Header Ads



பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்த அப்துல் வாசித்


பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக மொஹமட் சரிபு அப்துல் வாசித்,   சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியலின் ஊடாக பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம்  பதவிவிலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு எம்.எஸ் அப்துல் வாசித் அவ தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதாக கடந்த ஜூலை 3 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு அமைய பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

No comments

Powered by Blogger.