Header Ads



கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக தீயணைப்பு முற்பாதுகாப்பு பயிற்சி (படங்கள்)

அமீர்

தீயணைப்பு மற்றும் முற்பாதுகாப்பு பயற்சியை முடித்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக தீயணைப்பு மற்றும் முற்பாதுகாப்பு பயற்சி பட்டறை ஒன்றை சென் ஜுடி சர்வதேச நிறுவனமும் இலங்கை தீயணைப்பு திணைக்களமும் ஒன்றிணைந்து நடாத்தி இருந்தது.

இந்த பற்ச்சியை கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த 21 பற்ச்சியாளர்கள் நிறைவு செய்து இருந்தனர். இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  2012.08.15ம் திகதி  சென் ஜுடி சர்வதேச நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட பற்ச்சி நிலையத்தில் இடம்பெற்றது. சென் ஜுடி சர்வதேச நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட பற்ச்சி முகாமையாளர் சப்ராஸ் மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கல்முனை மாநகர சபையின் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்து சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

இங்கு அவர் கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக இப்படியான பயற்சியை முடித்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் பங்கு கொள்வதை இட்டு மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் மனித நேய செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய இது போன்ற பற்ச்சிகளைப்பெற்றுள்ள 21 பற்ச்சியாளர்களையும் பாராட்டுவதாகவும்.

இப்படியான பற்ச்சிகளைப் பெற்றுள்ளவர்களுக்கு கல்முனை மாநகர சபையில் வெற்றிடங்கள் இருப்பதாகவும் தங்களிடம் தீயணைப்பு உபகரணங்கள் உள்ளதாகவும் இங்கு பற்ச்சி பெற்றுள்ளோர் தொடர்பில் ஆளுநர் அவர்களுடன் கலந்துரையாடி நியமனங்கள் பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்

இங்கு சென் ஜுடி சர்வதேச நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட பற்ச்சி முகாமையாளர் சப்ராஸ் மன்சூர் உட்பட பலரும் உரையாற்றினர்.








2 comments:

  1. wel done safras mansoor..i proud of you to see in this website.
    you are my classmate..and some others too

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் கல்முனைக்கு உங்களது சேவை தேவை துடிப்பான மேயர் உங்களுக்கு உதவ வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.