Header Ads



'இஸ்ரேலின் உதவி' இலங்கையை உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தும்

இலங்கைக்கு ஆதரவு வழங்க இஸ்ரேல் முன்வந்ததன் மூலம் இலங்கை உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபையின் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள குற்றங்களை அமெரிக்காவை தவிர ஏனைய உலக நாடுகள் நன்கு அறிந்துள்ளன எனவும் ரஹ்மான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கை -பாலஸ்தீன ஒத்துழைப்பு குழுவின் நிறுவனர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என்பதையும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் ஒன்றில் ஜனாதிபதியின் பாரியார் கலந்துகொண்டார். இதற்கு மறுநாள் இஸ்ரேல் தூதுவர் ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக கூறினார்.

இலங்கை விடயங்கள் தொடர்பில் இஸ்ரேலின் தலையீடுகள் அதிகரித்து வருவதால், பலகாலமாக இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வரும் பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லீம் நாடுகள் எவ்வாறு இலங்கைக்கு ஆதரவு வழங்கும் எனவும்  முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.