Header Ads



நாட்டில் மீண்டும் ஒரு அச்ச சூழல் எற்படாதிருக்க கிழக்கு தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றியினை உறுதிப்படுத்த வேண்டும்.

இர்ஷாத் றஹ்மத்துல்லா

இந்த நாட்டில் மீண்டும் ஒரு அச்ச சூழல் எற்படாதிருக்க  வேண்டும் என்றால் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றியினை உறுதிப்படுத்த வேண்டும். எமது நாட்டின் கௌரவத்தினை சர்வதேச நாடுகளுக்கு அடகு வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கும் உப்பு சப்பற்ற கருத்துக்களுக்கு எமது தேசத்து மக்கள் காது கொடுக்க வேண்டாமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இணைப்பாளரும், ஹூனைஸ் பாருக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை தேர்தல் குறித்தும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ள கருத்து குறித்தும் விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றில் குற்றவாளியாக நிறுத்த வேண்டுமெனில் கூட்டமைப்பை ஆதரிக்குமாறு கோறும் பேச்சானது,இலங்கை சிறுபான்மை மக்களுக்கு ஆபத்தையேற்படுத்தும் ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தான் இன்று மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இற்றைக்கு 3 வருடங்களுக்கு வட மாகாணத்துக்கு பொது மக்கள் செல்ல வேண்டுமென்றால் புலிகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள், அவ்வாறல்ல விரும்பிய நேரம் வடமாகாணத்துக்கும், அதற்கு வெளியிலும் செல்ல முடியும். வடக்கில் திருமணம், மரண வீடு என்றால் பாதுகாப்பு தரப்பினரது அனுமதியினை பெற வேண்டும் என்று கூறுவது அபத்தமானது. இது முற்றிலும் பொய்யான தகவல்களாகும், தம்மால் உண்மையை சொல்லி அரசியல் செய்ய முடியாதவர்கள் தான்,இவ்வாறான பொய்யை கூறமுடியும்.

இன்று  சர்வதேச நாடுகள், பல இலங்கையின் செயற்பாடுகளை வரவேற்று பேசியுள்ளதுடன் அரசாங்கத்திற்கு தமது நன்றிகளை கூட தெரிவித்துள்ளன. இலங்கை நாடு குற்றம் நிறைந்த நாடாக காட்டி மேலும் இனவாதத்தையும், இனங்களுக்கிடையில் மோதலையும் தோற்றுவிக்க விளையும் பயங்கரவதிகளுக்கு தொடர்ந்து உதவி செய்யும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பேச்சு அமைந்துள்ளது.

இலங்கையின் ஆட்புலத்துக்கும், ஒருமைப்பாட்டுக்கும்,நாடு பிரிவினையிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கும் ஒவ்வொரு இலங்கையரும் சத்தியப்பிரமானம் செய்துள்ளோம். இலங்கையில் உள்ள சட்டங்களை எல்லோரும்மதிக்கின்றனர். ஆனால் செல்வம் அடைக்கல நாதன் நாடுகடந்த ஈழ நீதிமன்றில் இந்த அரசாங்கத்தை குற்றவாளியாக நிறுத்த தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு அழைப்புவிடுப்பது, இவர் இலங்கையில் எவ்வித உரிமைகளையும் அனுபவிக்க தகுதியற்றவரே என்பது புலனாகின்றது.

செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள், தேர்தல் ஒன்று வந்துவிட்டால் மூட்டைகளை கட்டிக் கொண்டு மக்களிடம் வந்து புதுக்கதைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள்.இன்று அவர்களது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் ஏராளம். பலர் வேறு தீர்மாணங்களை எடுத்துள்ளமைக்கு காரணம் இவர் போன்றவர்களின் விசமத்தனமான பேச்சுக்களே என பாராளுமன்ற உறுப்பிளர் ஹூனைஸ் பாருக் கூறினார்

3 comments:

  1. முஸ்லிம் மக்களின் பள்ளிகளை உடைக்க நினைக்கும் ஆட்சியாளர்களின் அடிவருடியே நீங்களும் மறுமையில் இறைவனின் பதில் சொல்லியாகவேண்டும்.

    ReplyDelete
  2. APPO THAMBI NEENKAL TICKET EDUTHTHU POI IRANKI SANDAI PIDIKKALAAME MARUMAI ITHATKU MADDUNTHAANAA

    ReplyDelete
  3. tna passangalukku kotutha mudingithu nadu.ippawe aniyayam....mahinda evvalavo paravaillai..nattaai pirikka thelast kku piriyamo..neengalum marumaila tna kku sarpa pesunathukku pathil solla vendumungo--welcomm hunais farook

    ReplyDelete

Powered by Blogger.