Header Ads



நீண்டகால வாசகரிடமிருந்து, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வந்த Email


By: M.I.Y. Suhood


Jaffna Muslim, On-line Newspaper மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு சிறப்புமிக்க பத்திரிகை என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை நடுநிலையில் நின்று தரமான செய்திகளை சூடாகத் தரும் பத்திரிகையென்றும் சொல்லலாம். இதன் நிர்வாகிகள் எப்படித்தான் இப்பத்திரிகை சிறப்புற இயங்குவதற்கு முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டாலும், இப்பத்திரிகையின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் வாசகர்கள்தான் காரணமான விளங்குகின்றனர். இந்தப் பத்திரிகையினை எவரும் பணம் கொடுத்து வாங்குவதில்லை. இந்தப் பததிரிகைக்கு அதன் வாசகர்கள்தான் செய்தி நிருபர்கள். அழகு அழகான விடயங்கள் வருகின்றன. எழுதுபவர்களும் மிகவும் யோசித்து தரமான ஆதாரங்களுடன் விடயங்களைப் பகிர்கின்றனர். இது மிகவும் மகிழ்வுக்குரியது. 

ஆயினும் ஒன்றை இந்த விடத்தில் குறிப்பிட்டாக வேண்டியது இதன் நீண்டகால வாசகன் என்ற அடிப்படையில் எனது கடமையாகும். Jaffna Muslim இப்போது சகல தரப்பினராலும்; மிக முக்கியமாக மாணவரகள், கல்வித் துறையுடன் சம்பந்தப்பட்டவரகள், அரசியலுடன் சம்பந்தப்பட்டவரகள் என்ற அடிப்படையில் சுவைத்து மகிழ்கின்றனர். எங்களுடைய ஆக்கங்கள் குறிப்புகள் என்பன தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்படும்போது அதன் மொழியமைப்பு மிகவும் கவனமாகப் பேணப்படல் வேண்டும். இவ்வாறு எழுதப்படும்போது மிக முக்கியமாக மாணவரகளுக்கு மிகப் பிரயோசனமானதாக இருக்கும். பத்திரிகைகளுக்கு கவர்ச்சியை அளிப்பது அதனுடைய இலக்கணம்சார் மொழிநடைதான். இத்தகைய On-line பத்திரிகைகளில் வரும் விடயங்களைத் திருத்துவதற்கும், விடயங்களை ஓழுங்கு படுத்துவதற்கும் அலுவலர்கள் அதிகம் இருக்கமாட்டார்கள். சில சந்தர்ப்பங்களில் வரும் விடயதானங்களை அப்படியே பிரசுரிக்க வேண்டிய தேவையும்  இருக்கும். எவரையும் கண்மூடித்தனமாக கெட்ட வாரத்தைகளைப் பயன்படுத்தி எழுதுவதும் தேவையற்ற, உண்மையற்ற கருத்துக்களை தெரிவிப்பதும் தவிர்க்கப்படல் வேண்டும். மாணவரகளுக்குப் பயன்தரக்கூடிய விடயங்களை உட்புகுத்தி விடயங்களை எழுதுவது மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்

இந்தப் பத்திரிகையின் பெயர்தான் முஸ்லிம் என்று முடிகிறதே தவிர இந்தப்பததிரிகை முஸ்லிம் இனத்திற்கு மாததிரம் உரியதல்ல. உதாரணமாக முஸ்லிம்களைப்பற்றி தரக்குறைவாக சில விடயங்கள் வருகின்றன. அவையும் எவ்வித திருத்தங்களும் இன்றி பிரசுரிக்கப்படுகின்றன. எல்லா வாசகர்களுக்கும் அவரகளது பொதுவான கருத்துக்களையும் குறிப்புகளையும் எழுதுவதற்கு சந்தர்ப்பஙகள் வழங்கபபடுகின்றன. அவற்றை வாசகர்களாகிய நாங்கள் துஷ்பிரயோகம் செய்யாமல் இருந்தால் போதுமானதாகும். அரசையும் தனிப்பட்டவரகளையும் தரக்குறைவாக எழுதுவது தவிர்க்கப்படல் வேண்டும். ஆயினும் இங்கு பிரசுரிக்கப்படும் சில விடயங்கள் சம்பந்தமாக இதழின் ஆசிரியர் தேவைப்படின் எங்களால் அனுப்பப்படும் கருத்துக்களையும் உள்ளடக்கி தமது கருத்துக்களையும் தெரிவிப்பார்.

பத்திரிகைத் தர்மம் என்று ஒன்று இருக்கினறது. இந்தப் பத்திரிகைக்கு விடயதானம் வழங்குபவரகள் தங்களை மனோ கணேஷன் என்றோ அல்லது றவூப் ஹக்கீம், சம்பந்தர், Sumanthiran மற்றும் அலி சப்ரி என்றோ நினைத்துக்கொண்டு எழுதிக் கொள்வதனைத் தவிர்த்துக் கொள்வது மிக மேலானதாகும். Jaffna Muslim உலக மக்கள் அனைவராலும் தமிழ் மொழியில் படிக்கப்படுகின்றன. எனவே இப் பத்திரிகையின் மாண்பினைக் காப்பாற்ற வேண்டியது வாசகர்களாகிய எங்கள் அனைவர்மீதும் சுமத்தப்பட்டுள்ள கூடடுப் பொறுப்பாகும்.

நீண்ட கால வாசகன் என்ற அடிப்படையில் இதனை எழுத வேண்டியது எனது கடமையாகும். 

2 comments:

Powered by Blogger.