காசாவில் ஒரே நேரத்தில் 5 இஸ்ரேலிய இராணுவத்தினர் பலி, 14 பேர் காயம்
வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் ஹனவுனில் நடந்த போரில் 5 தமது 5 இராணுவத்தினர் உயிழந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நெட்சா யெஹுதா பட்டாலியனைச் சேர்ந்த ஒரு படை, ஒரு பிரதான வீதியைக் கடக்கும் போது குண்டு வெடிப்பில சிக்கியுள்ளது.
இதில் காயமடைந்தவர்களை வெளியேற்றும் முயற்சியின் போது, படை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 14 இஸ்ரேலிய இராணுவத்தினர் காயமடைந்தனர், இதில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர் எனவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Post a Comment