக நிகழ்வுகள் இந்நாட்டில் இடம்பெறாமல் தடுப்பது பெரிய காரியமொன்றல்ல.

அதுமாத்திரமின்றி, ஒரு சமூகத்தின் சமய விடயங்களில் வீணான குற்றச்சாட்டுக்களை, திட்டமிட்ட தலையீடுகளை மேற்கொண்டுவரும் இத்தகையவர்களுக்கு யதார்த்தங்களைப் புரியவைப்பதுவும் அவர்களின் செயற்பாடுகளுக்கு துணைபோகாமல் உண்மையை உரிய தரப்புக்களுக்கு தெளிவுபடுத்துவதுவும் பெரும்பான்மை சமூகத்தில் அங்கம் வகிக்கும் மனித நேயம் மனிதாபிமானம் கொண்டவர்களினதும் ஏனைய  சிறுபான்மை இனங்களின் சமூக சமய உரிமைகளை மதித்துச் செயற்படுவர்களினதும் தார்மீகப் பொறுப்பாகும் என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் உதுமாலெவ்வை முஸ்லிம்கள் இவ்விடயத்தில்  ஆவேசப்படாமல் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்பட்டு வழிகாட்டல்களை ஏற்று, உரியமுறையில் பரிகாரம் தேட முயற்சி மேற்கொள்ளணேடுமென அவ்வூடக அறிக்கையில் அமைச்சர் உதுமாலெவ்வை மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. ஐயா ஜனாதிபதி இது சம்பந்தமாக விசாரிக்க தெரிவுக்குழு நியமித்துவிட்டாரே! சட்டம் தன கடமையைச் செய்யும்

    ReplyDelete
  2. ரொம்பதான் கஷ்டப்பட்டு இருப்பீங்க

    ReplyDelete

Powered by Blogger.