Header Ads



கிழக்கு தேர்தல் குறித்த மு.கா. தீர்மானம் வடக்கு முஸ்லிம்களையும் பாதுகாக்க வேண்டும்

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளப்போகும் தீர்மானம் வடக்கு முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாப்பதாக அமைய வேண்டுமென அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி யாழ் முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய தொலைபேசி செவ்வியில் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் அவர் மேலும் தகவல் தருகையில்,

முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மேற்கொள்ளவுள்ள தீர்மானம் வடக்கு முஸ்லிம்களையும் பாதுகாப்பதாக அமைய வேண்டும். முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் அஸ்ரம் வடக்கு முஸ்லிம்களின் நலனையும் கருத்திற்கொண்டே அரசியலில் காய்களை நகர்த்தினார். அதனால்தான் தென்கிழக்கு மாகாண அலகு கோரிக்கையிலும் வடக்கு முஸ்லிம்களின' நலன்கள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டன.

தற்போது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவது பற்றிய விவகாரமும் முக்கியத்துவம் பெறுகிறது. அவர்களிடமிருந்து அழைப்பும் வந்துள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பகைத்துக்கொள்ளகூடாது. அவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பகைத்துக்கொள்வது அடுத்தவருடம் நடைபெறவுள்ள வடமாகாண தேர்தலில் அம்மாகாண முஸ்லிம்களுக்கு பாதகமாக அமைந்துவிடும்.

எனவே வடக்கு முஸ்லிம்களின் எதிர்கால நலன், வடக்குகிழக்கு மாகாண முஸ்லிம்களின் இருப்பு, அவர்களின் எதீர்பார்ப்புகள், அந்த மக்களின் அரசிய அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் வகையிலேயே முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானங்கள் அமையப்பெற வேண்டும். இதுகுறத்து செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்திலும் வலியுறுத்தினேன்.

அரசியல் தீர்வு என்பதும், அதனை நடைமுறைப்படுத்துவது என்பதும் வடக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களிடத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியது. அந்த மாகாண மக்களுடைய நலன்கருதிய செயற்பாடுகள் பிரதானம் பெறுவது அவசியமாகும்.

வடமாகாணத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், அரசியல் அதிகாரம் பெற்றுள்ளவர்களின் பழிவாங்கலுக்கு முகம்கொடுத்துள்ளனர். இதற்கு அரசாங்கமும் துணை நின்றுள்ளது. இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிழயக் கூட்டமைப்பை முஸ்லிம் காங்கிரஸ் முற்றிலும் பகைத்துக்கொண்டு தீர்மானம் மேற்கொண்டால் அது வடக்கு முஸ்லிம் முஸ்லிம்களை மேலும் பாதிக்கும். குறிப்பாக அடுத்தவருடம் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அப்பிரதேச முஸ்லிம்கள் பாதிப்புகளை  எதிர்கொள்ள காரணியாக அமைந்துவிடக்கூடாதென்பது இங்கு அவதானம் செலுத்தப்படவேண்டிய முக்கிய விடயமெனவும் ஹசன் அலி எம்.பி. மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. தென் இலங்கை வாழும் முஸ்லிம்களையும் முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் முக்கியமாக பாதுகாக்க வேண்டும் பொதுவாக கூட்டமைபை பற்றி சாதாரண சிங்கள மக்களிடம் புலி ஆதரவாளர்கள் பிரிவினைக்கி துணை போவோர் என்ற கருத்தே ஆழமாக பதிந்திருப்பதால் முஸ்லிம் காங்கிரஸ் கூடமைப்புடன் சேறும் இடத்து முஸ்லிம்களையும் சந்தேக கண்கொண்டு பாக்கும் நிலமை அதனால் எழும் தொல்லைகளும் சஞ்சலங்களும் மிக கனிசமாக தென் இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பிலும் சமாதான வாழ்விலும் தாக்கதை செழுத்தும்

    ReplyDelete
  2. யாழ் முஸ்லிம்களுக்கு சூ வாங்கிகொடுத்து சூ போலீஸ் வாங்கி கொடுக்காத உங்கள் தலைமை எமக்கு தேவை இல்லை எனவே நீங்கள் கிழக்கு முஸ்லிம் களின் நலனை மட்டும் பாருங்கள் .முடி வெடுத்து விட்டு மசூரா செய்யாமல் அரசை ஆதரிக்கும் முடிவை அறிவியுங்கள் தமிழ் கூட்டமைப்பு பிரிவினை வாதிகள் ,ஐ.தே.க வயகெட்டுபோன கட்சி,தனித்து போட்டிஇட்டால் பிரயோசனம் இல்லை,எனவே கையெய்தூக்கி சரண் அடையாமல் ,சல்யூட் அடித்து சரண் அடைய பார்க்கிறீர்கள் பாவம் கிழக்கு முஸ்லிம்கள்

    ReplyDelete

Powered by Blogger.