Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் நிபந்தனைகள் அரசாங்கத்திடம் கையளிப்பு..!

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அடங்கிய ஆவணத்தை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திடம் கையளித்துள்ளார்.

இதனை முஸ்லிம் காங்கிரஸின் உயர் வட்டாரம் யாழ் முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தியது.

இந்த ஆவணத்தை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் மாத்திரமே தமது கட்சி அரசாங்கத்துடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடும் வாய்ப்பு ஏற்படுமென அந்த வட்டாரம் தெரிவித்தது.

இருந்தபோதும் முஸ்லிம் காங்கிரஸின் நிபந்தனைகளை ஏற்று அரசாங்கம் தம்முடன் உடன்பாட்டில்  கைச்சாத்திடும் வாய்பு இல்லையனெவும், சிங்கள கடும்போக்கு சக்திகளின் அழுத்தத்திற்கு முகம்கொடுத்துள்ள  அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் வாய்ப்பு குறைவு எனவும் அந்த உயர் வட்டாரம் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு மேலும் தெரிவித்தது.

அதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுமாயின் எதிர்வரும் நாட்களில் கிழக்கு மாகாண சபைக்கான வேட்புமனுவை தாக்கல் செய்யுமெனவும் அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.

No comments

Powered by Blogger.