Header Ads



யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் குடியேற்றங்கள் இல்லாமலாகிவிடும் - எச்சரிக்கிறார் ஹஸ்புல்லா


யாழ் முஸ்லிம் பிரதேசத்தின் மீள்குடியேற்றம் இடம்பெறாவிட்டால் யாழ் மாவடத்தில் இருக்கும் எல்லா முஸ்லிம் குடியேற்றங்களும் இல்லாமலாகிவிடும். பேராதனை பல்கலைக்கழக புவியிடல் பீட பேராசிரியர் எச்.எஸ். ஹஸ்புல்லா எச்சரித்துள்ளார்.

வடக்கு முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு 22 வருடங்கள் நிறைவு நிகழ்வு யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதன்போது விசேட சொற்பொழிவு ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளதாவது,

எதற்காக யாழ் முஸ்லிம் வட்டாரத்தின் மீள்குடியேற்றம் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை முழுமையான புள்ளிவிபரத் தகவல் ஆதாரங்களுடன் முன்வைத்தார். யாழ் முஸ்லிம் பிரதேசத்தின் மீள்குடியேற்றம் இடம்பெறாவிட்டால் யாழ் மாவடத்தில் இருக்கும் எல்லா முஸ்லிம் குடியேற்றங்களும் இல்லாமலாகிவிடும்.

இன்று யாழ் மாவட்டத்தில் நடைபெறும் அபிவிருத்திகளை நோக்கும்போது கொழும்புக்கு அடுத்த நகரமாக யாழ்ப்பாணம் வளர்ச்சி காணும் என்றும் நாம் இவ்விடயத்தை கண்டுகொள்ளவில்லையாயின் எமது பூர்வீகத்தில் எமக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளும் கை நழுவிப்போய்விடும்.

புத்தளத்தில் யாழ் முஸ்லிம்கள் குடியிருப்புக்காகத் தேர்ந்தொடுத்துள்ள பிரதேசம் மக்கள் குடியேற்றத்திற்கு உதவாத கைவிடப்பட்ட பிரதேசங்களேயாகும். சோல்டன் தில்லையடி, ரத்மல்யாய போன்ற பிரதேசங்கள் அரசினால் சேற்று நிலங்கள் என ஒதுக்கப்பட்ட பிரதேசங்களாகும். அங்கே குடிநீர் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினைகள், இடநெருக்கடி பிரச்சினை, வடிகாலமைப்பு பிரச்சினை என ஏராளமான சிக்கல்களை மக்கள் தொடர்ந்தும் எதிர்கொள்வார்கள், இதனால் ஆரோக்கியமான மக்களாக அவர்களால் வாழ் முடியாது என்பதை மிகவும் விஞ்ஞானபூர்வமாக விளக்கினார்.

No comments

Powered by Blogger.