Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை, நிறுத்துங்கள் என வாதாடிய மங்கள - மறுத்தார் ராஜித்த

ஜனாதிபதி தேர்தலுக்காக உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல் இணக்கபாடின்றி நிறைவு பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் வட்டார தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச பெயரிடப்பட வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும், ஐக்கிய தேசிய முன்னணியை அங்கத்துவப்படுத்தும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட தரப்பினர் அதற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளரரை தெரிவு செய்வது தொடர்பில் முதலில் ஐக்கிய தேசிய கட்சிகளுக்குள் இணக்கப்பாடு ஒன்றை எட்டுமாறும் பின்னர் அது தொடர்பான முடிவை ஐக்கிய தேசிய முன்னணிக்கு அறிவிக்குமாறு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட தரப்பினர் கோரியுள்ளனர்.

அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் கொழும்பிலுள்ள இல்லத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் நிறைவுற்றதன் பின்னர் அதில் கலந்துக்கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடகங்களுக்கு எந்தவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

No comments

Powered by Blogger.