Header Ads



இப்படியும் ஒரு மாப்பிள்ளை


நோ விருந்து. நோ பூமாலை. நோ ஜாஹிலிய்யத் நிறைந்த சடங்கு சம்பிரதாயங்கள் என்பதில் மணமகன் உறுதியாக மலை போல் நின்றார். 


நேற்று 07-07-2025 ஆறு பேர் மட்டும் கலந்து கொண்ட எளிமையான நிகழ்வில் மணம் முடித்துக் கொண்டார். பெயர், அப்துல் ஹாதி. ஊர், சாந்த்பட்டி, உத்திரப் பிரதேசம். நிகாஹ் குத்பா ஓதி மணம் முடித்து வைத்தவர் மௌலானா உமர் அஸ்லம் இஸ்லாஹி.


ஒரு ஆண்டுக்கு முன்பு வரதட்சிணையாக எதுவுமே வாங்கிக் கொள்ள மாட்டேன் என உறுதியாக நின்றதால், பெண் வீட்டார் திருமணத்துக்கு சில நாள்கள் முன்பு உறவை துண்டித்துவிட்டார்கள். 


இப்போது தமக்கேற்ற கொள்கைப் பிடிப்புள்ள இடத்தில் மணம் முடித்திருக்கின்றார், இந்த வித்தியாசமான மணமகன்.


அல்லாஹ் இவருடைய மணவாழ்வை செழிப்பாக்குவானாக. ஆமீன்.


Azeez Luthfullah

No comments

Powered by Blogger.