Header Ads



மஹிந்த - ஹக்கீம் சந்திப்பு..!



கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று புதன்கிழமை அல்லது நாளை வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் முக்கிய பேச்சுக்களில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்களிலிருந்து யாழ் முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

அரசாங்கத்துடன் இணைந்துப்போட்டியிடுதெனில், அரசாங்கத்திடம் இருந்து உத்தரவாதங்கள் பெற்றுக்கொள்ளவேண்டுமென முஸ்லவிம் காங்கிரஸின் உயர்பீடம் வலியுறுத்தியுள்ள நிலையிலும், இதற்காக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் பேச்சு நடத்தவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்தே மஹிந்த - ஹக்கீம் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது சேப்படும் வியங்களையடுத்தே முஸ்லிம் காங்கிரஸின்  அரசியல் உயர்பீடக்கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தீர்மானங்களi மேற்கொள்ளுமென நம்பப்படுகிறது.

 

No comments

Powered by Blogger.