இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்களை அமைப்பதற்கு இலங்கை அனுமதிக்கக் கூடாது - உதுமாலெப்பை Mp
இலங்கையில் சுற்றுலாத்துறை பிரதேசங்களில் இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்கள் அமைக்கப்படுவதால் சுற்றுலாத்துறை வருமானங்களில் வீழ்ச்சி ஏற்படுவதுடன் அமைதியான சுற்றுலாத்துறை பிரதேசங்களில் பொதுமக்கள் அச்சம் அடையும் நிலைமையும் ஏற்பட்டு வருகின்றன. எனவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு இனிமேல் சுற்றுலாத்துறை அமைச்சு அனுமதி வழங்கக் கூடாது.
அம்பாறை மாவட்டத்தில் அருகம்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனத்தை அகற்றி சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யக்கூடிய நடவடிக்கைகளில் சுற்றுலாத்துறை அமைச்சு ஈடுபட வேண்டும் எனவும் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் தான் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
Post a Comment