Header Ads



முஹம்மது நபியின் போதனைகள் சகிப்புத்தன்மையை வலியுறுத்துகிறது - ஜனாதிபதி மஹிந்த


சமாதானம், ஐக்கியம், சகிப்புத்தன்மை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றை வலியுறுத்தும் நபிகளாரது போதனைகள் உலக அமைதிக்கும் சமாதானத்துக்கும் பொருத்தமானதாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது,

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவைக் கொண்டாடுவதில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலுமுள்ள தமது சகோதர முஸ்லிம்களுடன் இணைந்து கொள்கிறார்கள்.

சமாதானம், மானிடர்களுக்கு மத்தியிலான முன்னேற்றம் என்பவற்றை ஆபத்திற்குள்ளாக்கி, இன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிலவுகின்ற பிரச்சினையான சூழ்நிலையை சமாதானம், ஐக்கியம், சகிப்புத்தன்மை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றைப் போக்க நபிகளாரது போதனைகள் மிகவும் பொருத்தமானதாகும்.

பல்வேறு நாடுகளில் காணப்படும் பயங்கரவாதத்தை நிராகரித்து அதற்குப் பதிலாக மனிதாபிமானத்தின் உயரிய பெறுமானங்களை ஊக்குவிப்பதில் வன்முறையின்மை, சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிக்க முடியும்.

இலங்கையில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் போதனைகளைப் பின்பற்றுபவர்கள் எமது நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்கான முயற்சிகளைப் பலப்படுத்தும் சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் நிறைந்ததோர் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கின்றனர். நாட்டில் தற்போது நிலவுகின்ற சமாதான சூழ்நிலை தீவெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான இந்த நிகழ்வை மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்தக் கொண்டாட்டங்கள் இன்று நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி செயன்முறைகளின் வெற்றிக்கு உதவுவதற்காக மக்கள் மத்தியில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கு பெரிதும் பயனுள்ளதாய் அமையும்.

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எனது மகிழ்ச்சி நிறைந்த மீலாதுன் நபி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு எமது தாய்நாட்டிலும் உலகெங்கிலும் சகிப்புத்தன்மையையும் புரிந்துணர்வையும் பலப்படுத்தும் அவர்களது பிரார்த்தனைகளில் நானும் பங்குகொள்கிறேன். இவ்வாறு ஜனாதிபதி தனது மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.