Header Ads



பாராளுமன்றத்தில் இப்படியும் ஒரு ஒழுங்குப் பிரச்சினை

எதிக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தமை தொடர்பில் அரச தரப்பு எம்.பி.யான அஸ்வர் பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுத்தியபோது சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அதனை நிராகரித்தார்.

பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது.இதையடுத்து வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெற்றன. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது கட்சி பெண் எம்.பி.களான தலதா அத்துக்கோரள,ரோசி சேனாநாயக்க ஆகியோருடன் எழுந்துநின்று ஏதோ மிகத் தீவிரமாக கலந்துரையாடிக்கொண்டிருந்தார்.

இதனை சிறிது நேரம் அவதானித்த அரசதரப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அஸ்வர் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பினார்.அஸ்வர் தனது ஒழுங்குப்பிரச்சினையில் ரணில் விக்கிரமசிங்க சபைக்குள் மகளிர் மகாநாடு நடத்துகிறாரா எனக்கேட்டார். அஸ்வர் எழுப்பியது ஒழுங்கு பிரச்சினையில்லையென சபாநாயகர் சமல்ராஜபக்ஷ நிராகரித்து விட்டார்.அஸ்வர் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பியதை கவனிக்காமல் ரணிலும் பெண் உறுப்பினர்களும் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க அஸ்வர் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பியது தொடர்பில் ரணிலுக்கு தெரியப்படுத்தினார். இதனையடுத்து அஸ்வரைப்பார்த்து ரணில் ஏதோ கூறிவிட்டு வெளியேறிச் சென்றார்.

No comments

Powered by Blogger.