Header Ads



பேருவளை மஹகொடை பிரதேசத்தில் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்த ILM Welfare Centre


பேருவளை மஹகொடை பிரதேசத்தில் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் நேற்று (27.11.2011) ILM Welfare Centre  வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. தலைவர் அஹமட் ரூமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஐ.எல்.எம். ஸம்ஸுதீன் வித்தியாலய அதிபர் முஹம்மத் ஸுபைர்  கலந்துகொண்டதோடு கௌரவ அதிதியாக ஓய்வுபெற்ற ஆசிரியை ஹாஜா ஆமினா ஸைன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். மேலும் ஐடுஆ றுநடகயசந ஊநவெசந இன் 2013 ஆம் ஆண்டிற்கான கலண்டரும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பேருவளை பிரதேச கல்விமான்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

 ILM Welfare Centre இன் வரலாற்றினையும், அதன் நோக்கங்களையும், எதிர்காலத் திட்டங்களையும் அதன் தலைவர் அஹமட் ரூமி தெளிவுபடுத்தினார். மேலும் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஹாஜா ஆமினா ஸைன் அவர்கள் உரையாற்றும்போது இப்பணி பேருவளையின் தற்போதைய உடனடித்தேவையாக இருக்கின்றது. ILM Welfare Centre அவசரமாக அதன் செயற்திட்டங்களை அமுல்படுத்தும்போது வெகுவிரைவில் இம்மண்ணில் சாதகமான மாற்றமொன்றினை ஏற்படுத்தமுடியும் என தெரிவித்தார்.

 மேலும் பிரதம அதிதியாக கலந்துசிறப்பித்த ஐ.எல்.எம். ஸம்ஸுதீன் வித்தியாலய அதிபர் ஜனாப். முஹம்மத் ஸுபைர்  இம்முயற்சி மஹகொடை ஐ.எல்.எம். ஸம்ஸுதீன் வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு ஏற்கனவே பல பங்களிப்புக்களை செய்துவருகின்றது. தொடர்ந்தும் பாடசாலையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்திருப்பது பாராட்டத்தக்கதென தனது உரையில் தெரிவித்தார். தொடர்ந்து ILM Welfare Centre இன் இணைப்பாளர் முஹம்மது ஹிமாஸ் கருத்தத்தெரிவிக்கும்போது பாரிய திட்டங்களோடு களமிறங்கியிருக்கும் எம்மை வழிநடாத்துவதும், எமது பயணத்தை தொடர்ந்து பயணிக்கச்செய்வதும் உங்களது ஒத்துழைப்புக்களிலேயே தங்கியிருக்கின்றது என தெரிவித்தார். ILM Welfare Centre இன் ஆரம்பகட்ட நிதிதிரட்டலுக்காக 500 கலண்டர்கள் அச்சிடப்பட்டு பிரதேச மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.








No comments

Powered by Blogger.