Header Ads



அக்கறைப்பற்று தேர்தல் வன்முறை தொடர்பில் ஆசாத் சாலி அறிக்கை

அம்பாறை மாவட்டத்தின் எந்த பகுதியிலும், எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதையும், நிகழ்வுகளில் கலந்துகொள்வதனையும் எவராலும் தடுக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை வேட்பாளர் அசாத் சாலி தெரிவிக்கின்றார்.

அக்கரைப்பற்றில் சில தினங்களுக்கு முன்னர் அரசியலை காரணமாகக் கொண்டு இடம்பெற்ற வன்முறைகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்கரைப்பற்றில் அண்மையில் இரண்டு அமைச்சர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலைக் கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அசாத் சாலி இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் குறித்த ஒரு பகுதியை அரசாங்கம் எவருக்கும் குத்தகைக்கோ அல்லது முடிசூடிக் கொள்வதற்கோ வழங்கவில்லை என்றும் அவ்வாறு எண்ணி எவரேனும் செயற்படுவார்களாயின், அது அவர்களது அரசியல் வங்குரோதத்தின் ஆரம்பமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அனைத்து முஸ்லிம் தரப்புகளும் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்பதில் தாம் அதிக ஆர்வம் காட்டியதுடன், அதன்பொருட்டு தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் அசாத் சாலி சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. MY DEAR ASATH SALY PLEASE TRY TO ARRANGE LAST IFTHAR AT AKKARAIPATTU. MR ATHAULLA WILL HELP YOU ONLY FOR JOINT VENTURE SLMC AND NATIONAL CONGRESS.FIRST MAKE A MOU WITH MINISTER ATHAULLA.

    ReplyDelete
  2. I AM AFRAID I CANT AGREE WITH YOU RAMALAN THIS TIME BECAUSE IN MY OPINION "HOLY IFTHAR" GATHERINGS SHOULD NOT BE HELD FOR POLITICAL PURPOSES. THEY MUST ONLY BE HELD FOR ALMIGHTY ALLAH!

    IN MY VIEW NOT ONLY HOLDING SUCH GATHERINGS BUT TAKING PART IN THEM IS ALSO A SIN.

    ReplyDelete

Powered by Blogger.